Categories

Saturday 11 May 2013

ச(க்தி)த்திய சோதனை

இந்த பதிவை எழுதலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்துடன் இருந்தபோது, சமீபத்தில் கரப்பான்ப்பூச்சி கொன்னதையே ஒரு பதிவாய் படிச்ச ஞாபகம் வர.. அதையே எழுதும்போது இதை எழுதக்கூடாதா? என எழுத ஆரம்பித்துவிட்டேன்.

டிஸ்கி: மொக்கையும் மொக்கை சார்ந்த இடமும் இந்த பதிவு

ஒரு மாலை வேளையில் நான் எதிர்கொண்ட சோ(சா)தனைகள் தாங்க இந்த பதிவு. சனிக்கிழமை மாலைக்கும் எனக்கும் என்ன வாய்க்கா தகராறுன்னே தெரியலைங்க.. பாருங்க போன வாரம் உக்கிரமா கனலுக்கு ஒரு டிவிட்லாங்கர் போட்டேன்.அவ்வ் :-)) இந்த வாரம் இப்படி சில சின்ன சின்ன சத்திய சோதனைகள்.

சனிக்கிழமை மதியம் வரை மல்லாக்க தூங்கிவிட்டு எழுந்ததும், மச்சான் ஸ்கைப்ல மொக்க போட கூப்பிட, பேச ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல கால் கட்டாக... என்னடான்னு போன்ல கேட்டா... கடமை தவறாத நம்ம ஈபிகாரங்க சனிக்கிழமை 12-2 அறிவிக்கப்பட்ட  பவர் கட் பண்ணிட்டாங்க சொல்ல.. சரி குளிச்சு,ரசதுக்கு சிக்கன் லெக் பீஸ் சைட் டிஷா ஹோட்டலில் தின்னிட்டு, 2 மணி நேரம் கழிச்சு திரும்ப ஸ்கைப்ல பேச ஆரம்பிச்சா, 5 நிமிஷத்துல அறிவிக்கபடாத பவர்கட் பண்ணிட்டாங்க. என்னடா இது சத்திய சோதனைன்னு யோசிச்சிட்டு இருந்தேன். எலிமெண்டரி ஸ்கூல்ன்னா ஈ ஃபார் எலிபேண்ட்ன்னு சொல்லி தர்றதும், ஈபின்னா சொல்லாமலே ஏமாத்தி கரண்ட் புடுங்குறதும் சகஜம் தானான்னு மனசை தேத்திக்கிட்டேன். அப்ப தான் உடனே எல்லாரும் பாராட்டுற சூது கவ்வும் படம் உடனே போனா என்னன்னு தோனுச்சு... 
(இந்த சம்பவம் சம்பவம்ன்னு சொல்றோம்ல அது நடக்குறது மலேஷியாவுல..)
அந்த முடிவை எடுத்தப்பவே சூது என்னை கவ்விடிச்சு....ஆபரேஷன் சூது கவ்வும் ஆரம்பிச்சுருச்சு. தூரத்துல ஏதோ தியேட்டர்ல ஓடுதுன்னு நண்பர் சொல்ல அதை கூகிள் பண்ணி பாத்தேன். படமோ 6 மணிக்கு... நான் 5:15 மணிக்கு பாத்தா தியேட்டர் போக 1 மணி நேரம் 28 நிமிஷம் ஆகும்ன்னு கூகிள் சொல்லிச்சு. என்னடா இது சத்திய சோதனைன்னு கொஞ்சம் முழிச்சேன். அப்போ தான் "சென்னையில் ஒரு நாள்" படத்தில் வரும் சரத்குமார் போன்ற ட்ராஃபிக் கமிஷ்னரும், சேரன் போன்ற ஒரு டிரைவரும் எனக்கு இல்லையே வருத்தப்பட்டேன். கூகிள் சொல்றதை தேமேன்னு கேட்டுட்டு போக நாம என்ன வெள்ளைக்காரனா? தமிழன் ஆச்சே.. :-) மேப்ல கை வச்சா 4 விரல் அளவு கூட இல்லாத தூரத்துக்கு கூகிள் இமய மலை போற மாதிரி டைம் சொல்லுதேன்னு, நானே ஒரு மோனோ ரயில் ரூட்டை கண்டுபிடிச்சு அங்கிருந்து குறுக்கே கொஞ்சம் அதிகம் நடக்குற மாதிரி பிளான் போட்டு 5:25 கிளம்பினேன். தமிழ் பட கிளைமேக்ஸ் போல ரயில்வே ஸ்டேஷன்  ஓடி போய் சேரவும், ரயில் சரியா கிளம்பிருச்சு. ஆமாங்க மொக்க வாங்கிட்டேன். என்னடா இது சத்திய சோதனைன்னு அடுத்த ரயிலில் ஏறி, தேவையான ஸ்டேஷன் போய் இறங்கிட்டேன். இன்னும் 15 நிமிஷம் தான் இருக்கு படம் போட. ஸ்டேஷன் விட்டு இறங்கி, டீ கடைல இருந்த மங்களகரமான மஞ்ச கலர் மலாய் பொண்ணுகிட்டே செம்மொழியாம் தமிழில் கேட்டா புரியாதேன்னு ஆங்கிலத்துல கேக்க,1930ல கண்டுபிடிச்ச மலாய் மொழில மிக தெளிவாய் பதில் சொல்லுச்சு.சத்திய சோதனை. நான் 'ஆ... எ... ஓ..  ஓஹோ..Yeah' என எல்லாம் கலந்து பேசினேன். நானும் எவ்வளவு நேரம் தான் புரியுற மாதிரியே நடிக்குறது...கடைசில நம்ம வடிவேலு இங்கிலீஷ்ல "ஜலான் இப்போ(Jalan Ipoh)...கோ.. ஹவ்?"ன்னு கேக்க.. (நம்ம ஊர்க்காரய்ங்கன்னா "இப்போ" மட்டுமில்ல எப்பவுமே நடந்து தான் போகணும்ன்னு கலாய்ச்சிருப்பாய்ங்க.. )அதுக்கு அந்த பொண்ணு 'கனலு'ன்னு சொல்ல... என்ன்‌ன்..னாது... நீயும் கனலோட ஃபேக் ஐடியா ன்னு அப்படியே  ஷாக் ஆயிட்டேன். அதுக்குள்ள என் மூளை என்னை ஜட்ஜ் கைல இருக்குற சுத்தியலை வாங்கி "டொங்குனு" மண்டைல அடிச்சு அது "டனல்"டா(tunnel)ன்னு சொல்லுச்சு. அப்புறம் அந்த டனல் வழியா போகும்போது திரும்ப ஒரு தமிழன் கிட்ட வழி கேட்க, அவரு பௌலிங்கா? பீல்டிங்கா? ரேஞ்சுல... நீ கேக்குற சென்னைக்கு வழி தெரில மெட்ராஸ்க்கு இது தான் வழின்னு தியேட்டர்க்கு வழி அழகா சொன்னார்.ஒரு தமிழனாய் எங்க முதல்ல போடுற நியூஸ் ரீல் பாக்க முடியாம போயிடுமோன்னு வேகுவேகுன்னு நடந்தேன். இன்னும் 5 நிமிஷத்துல தியேட்டர் போயிடுவேனான்னு பரபரப்பா நான் நடந்து போயிட்டு இருக்கும்போது, நான் ரொம்ப நாளா தேடிட்டு இருக்குற தலப்பாகட்டி பிரியாணி கடை அங்க இருப்பதை பார்த்து வாயை பிளந்துட்டு, டின்னர்க்கு பிரியாணியை கற்பனை செய்து கொண்டேன்.  அடுத்த அதிர்ச்சியா, நான் தேடிட்டு தமிழ் புத்தகம் விக்குற கடை ஒன்னு அப்ப தான் கண்ணுல பட்டுச்சு. என்னடா இது சத்திய சோதனைன்னு திரும்ப வரும்போது புத்தகம் வாங்க முடிவு பண்ணிக்கிட்டேன். ஒரு வழியா தியேட்டர் கண்டுபிடிச்சுட்டேன். அத்தோட கூகிள் மேப்ஸ் மேல் இருந்த மரியாதை அற்றுப் போனது.அவ்வ் :-)   தியேட்டர் உள்ள போனா.. நாகராஜசோழன் MLA, எதிர்நீச்சல் போஸ்டர் மட்டும் தான் இருக்கு. என்னடா இது சத்திய சோதனைன்னு கவுன்டர்ல போய் கேட்டா... ஏதோ பிளாக்ல டிக்கெட் விக்குற மாதிரி சூது கவ்வும் டிக்கெட்டை சத்தம் இல்லாம வித்துட்டு இருக்காங்க. அப்பாடான்னு டிக்கெட் வாங்கிட்டு போய் படம் பாத்தேன். இவ்வளவு நல்ல காமெடி படத்தை தனியா சிரிச்சு பாத்தது அடுத்த சத்திய சோதனையா போச்சு... 

நான் சமீபகாலமா சுஜாதா கதைல வர்ற ஜீனோ மாதிரி புத்தகமா படிச்சிட்டே இருக்கதால, படம் முடிஞ்சதும் நேரா புத்தகக் கடைக்கு தான் போனேன். அது என்னமோ தெரில, இந்த நாட்டுல பெரிய பெரிய புத்தக கடைல போய் தமிழ் நாவல் கேட்டா கேவலமா பாத்துட்டு இல்லைன்னு சொல்றாங்க, ஆனா தம் விக்குற பொட்டி கடைல அங்க அங்க தமிழ் நாவல்கள் கிடைக்குது. அதிகமா ரமணி சந்திரன் நாவல் தான் இருந்துச்சு. நம்ம ட்விட்டர்ல ரமணி புத்தகம் எல்லாம் பொண்ணுங்க தான் படிப்பாங்க சொன்னாங்க. அப்படினா, இந்த ஊர்ல தம் விக்குற பொட்டி கடைக்கு பொண்ணுங்க தான் அதிகம் வருவாங்க போலன்னு நினைச்சுக்கிட்டேன். அவ்வ் :-) இதுல சத்திய சோதனை என்னனா... காந்தியோட "சத்திய சோதனை" ஒரு ஓரத்துல இருந்துச்சு. 600 பக்கம் இருக்குற அந்த புத்தகம், 100 பக்கம் இருக்குற ரமணி சந்திரன் புத்தகத்தை விட விலை ரொம்ப குறைவு. சத்திய சோதனை தான? சரின்னு 2 புத்தகம் 29 வெள்ளிக்கு வாங்கிட்டு, பர்சை திறந்தா சரியா 30 வெள்ளி தான் இருக்கு. சரின்னு காசை கொடுத்துட்டு, ஏ.டி.எம் மெசினை தேடினா பக்கத்துல எதுவும் இல்ல. சத்திய சோதனைன்னு தலப்பாக்கட்டி பிரியாணி ஆசையை மூட்டை கட்டி வச்சிட்டு, பசியோட ரயிலுக்கு போனா... சரியா ரயிலை விட்டு இறங்குனதும் அதோட மின் அட்டைல இருந்த காசும் காலி. வீட்டுக்கு பக்கத்துலையும் ஏ.டி.எம் எதுவும் இல்ல. சத்திய சோதனைன்னு, வீட்டுக்கு வந்து  தோசை ஊத்தி சாப்பிடலாம்னா.. தோசை மாவு காலி... அடுத்த சோதனை. நல்ல வேலை எப்பவோ வாங்கி வச்ச மேகி பாக்கெட் உயிரை காப்பாத்திடிச்சு... 


இப்ப இருக்குறதுலேயே பெரிய சத்திய சோதனை என்னன்னா... நான் எல்லாம் காந்தியோட சத்திய சோதனை படிக்க போறேங்க்றது தான்... 

என்னங்க இந்த பதிவை படிச்ச உங்களுக்கும் சொல்லத் தோனுதா... சத்திய சோதனை... அவ்வ் :-)