Categories

Thursday 5 December 2013

ஆரம்பம் – திரை விமர்சனம்

சரி. நாமளும் திரை விமர்சனம் எழுத ஆரம்பிக்கலாம்ன்னு முடிவு எடுத்து, எந்த படத்துக்கு எழுதலாம்ன்னு யோசிச்சப்ப, படம் முழுக்க ஆரம்பம்ன்னு அடிக்கடி சொல்லுற ஆரம்பம் படத்துக்கே திரை விமர்சனம் எழுத ஆரம்பிக்கலாம்ன்னு தோணுச்சு...


Wednesday 28 August 2013

மூளையின் மூளை - சிறுகதை

(இது நடக்கும் ஆண்டு கி.பி 2035 என மனதில் கொள்க)

ஒரே சமயத்தில் தோட்டத்திலிருந்து கட்டவிழ்த்து விடப்பட்ட ஆயிரம் பட்டாம்பூச்சியின் சிறக்கடிப்பை தன் இதயத்தில் உணர்ந்தபடி, தன் அறையில் பரபரப்பு மிகுந்த மூளையுடன், படபடக்கும் பார்வை மூக்குக் கண்ணாடி வழி ஊடுருவ இயங்கிக் கொண்டிருந்த அரவிந்தன், தன் மனைவி ராகினியின் பத்தாவது அழைப்பு ஒலி கேட்ட பின் அதற்கு செவி மடுக்க முடிவு செய்தார். அவருடைய வேலையும் ஓரளவு முடிந்து விட்டதால் ஒரு வழியாக அறையை விட்டு வெளியேறினார்.

Tuesday 30 July 2013

தாலாட்டு...

தாலாட்டு என்ற இலக்கிய வகை நம் கலாச்சாரத்துடன் இணைந்த ஒன்று... தால் என்றால் நாக்கு... நாக்கை ஆட்டிப் பாடுவதால் இது தால்+ஆட்டு= தாலாட்டு என்று ஆனது என்று ஆறாம் வகுப்பு செய்யுள் பகுதியில் படித்த ஞாபகம்.


Monday 29 July 2013

பத்து வருடங்கள்

பி‌ஜி‌எம்ல எதுக்கும் எஸ்.ஏ.ராஜ்குமாரோட 'லலலா... லலலா' போட்டுக்கோங்க தேவைப்படும்.

பத்து வருடங்கள் என்பது ஒரு தனி மனிதனின் வாழ்வில் ஒரு குறிப்பிடப்படும்படியான பெரும் பகுதி.

Sunday 21 July 2013

கவிதைக் கிறுக்கல்கள் பகுதி-2

1) மழை வரும்போது கப்பலாய்,
கலை வரும்போது ஓவியமாய்,
காதல் வரும்போது கவிதையாய், கோவம் வரும்போது குப்பையாய்,
காகிதம்...

Monday 8 July 2013

நான் ரசித்த எனது கீச்சுக்கள் பகுதி - 9

1) எனது எழுத்தை வைத்து என்னை கணித்தால்,
என் கற்பனை சக்தியின் மீது உமக்கு அவநம்பிக்கை எனக் கொள்க... 

Tuesday 2 July 2013

மனித இனம், பல கேள்விகள்...

வெடித்துச் சிதறியதாய் சொல்லப்படும் இந்த அண்ட வெளியில் இருக்கும் பல விண்மீன் திரள்களின் ஊடே பால் வீதி திரளின் ஏதோ ஒரு மூலையில், சூரிய குடும்பத்தில், சூரியனை அச்சாக கொண்டு ஏதோ ஒரு ஈர்ப்பு விசை காரணமாக செக்கு இழுக்கும் மாடு போல, சுற்றி வரும் 8 கோள்கள் மத்தியில் ஒரு கோளான பூமியில் உள்ள பல கோடி உயிர்களுக்கு இடையில் கண்டம்,நாடு,மாநிலம்,இனம்,மொழி,மதம்,ஜாதி இன்னும் பல கூறுகளாய் பிரிக்கப்பட்ட ஒற்றை மனிதனின் ஆதி தேடல் என்னவாக இருந்திருக்கும்??

Saturday 11 May 2013

ச(க்தி)த்திய சோதனை

இந்த பதிவை எழுதலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்துடன் இருந்தபோது, சமீபத்தில் கரப்பான்ப்பூச்சி கொன்னதையே ஒரு பதிவாய் படிச்ச ஞாபகம் வர.. அதையே எழுதும்போது இதை எழுதக்கூடாதா? என எழுத ஆரம்பித்துவிட்டேன்.

டிஸ்கி: மொக்கையும் மொக்கை சார்ந்த இடமும் இந்த பதிவு

ஒரு மாலை வேளையில் நான் எதிர்கொண்ட சோ(சா)தனைகள் தாங்க இந்த பதிவு. சனிக்கிழமை மாலைக்கும் எனக்கும் என்ன வாய்க்கா தகராறுன்னே தெரியலைங்க.. பாருங்க போன வாரம் உக்கிரமா கனலுக்கு ஒரு டிவிட்லாங்கர் போட்டேன்.அவ்வ் :-)) இந்த வாரம் இப்படி சில சின்ன சின்ன சத்திய சோதனைகள்.

சனிக்கிழமை மதியம் வரை மல்லாக்க தூங்கிவிட்டு எழுந்ததும், மச்சான் ஸ்கைப்ல மொக்க போட கூப்பிட, பேச ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல கால் கட்டாக... என்னடான்னு போன்ல கேட்டா... கடமை தவறாத நம்ம ஈபிகாரங்க சனிக்கிழமை 12-2 அறிவிக்கப்பட்ட  பவர் கட் பண்ணிட்டாங்க சொல்ல.. சரி குளிச்சு,ரசதுக்கு சிக்கன் லெக் பீஸ் சைட் டிஷா ஹோட்டலில் தின்னிட்டு, 2 மணி நேரம் கழிச்சு திரும்ப ஸ்கைப்ல பேச ஆரம்பிச்சா, 5 நிமிஷத்துல அறிவிக்கபடாத பவர்கட் பண்ணிட்டாங்க. என்னடா இது சத்திய சோதனைன்னு யோசிச்சிட்டு இருந்தேன். எலிமெண்டரி ஸ்கூல்ன்னா ஈ ஃபார் எலிபேண்ட்ன்னு சொல்லி தர்றதும், ஈபின்னா சொல்லாமலே ஏமாத்தி கரண்ட் புடுங்குறதும் சகஜம் தானான்னு மனசை தேத்திக்கிட்டேன். அப்ப தான் உடனே எல்லாரும் பாராட்டுற சூது கவ்வும் படம் உடனே போனா என்னன்னு தோனுச்சு... 
(இந்த சம்பவம் சம்பவம்ன்னு சொல்றோம்ல அது நடக்குறது மலேஷியாவுல..)
அந்த முடிவை எடுத்தப்பவே சூது என்னை கவ்விடிச்சு....ஆபரேஷன் சூது கவ்வும் ஆரம்பிச்சுருச்சு. தூரத்துல ஏதோ தியேட்டர்ல ஓடுதுன்னு நண்பர் சொல்ல அதை கூகிள் பண்ணி பாத்தேன். படமோ 6 மணிக்கு... நான் 5:15 மணிக்கு பாத்தா தியேட்டர் போக 1 மணி நேரம் 28 நிமிஷம் ஆகும்ன்னு கூகிள் சொல்லிச்சு. என்னடா இது சத்திய சோதனைன்னு கொஞ்சம் முழிச்சேன். அப்போ தான் "சென்னையில் ஒரு நாள்" படத்தில் வரும் சரத்குமார் போன்ற ட்ராஃபிக் கமிஷ்னரும், சேரன் போன்ற ஒரு டிரைவரும் எனக்கு இல்லையே வருத்தப்பட்டேன். கூகிள் சொல்றதை தேமேன்னு கேட்டுட்டு போக நாம என்ன வெள்ளைக்காரனா? தமிழன் ஆச்சே.. :-) மேப்ல கை வச்சா 4 விரல் அளவு கூட இல்லாத தூரத்துக்கு கூகிள் இமய மலை போற மாதிரி டைம் சொல்லுதேன்னு, நானே ஒரு மோனோ ரயில் ரூட்டை கண்டுபிடிச்சு அங்கிருந்து குறுக்கே கொஞ்சம் அதிகம் நடக்குற மாதிரி பிளான் போட்டு 5:25 கிளம்பினேன். தமிழ் பட கிளைமேக்ஸ் போல ரயில்வே ஸ்டேஷன்  ஓடி போய் சேரவும், ரயில் சரியா கிளம்பிருச்சு. ஆமாங்க மொக்க வாங்கிட்டேன். என்னடா இது சத்திய சோதனைன்னு அடுத்த ரயிலில் ஏறி, தேவையான ஸ்டேஷன் போய் இறங்கிட்டேன். இன்னும் 15 நிமிஷம் தான் இருக்கு படம் போட. ஸ்டேஷன் விட்டு இறங்கி, டீ கடைல இருந்த மங்களகரமான மஞ்ச கலர் மலாய் பொண்ணுகிட்டே செம்மொழியாம் தமிழில் கேட்டா புரியாதேன்னு ஆங்கிலத்துல கேக்க,1930ல கண்டுபிடிச்ச மலாய் மொழில மிக தெளிவாய் பதில் சொல்லுச்சு.சத்திய சோதனை. நான் 'ஆ... எ... ஓ..  ஓஹோ..Yeah' என எல்லாம் கலந்து பேசினேன். நானும் எவ்வளவு நேரம் தான் புரியுற மாதிரியே நடிக்குறது...கடைசில நம்ம வடிவேலு இங்கிலீஷ்ல "ஜலான் இப்போ(Jalan Ipoh)...கோ.. ஹவ்?"ன்னு கேக்க.. (நம்ம ஊர்க்காரய்ங்கன்னா "இப்போ" மட்டுமில்ல எப்பவுமே நடந்து தான் போகணும்ன்னு கலாய்ச்சிருப்பாய்ங்க.. )அதுக்கு அந்த பொண்ணு 'கனலு'ன்னு சொல்ல... என்ன்‌ன்..னாது... நீயும் கனலோட ஃபேக் ஐடியா ன்னு அப்படியே  ஷாக் ஆயிட்டேன். அதுக்குள்ள என் மூளை என்னை ஜட்ஜ் கைல இருக்குற சுத்தியலை வாங்கி "டொங்குனு" மண்டைல அடிச்சு அது "டனல்"டா(tunnel)ன்னு சொல்லுச்சு. அப்புறம் அந்த டனல் வழியா போகும்போது திரும்ப ஒரு தமிழன் கிட்ட வழி கேட்க, அவரு பௌலிங்கா? பீல்டிங்கா? ரேஞ்சுல... நீ கேக்குற சென்னைக்கு வழி தெரில மெட்ராஸ்க்கு இது தான் வழின்னு தியேட்டர்க்கு வழி அழகா சொன்னார்.ஒரு தமிழனாய் எங்க முதல்ல போடுற நியூஸ் ரீல் பாக்க முடியாம போயிடுமோன்னு வேகுவேகுன்னு நடந்தேன். இன்னும் 5 நிமிஷத்துல தியேட்டர் போயிடுவேனான்னு பரபரப்பா நான் நடந்து போயிட்டு இருக்கும்போது, நான் ரொம்ப நாளா தேடிட்டு இருக்குற தலப்பாகட்டி பிரியாணி கடை அங்க இருப்பதை பார்த்து வாயை பிளந்துட்டு, டின்னர்க்கு பிரியாணியை கற்பனை செய்து கொண்டேன்.  அடுத்த அதிர்ச்சியா, நான் தேடிட்டு தமிழ் புத்தகம் விக்குற கடை ஒன்னு அப்ப தான் கண்ணுல பட்டுச்சு. என்னடா இது சத்திய சோதனைன்னு திரும்ப வரும்போது புத்தகம் வாங்க முடிவு பண்ணிக்கிட்டேன். ஒரு வழியா தியேட்டர் கண்டுபிடிச்சுட்டேன். அத்தோட கூகிள் மேப்ஸ் மேல் இருந்த மரியாதை அற்றுப் போனது.அவ்வ் :-)   தியேட்டர் உள்ள போனா.. நாகராஜசோழன் MLA, எதிர்நீச்சல் போஸ்டர் மட்டும் தான் இருக்கு. என்னடா இது சத்திய சோதனைன்னு கவுன்டர்ல போய் கேட்டா... ஏதோ பிளாக்ல டிக்கெட் விக்குற மாதிரி சூது கவ்வும் டிக்கெட்டை சத்தம் இல்லாம வித்துட்டு இருக்காங்க. அப்பாடான்னு டிக்கெட் வாங்கிட்டு போய் படம் பாத்தேன். இவ்வளவு நல்ல காமெடி படத்தை தனியா சிரிச்சு பாத்தது அடுத்த சத்திய சோதனையா போச்சு... 

நான் சமீபகாலமா சுஜாதா கதைல வர்ற ஜீனோ மாதிரி புத்தகமா படிச்சிட்டே இருக்கதால, படம் முடிஞ்சதும் நேரா புத்தகக் கடைக்கு தான் போனேன். அது என்னமோ தெரில, இந்த நாட்டுல பெரிய பெரிய புத்தக கடைல போய் தமிழ் நாவல் கேட்டா கேவலமா பாத்துட்டு இல்லைன்னு சொல்றாங்க, ஆனா தம் விக்குற பொட்டி கடைல அங்க அங்க தமிழ் நாவல்கள் கிடைக்குது. அதிகமா ரமணி சந்திரன் நாவல் தான் இருந்துச்சு. நம்ம ட்விட்டர்ல ரமணி புத்தகம் எல்லாம் பொண்ணுங்க தான் படிப்பாங்க சொன்னாங்க. அப்படினா, இந்த ஊர்ல தம் விக்குற பொட்டி கடைக்கு பொண்ணுங்க தான் அதிகம் வருவாங்க போலன்னு நினைச்சுக்கிட்டேன். அவ்வ் :-) இதுல சத்திய சோதனை என்னனா... காந்தியோட "சத்திய சோதனை" ஒரு ஓரத்துல இருந்துச்சு. 600 பக்கம் இருக்குற அந்த புத்தகம், 100 பக்கம் இருக்குற ரமணி சந்திரன் புத்தகத்தை விட விலை ரொம்ப குறைவு. சத்திய சோதனை தான? சரின்னு 2 புத்தகம் 29 வெள்ளிக்கு வாங்கிட்டு, பர்சை திறந்தா சரியா 30 வெள்ளி தான் இருக்கு. சரின்னு காசை கொடுத்துட்டு, ஏ.டி.எம் மெசினை தேடினா பக்கத்துல எதுவும் இல்ல. சத்திய சோதனைன்னு தலப்பாக்கட்டி பிரியாணி ஆசையை மூட்டை கட்டி வச்சிட்டு, பசியோட ரயிலுக்கு போனா... சரியா ரயிலை விட்டு இறங்குனதும் அதோட மின் அட்டைல இருந்த காசும் காலி. வீட்டுக்கு பக்கத்துலையும் ஏ.டி.எம் எதுவும் இல்ல. சத்திய சோதனைன்னு, வீட்டுக்கு வந்து  தோசை ஊத்தி சாப்பிடலாம்னா.. தோசை மாவு காலி... அடுத்த சோதனை. நல்ல வேலை எப்பவோ வாங்கி வச்ச மேகி பாக்கெட் உயிரை காப்பாத்திடிச்சு... 


இப்ப இருக்குறதுலேயே பெரிய சத்திய சோதனை என்னன்னா... நான் எல்லாம் காந்தியோட சத்திய சோதனை படிக்க போறேங்க்றது தான்... 

என்னங்க இந்த பதிவை படிச்ச உங்களுக்கும் சொல்லத் தோனுதா... சத்திய சோதனை... அவ்வ் :-)  

Thursday 18 April 2013

கவிதைக் கிறுக்கல்கள் பகுதி-1

1) வித்தார விரலழகி,
முத்தார மொழியழகி, கத்தால கையழகி, எகத்தாள பேச்சழகி, எக்காலமும் மகள் அழகி...

Sunday 7 April 2013

என் எழுதுகோல்

நாம் வாழும் வாழ்க்கையில் இயற்கை நமக்கு தந்த உடலோடு சேர்த்து சில செயற்கை கருவிகளும் நம் உடலோடு பிணைந்துவிடுகின்றன. அப்படி ஒரு கருவி தான் நம் எழுதுகோல்.  

Saturday 30 March 2013

காண்பாயா?

சில வருடங்களுக்கு முன்னால் நான் எழுதிய கவிதை திடீர் என பழைய பாசறையில் கிடைக்கவே, அதை ஒரு பதிவாய் போட இங்கு வந்துவிட்டேன். அபத்தமாக பட்டால் மன்னித்தருளுங்கள்... :-) 

Tuesday 26 March 2013

நான் ரசித்த எனது கீச்சுக்கள் பகுதி - 8

1) எல்லா பந்தங்கள் இருந்தும், தனியாய் இருக்கும் அனாதைகள்.. #மாடர்ன் பிரம்மச்சாரிகள்...


கணினி மற்றும் அலைப்பேசியில் தமிழில் எழுத கையேடு





நாமளும் தமிழ்ல எழுதலாம் அப்படின்னு முடிவு எடுத்தா முதல்ல எல்லாருக்கும் வர பிரச்சனையே.. "அண்ணே, இதுல எப்படிண்ணே நலந்தானா வாசிக்குறது" அப்படிங்கற கேள்வி தான்..

Wednesday 27 February 2013

பிரம்மச்சாரி

பிரம்மச்சாரி... இது ஒரு விசித்திரமானதொரு மக்கள் கூட்டம். இந்த பிரம்மச்சாரிகளை பற்றி பொதுவாக ஒரு பிம்பம் இருக்கிறது. நானும் பிரம்மச்சாரி தான்.

Sunday 24 February 2013

தமிழில் கீச்சுவது எப்படி?

அதாகப்பட்டது, சென்னை மாதிரி ஒரு நகரத்துல நீங்க போய் ஒருத்தர் கிட்ட "இந்த இடத்துக்கு எப்படிங்க போகணும்?" அப்படின்னு கேட்டா ஏதோ பட்டிகாட்டனை பாக்குற மாதிரி பாப்பாங்க.. "How to reach there?" அப்படினா தான் பார்வையே மாறும்.. ஆனா கீச்சுலகம் இதுக்கு தலைகீழ். இங்க தமிழ்ல பேசுனா தான் நல்ல மரியாதையும், பதிலும் கிடைக்கும்..

Wednesday 20 February 2013

கீச்சு காப்பக கையேடு


நானும் கொஞ்ச நாளா பாக்குறேன்... நம்ம ட்வீ ப்ஸ் எல்லாம் நெஞ்சம் மறப்பதில்லை பாட்டு பாட ரொம்ப ஆசைப்படுறாங்க.. என்னடா உளறுறேன்னு பாக்குறீங்களா... இல்ல தெளிவா தான் கிறுக்குறேன்...

Saturday 16 February 2013

பொறந்த நாள்

பொறந்த நாள்... இதுல என்ன விசேஷம்? எதுக்காக கொண்டாடுறோம்...

Monday 28 January 2013

பினாங்கில் தைப்பூசம்

பொதுவா பள்ளிக்கூடத்தில பயணக்கட்டுரை எழுதச் சொன்னாலே பத்து பேருக்கு பின்னால பம்முகிற பையன் தான் நானு... இப்ப ஏன்டா எழுதுறன்னு கேட்டா என்கிட்ட இப்ப பதில் இல்ல.. (படிக்குறது உங்க தலைவிதி :))

Tuesday 22 January 2013

வாசிப்பு ஒரு சுய ஆராய்ச்சி


மனித மூளைக்குள் ஒரு நொடிக்குள் மின்சாரத்தை விட வேகமாக பாயும் நினைவலைகளில் தோன்றிய வேதியியல் ஆராய்ச்சியின் முடிவா? கழிவா? என புரியாத குழப்பத்தில் இப்பதிவை உடனே எழுத ஆரம்பித்துவிட்டேன்.

Friday 11 January 2013

என் தோசை கீச்சுக்கள்

1) டீச்சர்: இரண்டு முறை வெட்கபட்டேன் என ஒரே வார்த்தையில் எப்படி கூறுவது? மாணவன்: “'தோ''சை'“


Sunday 6 January 2013

உங்களிடம் சில விளக்கங்கள்



சேற்றில் செந்தாமரைகளை தேடும்
சுருங்கிய கண்களுக்கு நாங்கள்
புலப்படாத பொருளாகி போவதில் புதிதில்லை