Categories

Saturday 4 July 2020

நினைவு நாடா - டேப் ரெக்கார்டு

நேத்து என் பொண்ணு இது என்னப்பா?ன்னு ஒரு கேசட் நாடாவை வெளிய உருவியபடி வந்து நின்னா...ரெனால்ட்ஸ் பேனா போல ஒல்லியான ஒரு பேனா வைத்து நாடாவை உள்ளே தள்ளச் சொல்லி கொடுத்தேன். நாடா உள்ளே போச்சு, ஆனா நினைவு போகல. நேரா பழைய டேப் ரெக்காட்டரை தேடிப் போனேன்.



90களின் முற்பாதில பாரின் போன ஒரு மாமா மூலமா, வீட்டுக்கு அந்த Akai டேப் ரெக்கார்டர் வந்துச்சு... அதுலயே ரேடியோ இருந்துச்சு...MW, SW & FM என மூனு விதமான ரேடியோ அலைவரிசைல பல ஸ்டேசன் கேக்கலாம்... MWல மதுரை வானொலியும், SWல எப்பவாவது கிரிக்கெட் கமென்டரி வரும்.

ஒரு ஸ்பீக்கர் மட்டுமே உள்ள டேப் ரெக்கார்டர் தான். வந்த புதுசுல, அதை பாக்கவே ரொம்ப குதூகலமா இருக்கும்.முதல் கொஞ்ச நாள் அப்பா கன்ட்ரோல்ல மட்டும் தான் இருக்கும்.அப்பா வெளிய போன டைம்ல தான் டேப் ரெக்கார்டரை தொட முடியும்... அதுவும் ரேடியோ மட்டும்...
அப்பப்ப அந்த Eject பட்டனைத் தட்டி, அந்த கேசட் போடுற கதவு மெதுவா திறக்குறதை வேடிக்கைப் பாப்பேன்... அடுத்த ஒரு வருசத்துக்கு வீட்ல எல்லார் கண்ணும் அந்த டேப்ரெக்கார்டர் மேல தான்... எந்த ஊர் கோவிலுக்கு போனாலும், அப்பாவும், அம்மாவும் சாமி படம் வாங்குறதுக்கு பதிலா கேசட் வாங்கினாங்க.
கம்பேனி கேசட்டா கிட்டதட்ட 15-20 வாங்கி கந்த சஷ்டி கவசம், சுப்ரபாதம், அனுமான், ஐயப்பன், உன்னிகிருஷ்ணன் சிரிச்ச மாதிரி இருக்குற அருணாச்சலனே ஈசனே கேசட் எல்லாம் வாங்கின பிறகு தான் லோக்கல் கேசட் கடைக்கு வந்தாங்க. அங்கயும் மாரியம்மன் கேசட் எல்லாம் பதிஞ்சாங்க...
கடைசில கிட்டதட்ட ஒரு வருசம் கழிச்சு, பட்ஜெட்ல எனக்கு ஒரு சினமா கேசட் ஒதுக்கினாங்க... நானும், அக்காவும் தேடித் தேடி அந்த டைம்ல வந்த துள்ளல் இசை பாட்டா ஒரு லிஸ்ட் போட்டுவிட்டோம். ஒரு 60mm கேசட்க்கு A சைட் B சைட்க்கு சேத்து எழுதி அனுப்பினோம்... கேசட் வர 2 நாள் ஆகும்னார் அப்பா.
இரண்டு நாளும் ஆர்வம் பொறுக்கல. கேசட் வந்தப்போ கொஞ்சம் ஏமாற்றம்...B side ஓரளவு பிடிச்ச பாட்டு வந்தாலும், A side சில சொல்லாத பாட்டு பதிஞ்சுட்டாங்க... ஏன்னு அப்பாகிட்ட கேட்டா ‘கடைல இருக்குறது தான்டா வரும்’ன்னு, சிம்பிளா அப்பா முடிச்சுட்டார்.
ஆனா அந்த கேசட் மனசுக்கு நெருக்கமானது...பச்சையும் வெள்ளையுமா ஸ்டிக்கர் ஒட்டுன கேசட்... அதுல பச்ச கலர் பேனா வச்சு மணிமணியா பாட்டு வரிசைய எழுதிக் கொடுத்தாங்க... என் வயசுக்கு அப்போ அந்த கையெழுத்து பயங்கர அழகு... 




அந்த டேப்ரெக்காரடர் packing, manualலோட எல்லாம் எங்க வீட்டுக்கு வரல.
யோசிச்சு பாத்தா, அதொரு second hand பொருளோன்னு கூட இப்ப கேக்கத் தோனுது... டேப்ரெக்கார்டர் தன்னோட ‘பொக்கிஷ’ நிலையை இழக்க 1-2 வருசமாச்சு..அதுக்கு பிறகு நானும்,அக்காவும் பல ஆராய்ச்சிகள் பண்ணோம். ஆராய்ச்சி முடிவுல, அதுல நாலு பெரிய குண்டு பேட்டரி கட்டை போட்டா, கரண்டு இல்லாதப்ப
கூட பாட்டு கேக்கலாம் தெரிஞ்சுது... பேட்டரி பெரிய இன்வெஸ்ட்மெண்ட்(அந்த வயசுல) அதனால விட்டாச்சு... ஒரு ஞாயிறு மதியம் பொழுது போகாத வேளைல, ஆராய்ச்சி அடுத்த கட்டத்துக்கு போச்சு... ரொம்ப நாளா சும்மா இருக்குற ரெக்கார்ட் பட்டன், பிளே பட்டனையும் சேத்து அமுக்கினா வேலை செஞ்சது.
It’s a big breakthrough. We are going to create historyன்னு காலரை தூக்கிவிட்டு, மாறி மாறி பேசிப் பேசி ரெக்கார்டு பண்ணி விளையாண்டோம்...அது போரடிக்கவும். அப்புறம் அதே டேப்ரெக்கார்ட்ல ரேடியோ போட்டுவிட்டு, ரெக்கார்ட் பட்டன் அமுக்குனா ரெடியோல பாடுறது/பேசறதுன்னு எல்லாம் பதிவாச்சு.
அதுக்கு பிறகு, ரெடியோல சினிமா பாட்டு போடுற நேரம் தினம் உக்காந்து... எங்களுக்கு இருக்குற ஒரே ஒரு கேசட்ல பிடிக்காத பாட்டை அழிச்சு, பிடிச்ச பாட்டுகளா பதிஞ்சு கேக்க ஆரம்பிச்சோம்...ஒரு கட்டத்துக்கு மேல எங்க கைல சிக்கி சின்னாபின்னமாச்சு டேப் ரெக்கார்டு.
அப்புறம் கேசட் நாடா சிக்குறது, அதை மணிக்கணக்கா லாவகமா பிய்யாம எடுக்குறதுன்னு அதை வச்சு பல என்டர்டெயின்மென்ட் போச்சு..எந்நேரமும் Forward/Rewindன்னு மாத்திகிட்டே இருப்பேன்.
ரொம்ப வயசான மனுசனோட சீரழிவை சாவு நிறுத்துற மாதிரி,அந்த டேப்ரெக்கார்டுக்கு ரிப்பேர் மூலம் விடிவு காலம் கிடைச்சுது..இப்ப பல வருசங்கழிச்சும் மூலைல அக்கடான்னு இருக்கு . நானா பதிஞ்சுலேயே எனக்கு பிடிக்காத பாட்டு “ஆடியில சேதி சொல்லி..ஆவணியில் தேதி வச்சு தான்...
அதை பல முறை Forward பண்ணிருக்கேன்... சுத்தமா பிடிக்கல. நேத்து அந்த பாட்டை Wynkல கேட்டேன். நல்லா தான் இருக்குது... அதோட Wynk நிக்கல, அப்படியே பிளேலிஸ்ட்ல இந்தியா ஆரம்பிச்சு இங்கிலாந்து வரை 90ஸ் நல்லநல்லா பாட்டு போட்டுச்சு.
ஒரே Nostalgic ஆகிப் போச்சு.. அப்போல்லாம் நமக்கு பிடிச்ச ஒரு பாட்டை, நம்ம வீட்ல, நமக்கு பிடிச்ச நேரத்துல கேட்க எவ்வளவு மெனக்கெடணும். இப்ப தான் பாட்டு கேக்குறது விரல் நுனில இவ்வளவு எளிதா இருக்கு... Now,The technology is so improved you know...
இது தான் அந்த டேப் ரெக்கார்டர்.



1 comment:

  1. It's nice to see that you recalled your golden school days moment at home.

    Thanks for such blog which recalled one or two moments with my tape recorder (rest of it already erased from my memory) :)

    Waiting for your next blog!

    ReplyDelete