Categories

Tuesday, 12 February 2019

வானொலி ஒரு உற்ற நண்பன்

ஏதாவது பாட்டுக் கேட்கலாம் என்றபடி பல மாதங்களுக்குப் பிறகு காலையில் பழைய குட்டி அலைப்பேசியில் ஹெட்செட்டை சொருகி வானொலியைப் போட்டேன்... 



கிட்டதட்ட 8-9 வானொலி அலைவரிசையை அதில் ட்யூன் செய்து வைத்திருந்தேன்... ஒவ்வொரு அலைவரிசைக்கும் தாவித் தாவி போகும் பொழுதுக்கொர்ர்ர்என்ற இறைச்சல். கிட்டதட்ட எல்லா அலைவரிசையிலும் ஆங்கிலம் கலந்த தமிழ் விளம்பரங்கள் ஓடியபடி இருந்தன. எதிலும் பாடல்கள் இல்லவே இல்லை.கடைசியில் 102.3 பண்பலை(FM) அலைவரிசைக்கு நகரும்போது, “வாஷிங் பவுடர் நிர்மா... நிர்மா... நிர்மா...” என்ற விளம்பரம் அனிச்சையாய் என் கைகளை நிறுத்தியது. நான் சின்ன வயசில் மதுரை ஆல் இண்டியா ரேடியோ/இலங்கை வானொலி கேட்ட விளம்பரம் இது. அப்போதெல்லாம், காலை எழுந்தவுடன் ஓட ஆரம்பிக்கும் ரேடியோ, பள்ளிக்கு கிளம்பும் வரை கேட்டுக் கொண்டே இருக்கும். பண்பலை(FM) வருவதற்கு முன், கேபிள் அனைத்து வீடுகளுக்கும் புகும் வரை இந்த ரேடியோ தான் பெரும்பாலான பொழுதுகளை ஆட்கொண்டது. அனைத்து மத பக்திப் பாடல்களில் தொடங்கி, காந்தியின் சத்திய சோதனை, உழவர்களுக்கான செய்திகள், தென்கச்சி கோ சுவாமிநாதனின் இன்று ஒரு தகவல். அதன் பின் இலங்கை கூட்டு ஸ்தாபனலிவீயின் சினமாப் பாடல்கள்என பொழுது நகரும்இந்த ஒரு நிகழ்ச்சிக்காகவே மத்த நிகழ்ச்சிகளைக் கேட்போம். விளம்பரங்கள் தொடங்கி அனைத்து நிகழ்ச்சிகளும் அழகு தமிழில், அழுத்தம், திருத்தமாக இருக்கும். இப்படியாக என் பால்ய நினைவுகளை கிளறிய அந்த பண்பலை எது என அறிய விழைந்தேன்...


அப்போது தொகுப்பாளர், அவர் கேட்ட அறிவுத் திறன் கேள்விக்கு, பதிலாக வந்த குறுஞ்செய்திகளை வாசித்தார். கூகிளில் தேடினால் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் இந்தக் காலத்தில் இன்னமும் பொது அறிவு கேள்வி கேட்பதும், இதற்கு சிலர் குறுஞ்செய்தி அனுப்பி பதில் சொல்வதும் வேடிக்கையாய் இருந்தது... நீங்கெல்லாம்அப்டேட்டே ஆகலையாடாஎன நினைத்தேன். அப்போதுசென்னை விவித்(Vividh) பாரதி பண்பலையின் வாழ்த்து மடல்என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்பட்டது. அதில் ‘Man of the Millennium’ விருது வாங்கிய பாலம்.கல்யாண சுந்தரம் என்ற எளிய மனிதனின் சாதனைகளையும், வாழ்க்கையையும் விளக்கினர். மொத்தமாக 2-3 நிமிடம் தான் பேசியிருப்பார்கள். ஆனால் அதை மிகத் தெளிவாகவும், அழகாகவும் கூறியதையும் கேட்கும் பொழுது இவரைப் போல ஒரு ஏற்ற மிகு வாழ்வை நாமும் வாழலாமே என்ற ஆசை துளிர்த்தது. யோசித்துப் பார்த்தால், ரஜினி இவருக்கு உதவ முன் வந்த போது தான் பல ஊடகங்கள் மூலம் இவர் வெளிச்சத்துக்கு வந்தார். இங்கு நல்லதோ/கெட்டதோ அதை எல்லாருக்கும் கொண்டு சேர்க்கும் முன் ஒரு வணிக மதிப்பீடுக்கு உட்படுகிறது. வணிக மதிப்பீடு இல்லாத, பரபரப்பில்லாத எதுவும் அனைவரையும் சென்று சேர்வதில்லை. பேஸ்புக், வாட்சப் போன்ற சமூக ஊடகங்களில் கூட தனக்குமைலேஜ்’(லைக்/சேர்) தராத விஷயங்களை யாரும் கண்டுகொள்வதில்லை. அதீத கற்பனையுடன் கூடிய கட்டுக்கதைகள் கூட கண்திறப்பு/விழிப்புணர்வு என்ற பெயரில் தமிழனாய் இருந்தால் சேர் செய், மனிதனாய் இருந்தால் டேபிள் செய் எனப் பலமுறை சுற்றி வந்து வெறுப்பையும்,பயத்தையும் பரப்புகிறது. ஆனால், எளிய மற்றும் சிறந்த விஷயங்கள் அவ்வளவாக பரவுவதில்லை. வானொலி மூலம் அவை மக்களைச் சேருவதைக் கேட்கும்போதுஅப்டேட் ஆகாமல் இருப்பதே நல்லதுஎனத் தோன்றியது. வானொலிகளும், வணிகம் சார்ந்து நகர்ந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், கண்டுபிடித்ததில் இருந்து மனித இனத்துக்கு பல வகையில் உதவி வருகிறது வானொலி... இயற்கை பேரிடர் காலத்திலும் சரி, போர் போன்ற செயற்கை பேரிடர் காலத்திலும் சரி,மனிதனுக்கு தகவலை கொண்டு சேர்க்கும் செயலைத் திறம்பட செய்து வருகிறது. சுனாமி வந்து போது பல இன்னலுக்கு நடுவில் சென்னை லைட் ஹவுசில் உள்ள வானொலி நிலையம் எப்படி மக்களுக்கு சுனாமி செய்திகளைச் சொன்னது எனப் பலருக்கும் தெரியாது. இன்னுமும் மீனவர்களுக்கான புயல் எச்சரிக்கை அறிவிப்பில் வானொலி ஒரு சிறந்த கருவி. முன்னேறிய நாடான சிங்கப்பூர் அரசு எப்போதும் வீட்டில் (போர் காலத்தில் பயன்படுமென Bomb shell அறைக்குள்) ஒரு ரேடியோ வைத்திருக்க சொல்கிறது. Die Hard 4 படத்தில் கூட “Dude, Radio Frequency is the end of the world Technology.It works even when Internet, mobile and all other technologies fail” என்பதாக ஒரு வசனம் வரும். இதைச் சென்னை வெள்ளத்தின் போது என்னால் உணர முடிந்தது. வாணொலிகள் பலரின் வாழ்வில் அழுத்தத்தை நீக்குகிறது. வானொலி பலருக்கு நல்ல நினைவுகளை கொடுக்கிறது. வானொலி பலரின் அலுப்பை, தனிமையைப் போக்குகிறது. வானொலிகளின் வடிவம் மாறலாம், வானொலிகளின் வணிகம் மாறலாம். ஆனால், வாணொலிகள் என்றுமே மனிதனுக்கு ஒரு உற்ற நண்பன். இன்று(13th Feb) உலக வானொலி தினம்(World Radio Day). 

No comments:

Post a Comment