Categories

Monday 20 August 2012

புது ட்விட்டர் கையேடு

புதுசா சென்னைக்கு வந்தவங்க எல்.ஐ.சி பில்டிங்கை அண்ணாந்து பாக்குற மாதிரி ட்விட்டரை வாயை பொளந்து பாக்கும் புது ட்விட்டரே(கீச்சரே) வருக வருக....

உங்களுக்கெல்லாம் இங்க என்ன நடக்குதுன்னு? என்னலாம் பண்ணலாம்ன்னு சுருக்கமா சொல்ல பாக்குறேன்.


ட்விட்டரை இங்க 'கீச்சகம்'ன்னு தான் சொல்லுவாங்க.
ட்விட்டர் உருவான கதைய தமிழ் வரலாற்றை அடிப்படையா வச்சு சொன்னா... திருவள்ளுவர் தான் முதல் ட்விட்டர். அவரு வம்சாவளில வந்த யாரோ தப்பிச்சு போய் தான் அமெரிக்காவுல அவரோட பழக்கத்தை பரப்பி...அதை இந்த ஜாக்கு(ட்விட்டர் ஓனர்) பய கத்துகிட்டு 140 எழுத்துக்கு மேல ட்விட்ட முடியாதுன்னு வச்சு நம்மளை சாவடிக்குறான்...அப்படின்னு தமிழ் கூறும் ட்விட்டர் உலகம் பெருமையா  சொல்லிக்கும்.

ட்விட்டர் வடிவேலு ஸ்டைலில் சொன்னா ஒரு ரத்த பூமி. வந்தவங்க யாரும் மொக்கைல இருந்து தப்பிக்க முடியாது. கண்டிப்பா காதுல ரத்தம் வரத்தான் செய்யும். ட்விட்டர் வரும்போதே சூடு சொரணைய கழட்டி வச்சுட்டு வர்றது தான் நல்லது. சண்டைல கிழியாத சட்டையா என சட்டை செய்யாமல் வந்தா தான் பொழப்பு ஓட்ட முடியும்.

இங்க என்னலாம் பண்ணலாம் அப்படின்னு நீங்க கேட்டா எதுவும் உருப்படியா பண்ண முடியாதுன்னு சொல்லலாம். உபயோகமா பொழுதை கழிக்கிற மாதிரியே தெரிஞ்சாலும், நாம அடிமை ஆக தான் அதிக வாய்ப்பு இருக்கு. ஆனா சில சமயம், உங்க திறமைக்கு நல்ல அங்கீகாரமும் கிடைக்கும்.

ட்விட்டை இங்க 'கீச்சு'ன்னு தான் சொல்லுவாங்க.

ட்விட்டர் ஒரு தனி உலகம்....வெளிய டீ ஆத்த கூட வக்கு இல்லைனாலும், உள்ள வந்து அரண்மனையே கட்டுவாங்க...வெளிய கோடி கோடியா சொத்து இருந்தாலும்...ட்விட்டர்ல பாலோயர்ஸ் இல்லைனா பிச்சைக்கார அனாதை தான்.

புதுசா ட்விட்டர்க்கு வர்ற எல்லாருமே ஆட்டோமேட்டிக்கா இந்த அனாதை லிஸ்ட்ல தான் வருவாங்க...என்ன தான் தன்னோட வெட்டி திறமை எல்லாத்தையும் வெளிய காமிச்சாலும் ஒரு பயலும் அவ்ளோ சீக்கிரமா சீண்டமாட்டாங்க. காரணம், சமுதாய ஏற்ற தாழ்வு ட்விட்டர்ல..பிரபல ட்விட்டர்களின் ஒரே டையமில் நெறய பிகர(ட்விட்டர்) மெயின்டையின் பண்ண முடியாத வீக்குநேசு...இதெல்லாம் சேர்ந்து உங்களுக்குள்ள பிரபல ட்விட்டர் ஆகணும்னு ஒரு வெறிய ஏற்படுத்தும். அந்த வெறில நீங்க என்ன பண்ணனும்னு தெரியாம முழிக்க கூடாதுன்னு தான், கீழே சில விஷயங்களை விளக்கியுள்ளேன்.

140க்குள் கீச்சனும் என்பதால் பல விஷயங்களை சுருக்கமா தான் சொல்லுவாங்க. அவைகளில் சில கீழே...

TL என்றால் டைம் லைன். இங்க தான் நீங்க பாலோ பண்ணறவங்க எல்லா கீச்சும் பாக்குற இடம். தமிழ் கீச்சர்கள் டைம் லைனை சந்துன்னு தான் சொல்லுவாங்க.

DP என்றால் தீபிகா படுகோன் என்று நீங்கள் நினைத்தால் தவறு....DP என்றால் Display Picture ன்னு அர்த்தம்.

DM என்றால் டைரக்ட் மெசேஜ்...இதுல செய்தி அனுப்பிச்சா அந்த ரெண்டு பேத்துக்கு மட்டும் தான் தெரியும். ட்விட்டர் கடலை உலகின் நாடி துடிப்பே இது தான். பல பேர் திட்டுவாங்குறதும், காரி துப்புரதை கரெக்டா கேட்ச் பிடிக்கிறதும் இங்க தான்.

'#TAG' இந்த மாதிரி ஏதாவது டேக் போட்டா அதே டேக்ல எல்லாரும் கீச்சுனா...அது தேடி எடுக்க சவுகரியமா இருக்கும். ட்விட்டர் ட்ரேண்டுல கூட வரும்.

RT ன்னா ரீட்வீட் . செல்போன் மெசேஜ் பார்வொர்ட் பண்ண மாதிரி தான். இதுக்கு இருக்குறதுலே மவுசு அதிகம். ஒரு ட்வீட்டை போட்டுட்டு அது RT ஆகுமன்னு நாக்கை தொங்கபோட்டு பாக்குறவன் தான் சராசரி கீச்சர்.

MT ன்னா மாடிபைடு ட்வீட். அடுத்தவன் போட்ட கீச்சை லைட்டா மாத்தி அர்த்தத்தை வேற மாதிரி ஆக்கி கோர்த்துவிடுறதுக்கு தான் இந்த கலை பெரும்பாலும் பயன்படுது.

LOL ன்னா வாய் விட்டு சிரித்தல் சுருக்கமா வாவிசி

ROFL ன்னா தரையில் விழுந்து புரண்டு சிரித்தல் சுருக்கமா தவிபுசி

EKSI ன்னா என்ன கொடுமை சரவணன் இது சுருக்கமா எகொசஇ

தி.பா.சி  ன்னா திரையை பார்த்து சிரிக்கிறேன் என்பதன் சுருக்கம்

CLT ன்னா Currently Listening To

ASUKONன்னா அருமையாகச் சொன்னீர்கள் உங்கள் கருத்துக்கள் ஒவ்வொன்றும் நெத்தியடி

ISNKKன்னா இதைச் சொன்னா நம்மள கேணைன்னு கூவுவாங்க

வ.பா ன்னா "வலை பாயுதே" அப்டின்னு ஆனந்த விகடன்ல ஒரு பக்கம் முழுக்க அந்த வாரத்துல போட்ட சிறந்த கீச்சு எல்லாம் வரும். அதுக்காகவே வாரம் முழுக்க கீச்சுர கூட்டமும் இருக்கு. எல்லா புகழுக்காக தான். உடனே, புகழ் யாரு? அழகான பையானன்னு மொக்க போடக்கூடாது. டைரக்டர் சங்கரோட படம் சின்ன பட்ஜெட்ல கூட வரும், ஆனா இந்த தோட்டாவோட@thotta கீச்சு இது வரை வ.பா ல வராம இருந்ததே இல்லை.இதை பாத்து வயுறு எரிய ஒரு குருப்பே இருக்கு.

நநீகி ன்னா 'நடு நிசி கீச்சு'. அது தான்பா பலான விஷயத்தை பப்ளிக்கா பேசுறது.இதை பொதுவா ஆண்கள் தான் பண்ணுவாங்க. பெண்கள் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பாங்க. மத்த பெண்கள் அமைதியா படிச்சிட்டு சிரிச்சுக்குவாங்க...

இதுக்கு மேலையும் நிறைய இருக்கு.. தெரிஞ்சுக்க கீழ இருக்குற லிங்க்கை அமுக்குங்க.. (உபயம்: @thirumarant நன்றி)

http://t.co/NdsG6mVh 

 பக்கத்து வீடு கடலில் காணாம போனாலும், கடமை தவறாமல் கடலை போடும் கட்டதொற @kattathora போன்ற கணவான்களும் இங்கு உள்ளனர் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.

கடலைக்கு கட்டதொறன்னா கவிதைக்கு கருப்பு @iKaruppiah தான். மனுசன், மத்த மனுஷங்க நடமாட  விடாம கவிதை போட்டே துரத்திருவான். இவன் இல்லாத பொழுதுகளில், "அவள் இல்லாத பொழுதுகளில்..."ன்னு ஸ்டார்ட் பண்ணி கவிதையா போட்டுட்டு இருப்பான் இந்த சிவ்வ்வ்வா @Siva_buvan. கவிதை எழுதுறதுல வாலி,வைரமுத்து க்கு அப்புறம் இவங்க தான்னு பேசிக்கிறாங்க...அவ்வவ்

ட்ரெயின்னுக்கு தக்கல் டிக்கெட் போடுறவன் கூட எவ்வளோ நேரம் வெயிட் பண்ணாலும் டிக்கெட் வாங்கினதும் வீட்டுக்கு போயிருவான். ஆனா இந்த ராஸ்கோலு @RazKoLu ட்விட்டரை விட்டு போய் நான் பார்த்ததே இல்ல...மனுஷனுக்கு வாழ்க்கைன்னு ஒன்னு இருக்கான்னு 'வியக்கேன்'... சந்தானத்தோட ட்விட்டர் ஜெராக்ஸ் காப்பி இவருன்னு பேசிக்கறாங்க...அவ்வ்வ்வ் (அவ்வ்வ்வ்க்கு எல்லாம் விளக்கம் சொல்ல முடியாது போங்கய்யா)

பள்ளிகூடத்துல கேள்வி கேட்டாலே பல்லு இளிக்கற நம்மள ட்விட்டர்ல  ஒருத்தர் நிக்க வச்சு டெய்லி 5 கேள்வி கேப்பார். அது இவர் தான் @2nrc. இவரோட க்விஸ் ப்ரோக்ராம்க்கு(KDQ) தனி ஃபேன்ஸ் கூட்டமே இருக்கு. சூர்யாவோட 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி'க்கு வெளிய மவுசு இருக்கோ இல்லையோ...இவரோட KDQக்கு ட்விட்டர்க்குள்ள நல்ல மவுசு இருக்கு...

ட்விட்டர் மொக்கையா இருக்குன்னு நினைக்குறவங்க...சாய் சித்ரா கீச்சை பாத்தா அந்த நினைப்பை விட்டுருவாங்க. மொக்கைய முழுசா குத்தகைக்கு எடுத்து வச்சு இருக்காங்க,

இந்த மாதிரி நெறைய பேர் இருக்காங்க(எல்லாரை பத்தியும் சொல்ல முடியல). இப்படி தான் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இலாகாவை கைல வச்சுட்டு ஆடுறாங்க. சரி, 'இதுல எப்பிடி நலம்தான வாசிக்கிறதுன்னு'(பொழப்பு ஓட்டுறது) பாக்குறீங்களா?

இந்த மாதிரி யோசிச்ச சிலர் தான் தப்பான வழிகள்ல போக வாய்ப்பு இருக்கு. அதுல ஒன்னுதான் இந்த ஃபேக் ஐடி. தன்னை பாலோ பண்ணாதவங்களையும், கிண்டல் பண்ணவங்களையும் பழிவாங்க ஒரு பொண்ணோட பேர்ல ஐடி உருவாக்கி ஒரு ஹீரோயின் போட்டோவை வச்சா போதும். நம்ம ஆளுக தான் வெளக்கமாத்து குச்சிக்கு புடவை சுத்துனாலும் சுத்தி சுத்தி வருவாங்கள...மிச்சத்தை அவங்களே கற்பனை பண்ணி அவங்களே ஏமாந்துக்குவாங்க... இந்த மாதிரி யார்கிட்ட எல்லாம் ஏமாறுறோம்ன்னு TWEET UP ல சில சமயம் தெரிஞ்சிக்களாம். கீச்சு உலக நண்பர்கள் எல்லாம் நிஜ உலகில் சந்திக்கிற நிகழ்ச்சி தான் TWEET UP. அதான்யா get to gether.... 

இன்னும் சிலர் தன்னை பாராட்டுற ஆர்வத்துலையோ வேற ஏதோ காரணத்துனாலையோ, சர்ச்சைக்குரிய விசயங்களிலோ/தனி மனித தாக்குதல் வார்த்தைகளை கீச்சுருவாங்க...

இந்த மாதிரி தப்பான வழிகள்ல போய் சைபர் கிரைம் போலீஸ் கிட்ட கூடாதுன்னு தான் இந்த ட்விட்டர் கையேடு.

ஒரு கம்பெனிக்கு brand எவ்ளோ முக்கியமோ...கிட்டத்தட்ட ஒரு ட்விட்டர்க்கும்  ஒரு அங்கீகாரம் இருந்தா தான் மதிப்பாங்க...அதை தான் முதல கொண்டு வரணும். அதுக்கு நீங்க தனியா எதுவும் பண்ண தேவை இல்லை. உங்க திறமைய எல்லாம் காமிச்சா போதும்(இங்க தான் நெறைய அடிமைகள் இருக்காங்க அதை சகிச்சுக்க...).  இது போக கொஞ்சம் அரசியல் பண்ணனும். தனி திறமை எதுவும் இல்லைனா....கொஞ்ச நாள் TLஐ வேடிக்கை பாருங்க. அட்ரஸ் தொலைஞ்ச மாதிரி(உங்கள மாதிரி) கொஞ்சம் பேர் சுத்திட்டு இருப்பாங்க. அவங்க கூட மொக்க போட ஆரம்பிச்சா நல்ல கம்பெனி குடுப்பாங்க. 

அப்படியே அந்த கூட்டத்து ஆளுங்க எல்லாம் சேர்ந்து ஒரு சங்கம் ஆரம்பிச்சுக்கலாம். கூட்டத்துல பிரபல ட்விட்டர் ஆத்து ஆத்துன்னு சொற்பொழிவு ஆத்தும்போது, நடுவுல அந்த சங்கத்து பேரை சொல்லி கூட்டத்துக்குள்ள  புகுந்து ஒரு கொட்டுவச்சா மாதிரி வரம்பு மீறாம ஒரு கருத்தை சொல்லிட்டு வந்தா போதும். ஏதோ பூனைக்கு மணி கட்டுனா மாதிரி உங்களை 
பாராட்டுவாங்க...அப்புறம் நீங்க அந்த பிரபல ட்விட்டர் தவிர மத்த எல்லாருக்கும் பாலோ பண்ற ட்விட்டர் ஆகிறலாம். உங்க சங்கமும் பேமஸ் ஆயிடும். அப்படி பேமஸ் ஆனவங்க தான் இந்த ரேணிகுண்டா பாய்ஸ்.

எவ்ளோ சாணிய கரைச்சு ஊத்துனாலும் தாக்குபிடிப்பாங்க...

ஆனா, இதுக்கும் நேரம் காலம் பாத்து தான் பண்ணனும். இல்லைனா சைபர் க்ரைம் சொல்லிடுவாங்கோ...அவ்வ்வ்வ்வ் இதுக்கு மேல நம்மள  சந்தோசப்படுத்த தான் இந்த சண்டை எல்லாம் இருக்கு. ஆண் ஆதிக்கம்- பெண்ணாதிக்கம், இசைஞானி-இசைப்புயல் அப்டின்னு டாபிக் எடுத்து கோட்டு போடாத கோபிநாத்கள் நீயா-நானா ப்ரோக்ராம் நடத்துவாங்க. நல்ல வேடிக்கை பாக்கலாம் இல்லை இறங்கி சண்டையும் போடலாம்.

ஆனா ஒன்னு மட்டும் உறுதி, அமெரிக்காவுல ஒருத்தன் வீட்ல கட்டில் ஸ்க்ரு கழண்டு விழுந்தா கூட ட்விட்டர்ல நியூஸ் வந்த பிறகு தான் அந்த வீட்டு ஒனர்க்கே தெரியும். எப்பிடி தான் இவ்ளோ சீக்கரமா நியூஸ் கிடைக்குமோ தெரியல...

சரி...இதெல்லாம் பண்ணா என்ன தஞ்சாவூர் கல்வெட்டுலையா என் பேரை வெட்டி வைக்க போறாங்கன்னு நீங்க கேக்கலாம். இல்லை. ஆனா, பல பத்திரிக்கைல உங்க பேரு வர வாய்ப்பு இருக்கு. மன்னர் கசிவு (@RajanLeaks) பெயர் கூட இப்பிடி தான் 'இந்தியாவுலேயே அதிக பேரை பாதித்தோர்'(என்ன அர்த்தம்ன்னு புரியல) என்ற ட்விட்டர்க்கான பகுதில ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைல ஒரு சின்ன கட்டுரை போட்டாங்க. இந்த மன்னர் கசிவு யார்னு விளக்க ஆரம்பிச்சா...இன்னொரு தனி பதிவே போடணும். அதனால வேற எங்காவது போய் படிச்சுகொங்க...அவ்வ்வ்வ் 

ஆங்.. இவ்ளோ போட்டுட்டு தமிழ்ல எப்படி கீச்சுறதுன்னு போடலேன்னா எப்படி? பிடிங்க அதுக்கு தனி லிங்க்..

http://sakthivelennathasolla.blogspot.com/2013/02/blog-post_24.html

இவ்ளோ வக்கணையா பேசுறியே அப்படி நீ தான்பா கழட்டுற கேக்குற வாய்சு கேக்குது...அது தெரியாம தான், ஹோட்டல் முதலாளி, சமைச்ச எல்லா அயிட்டத்துலையும் நக்கி பாக்குறா மாதிரி, எல்லாத்தையும் ட்ரை பண்றேன்.
நான் இங்க விடாம பண்ற ஒரே காரியம்ன்னா அது காலைல வணக்கம் தனி தனியா சொல்றது தான். இதனால, என்னை சிலர் ட்விட்டர் வரவேற்பாளர்ன்னு கூட சொல்றாங்க. அதனால, வணக்கம் சொல்லற இலக்காவ மட்டும் இந்த ஜாக்கு பையன்கிட்ட சொல்லி காப்புரிமை(கோட்டு கோபி சொல்ற மாதிரி) வாங்கிக்கலாமான்னு யோசிச்சிங்...

இதுக்கு மேலேயும் தமிழ் கீச்சுலகம் பத்தி தெரிஞ்சுக்க எனக்கு ஆர்வம் பொத்துகிட்டு வருதுன்னு சொல்லுறவங்க @karaiyaan னோட கீழ இருக்குற வெப்சைட் போய் பாருங்க..
http://twitamils.com/

                                                    
 - நன்றி,
ச.சக்திவேல் 


37 comments:

  1. கையேடு அருமை ,# கிறுக்கல்கள் தொடரட்டும்...!!

    ReplyDelete
    Replies
    1. okay sendan avargale periya katturai vasikka uttuteeng nandri nandri

      Delete
  2. நச்சு மாமே.. சேவை தொடரட்டும்..

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் மச்சி :)

      Delete
  3. ரொம்ப அருமையான போஸ்ட் :-) எல்லாம் விளக்கமாக எழுதியுள்ளீர்கள், வாழ்த்துகள் :-)

    amas32

    ReplyDelete
  4. ஹா ஹா... பதிவுல என்னப்பத்தி எழுதி காலி பண்ணிட்டீரே மாம்ஸ். :-))

    ReplyDelete
    Replies
    1. நீ ஒரு வருங்கால வாலி மச்சி :)

      Delete
  5. எனக்கு தெரியாத ஒரு சில பிரபல ட்விட்டர்களை தெரிந்து கொண்டேன். நன்றி. எ.கா: @siva_buvan ,@ 2nrc

    ReplyDelete
  6. அருமையான நடை! நுணுக்கமான அணுகுமுறை! கலா அக்கா பாணியில் சொல்லிப்புடறேன்! “ கிழி..கிழி’’னு கிழிச்சிட்டீங்க! “ வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நடை எல்லாம் தெரியல...முதல் முயற்சி...நன்றி :)

      Delete
  7. ட்விட்டர் complete roundup.எளிமையா நகைச்சுவையா இருக்கு .வாழ்த்துகள்
    @shanthhi

    ReplyDelete
  8. சூப்பர், பட் என்ன பத்தி எழுதலயேன்னு தான் ஒரு சின்ன வருத்தம்... (சும்மா சொன்னேன் மச்சி அவ்வ்வ்வ்)

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்வ்.... நன்றி மச்சி :)

      Delete
  9. நகைசுவையோடு சொல்லியிருக்கிறீர்கள். அதில் என்னை பற்றியும் கூறியதற்கு நன்றி "அட்ரஸ் தொலைஞ்ச மாதிரி(உங்கள மாதிரி) கொஞ்சம் பேர் சுத்திட்டு இருப்பாங்க. அவங்க கூட மொக்க போட ஆரம்பிச்சா நல்ல கம்பெனி குடுப்பாங்க" வாழ்த்துகள் வாழ்க வளர்க

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்....நான் பொதுவா தான் சொன்னேன்...நன்றி :)

      Delete
  10. மாமே... நீ மெயாளுமே விளையாட்டு பையன் தான்.. பூந்து விளையாடிறுக்கே...


    இவன் @karthiktrends

    ReplyDelete
  11. மக்கா கலக்கிட்ட போ.நீதான்யா அரிச்சந்திரன் வாரிசு.எம்புட்டு அழகா உண்மையை போட்டு உடைச்சிருக்க.சூப்பரப்பு..

    ReplyDelete
    Replies
    1. அரிச்சந்திரன் என்கிட்ட தான் 'உண்மைய' டியூஷன் படிச்சிட்டு போனார்...அவ்வவ்...நன்றி மக்கா :)

      Delete
  12. நல்ல வேளை உங்க ப்ளாக் கொஞ்சம் லேட்டா படிச்சேன்.. இல்லனா நான் எழுத ஒண்ணுமே இல்லாம போயிருக்கும்.

    சூப்பர் சகோ! :-))

    ReplyDelete
  13. நான் டுவிட்டருக்கு வந்து 7 மாசமாகுது,இந்தப் பதிவப் பாத்தப்பிறகுதான் இங்க இம்புட்டு உள்குத்து இருக்குன்னு தெரியுது.சூப்பர்.

    ReplyDelete
  14. வணக்கம் சொல்ற இலாகா மட்டும் இல்லை...உங்களை அறிமுக கட்டுரையாளர் என்று கூட சொல்லலாம்..அவ்ளோ விளக்கமா சொல்லி இருக்கிங்க...ஓர் வார்த்தையில் அருமை :)))) ரொம்ப நன்றி ..!!

    புது கீச்சாலர்களே மிஸ் பண்ணிடாதீங்க ...அப்புறம் வருத்த படுவீங்க .."

    ReplyDelete
  15. very useful for new comers ..Especially for me !!!Thank you so much ..மொத்தத்தில் சாநீஎபோ..படிச்சுட்டேன்லே..!

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. தௌியாக அடிப்படையாக தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்களை எழுதியுள்ளீர்கள்....அருமையான பதிவு..ஆங்காங்கே தௌித்த நகைச்சுவை குறும்புகள் உங்களுக்கே உரித்தானது. மேலும் கீச்சுலகிற்கு வரும் புதிய தமிழ் கீச்சர்களுக்கு உபயோகமான பதிவு.

      Delete
  17. இவண்: சந்துல சவுண்டு (@iamsubramani)

    ReplyDelete
  18. அருமையான பயனுள்ள பதிவு

    ReplyDelete