Categories

Friday 19 October 2012

சூரிய கவிதைகள்

மழையை ரசித்து பலர் கவிதை எழுதுகின்றனர்.... சூரியனை அடிப்படையாக கொண்டு என் குறுங்கவிதைகள் இந்த மழை காலத்தில்....





















உன் மாலை நேர
முகவொளி கண்டு வெட்கி தான்
சூரியனும் மறைந்து கொண்டதோ...

நீ காதல் சொன்னதும்,
சூரியன் சுட்ட சுடு மணலும்,
பனிப்புல்லாய் மாறியது விந்தை...

நீ முகத்திரை விலக்கி
கண்ட கோபக்கயலுக்கு அஞ்சி,
மேகத்திரைக்குள் சூரியத்தேவன்...

உனக்கு பிடிக்கவில்லை என்றறிந்து
தான், அலங்காரம் செய்து கொண்டு
நிலாவென உலாவுகிறானோ
அக்கினித்தேவன்...

கல்லூரி சென்ற உன்னை
காணாத கோவத்தில் தான்
எங்களை சுடுகிறானா இந்த
ஏழு குதிரையான்...

உன் கார்முகில் கூந்தல்
வெள்ளி நரம்புகளாய் ஆன பிறகும்
அதை காய வைக்கும் இளவேனிலாய்
பிறந்து கொண்டிருக்க ஆசை...

பகலவன் உருவாக்கிய பகலில்
அவனே ஓர் இரவை உணர்கிறான்
போர்வைக்குள் நீ இன்னும்
உறங்குவதால்...


நன்றி
ச.சக்திவேல்


No comments:

Post a Comment