Categories

Thursday 18 April 2013

கவிதைக் கிறுக்கல்கள் பகுதி-1

1) வித்தார விரலழகி,
முத்தார மொழியழகி, கத்தால கையழகி, எகத்தாள பேச்சழகி, எக்காலமும் மகள் அழகி...


2) வேலை முடியும் வேளையிலே,
ஆளை அமுக்கும் களைப்பிலே, ஆட்டை கட்டிப்போட்டு,
தூக்கத்தை கட்டிக்கிட்டேன்.. #விவசாயி பாட்டு...

3) வேசமிட்ட மனிதர் மத்தியில்,
வேசமிட்டு வாழக் கற்றுக் கொள்ள துடிக்கும், வாசமுள்ள மொட்டுக்கள்.. #பவுடர் போட்ட குழந்தைகள்...

4) ஏறிய நுதல் கொண்ட,
ஏந்திழை நாட்டம் தன்னை,
எண்ணத்தில் நோட்டம் விட்டே,
காதலை கவர்ந்துகொள்வேன்..

நுதல்-நெற்றி, ஏந்திழை- அழகிய ஆபரணம் அணிந்த பெண்

5) துரத்தும் நினைவுகளை,
துரத்திக் கொண்டு இருக்கிறேன்,
அதில் உறுத்திக் கொண்ட நினைவுகள் மட்டும்,
துருத்திக்கொண்டு இருக்கின்றன

6) என் ஆற்றாமை அடுத்தவர் முன்னிலையும்,
ஆட்டமாய் ஆடிக் கொண்டிருக்கிறது.. 
புன்னகை என்ற குடைக்கு கீழ் மறைவாக...

7) வானம் பொய்த்ததால்,
வாடிய பயிர்கள்,
வெயிலின் தீக்கு உணவளித்து,
புகையாய் மேகத்தில் கலந்து,
மழையாய் வருகிறது,
உலகப் பயிர் செழிக்க..

8) மனதில் புன்னகை பூக்கும் செடி நட்டு,
பாசத்தை நீர் பாசனம் செய்து,
உறவுகளை உரமாய் இடும்,
விவிசி விவசாயி நான்.. ;)))

விவிசி - விழுந்து விழுந்து சிரிப்பு - ROFL

9) உன் கொலுசின் இசைக்கேற்ப,
என் இதயம் தாளமிடுவதையே.. 
அறிவியல் இதயத்துடிப்பு என்கிறது..

10) உன் கருங்கூந்தல் முகம் புதைத்த வேளைகளில்,
விடியலும் வீணான விசயமாகிவிடுகிறது...

11) உனை போர்வைக்குள் பற்றிக் கொண்டு,
தூங்கும் இரவு வேளைகளில் தான்,
என்னுள் சூரியன்கள் உதிக்கின்றன...

12) நீ இல்லா பாலைவன உலகில்,
தென்றலும் என்னை சுடும் உலை காற்று தான்...

13) உன் கருவிழி கண்டு உறைகின்ற பொழுதில்,
கரியமில வாயு கூட சுவாசிக்க போதும்...

14) உன் நெற்றிப் பொட்டில் பட்டு தெறித்து,
என் இதழில் நீர்த்துளி விழுவதற்காகவேணும்,
மழை பெய்ய வேண்டும்..

15) விடுமுறை நாளிலும்,
விடையின்றி சிறைப்பட்டே இருக்கிறேன்... 
உன் விடியாத விழிகளுக்குள்...

16) உன் பாவம் போன்ற முகபாவம் போதும்...
என்னை பல பாவங்கள் செய்ய வைக்க...
ஆயினும் அப்பாவம் செய்ய இயலாப் பாவியாகிறேன்..

17) உன் வனப்பு கண்டு வெளிவரும்
என் பெருமூச்சிலேயே பல பூ வனங்கள்
பொசுங்கி போகின்றன என் மனத்தில்..

18) எனக்காக பூத்த உன் புன்னகை அனைத்தும்
என் இதய அஞ்சறை பெட்டியின் ஆறாவது அறையில்...

19) என் தலைகோதி செல்லும் தென்றல் அனைத்திலும்
உன் சுவாசம் ஸ்பரிசமாய் கலந்திருக்குமென்ற நம்பிக்கையில்
சிலிர்க்கிறது என் இதயம்..

20) என் உறங்காத நீண்ட இரவுகளுக்குள்... 
உன் நீங்காத கனவுகளுக்கு மட்டும் என்றும் பஞ்சமில்லை...

4 comments:

  1. Wow! The list of poems keep going on! Very nice. Each one is beautiful :-)

    amas32

    ReplyDelete
  2. உன் கொலுசின் இசைக்கேற்ப,

    என் இதயம் தாளமிடுவதையே..

    அறிவியல் இதயத்துடிப்பு என்கிறது



    அழகான கவிதைகள் ..எனக்கு ரொம்ப பிடித்தது இது

    ReplyDelete