Categories

Thursday 5 December 2013

ஆரம்பம் – திரை விமர்சனம்

சரி. நாமளும் திரை விமர்சனம் எழுத ஆரம்பிக்கலாம்ன்னு முடிவு எடுத்து, எந்த படத்துக்கு எழுதலாம்ன்னு யோசிச்சப்ப, படம் முழுக்க ஆரம்பம்ன்னு அடிக்கடி சொல்லுற ஆரம்பம் படத்துக்கே திரை விமர்சனம் எழுத ஆரம்பிக்கலாம்ன்னு தோணுச்சு...







என்னடா இவ்வளவு லேட்டா முடிஞ்சு போன எழவுக்கு மோளம் அடிக்க வந்து இருக்கன்னு கேக்குறீங்களா??

(அழுத குரலுடன்) ஒரு ஊர்ல ஒரு ஓநாய் இருந்துச்சாம். அந்த ஓநாய் ஒரு குட்டி போட்டுச்சாம். அந்த குட்டிய பாக்க யாருமே வரலன்னு ஊர் பூரா போஸ்டர் அடிச்சுச்சு. அந்த குட்டிய பாத்த சில ஆடுங்க. குட்டி நல்லா தான் இருக்கு. ஆனா,குட்டிகிட்ட புரியாத விஷயம் நிறைய இருக்குன்னு சொல்லுச்சாம் ஆடுங்க. அதைச் சொன்னதுனால அந்த ஓநாய்க்கு இந்த ஆட்டுக்குட்டிங்க எல்லாம் கரடி மாதிரி கண்ணுக்கு தெரிஞ்சுதாம். இது வரைக்கும் நான் போட்ட எல்லாம் குட்டியும் இப்படி தான் குறை சொன்னீங்க. பூவ பூனும் சொல்லலாம், புயிப்பம்ன்னும் சொல்லலாம், என் குட்டின்னும் சொல்லலாம்ன்னு ஓநாய் சொல்லுச்சாம். இதெல்லாம் கேட்டு அப்பாவியா நின்ன ஆட்டுக்குட்டிங்க கிட்ட புதுசா ஒன்னு சொல்லுச்சாம் அந்த ஓநாய், வேணுனா 30 நாள் கழிச்சு குறை சொல்லுங்கன்னு....அதான் இப்ப விமர்சனம் எழுதுறேன்.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், கிரிக்கெட் ப்ளேயர்ஸ் சரியா விளையாடலைன்னு ரசிகர்கள் அவங்க வீட்ல கல் எரியுது கூட ஒரு வகை நியாயமா சொல்லலாம்.ஆனா, அவங்க சரியா விளையாடலைன்னு சொன்ன ஹர்ஷா போக்லே வீட்டுல இந்தியன் கிரிக்கெட் ப்ளேயர்ஸ் எல்லாரும் கல் எறிஞ்சா எப்படி நியாயம் ஆகும்?? ஆட்டோ கண்ணாடி திருப்புனா எப்படி ஜீவா வண்டி ஓடும்??

(சூது கவ்வும் விஜய் சேதுபதி குரலில் தயாரிப்பாளர்க்கும்,இயக்குனருக்கும்) பதட்டபடாதீங்க...பதட்டபடாதீங்க.. நல்லா டீப் ப்ரீத் எடுங்க.. பயப்படாதீங்க... நாங்க உங்க படத்தை ஒண்ணும்‌ செய்யமாட்டோம். உங்க படத்தை பத்தி கருத்து மட்டும் தான் சொல்லப் போறோம். உங்க படத்துக்கு போதுமான அளவு வருமானம் வந்துருச்சா?? பட்ஜெட்ல துண்டு விழுகாது. விழுந்தாலும் சமாளிச்சுருவீங்கள்ல... மனசை திடப்படுத்திக் கோங்க... நான் ஆரம்'பிக்க' போறேன்.

மெதுவா ஆரம்பிச்ச ஆரம்பம் படத்தோட மன்னர் அஜீத் தான். அப்புறம்,நயன்தாராவோட நடிப்பு.இவங்க 2 பேரோட உழைப்பு & இயக்குனர் கொஞ்சமா யோசிச்சு எடுத்த கதை. இது தான் படத்தை நிறுத்தியிருக்கு. வழக்கமான அஜீத்தோட ஸ்டைல்,அவரோட attitude இது இரண்டுமே அவரைத் தனியா தெரிய வைக்குது. மசாலா கதையா இருந்தாலும் அஜீத் வந்த பிறகு கதையை விறுவிறுப்பா கொண்டு போயிருக்காரு இயக்குனர். மும்பை,துபாய் சுத்தியே கதை நகருது. ஹாலிவுட் தரத்தில் இல்லைனாலும், லைட் எஃபக்ட் எல்லாம் கிட்டதட்ட ஒரு ஆங்கில படம் அளவு ரிச் லுக் இருக்கு.அதுக்கு ஒளிப்பதிவாளர்கள் பி. எஸ்.வினோத்,
ஓம் பிரகாஸ்க்கு பாராட்டுகள். பின்னணி இசையும் காட்சிக்கு பொருந்தி வருது. ஆனா, பில்லா,மங்காத்தாவோட பின்னணி இசை கொஞ்சம் ஞாபகம் வருது. நீங்களும் ஹாரிஸ் ஆயிடாதீங்க யுவன். அஜீத்க்கு பக்கம் பக்கமா வசனம் பேசுறது எல்லாம் செட் ஆகாதுன்னு புரிஞ்சு அளவாவே பயன்படுத்தியிருக்கார் விஷ்ணுவர்தன். ஆனா, இவங்க காம்பினேஷன் இன்னும் எவ்வளவு நாள் மக்கள் ரசிப்பாங்கன்னு தெரியல.. மக்களுக்கு சலிப்பு வர்றதுக்குள்ள, அஜீத் ஒரே மாதிரி ரோல் விட்டுட்டு வேற கதை பக்கமும் கொஞ்சம் திரும்பனும். அஜீத் உடம்பை குறைச்சதா சொன்னாங்க, படம் முடிஞ்ச பின்னும் ஒல்லி அஜீத்தை தேடிட்டு இருக்கேன். நயன்தாரா அண்ணனா வர்ற ராணா டக்குபதி கொஞ்ச நேரம் வந்தாலும் ஒழுங்கா நடிச்சு இருக்கார். அவருக்கு இருக்குற உடற்கட்டு, சைஸ்க்கு இன்னும் கொஞ்ச தமிழ் படத்துக்கு வில்லனா வருவாருன்னு தோனுது.

அடுத்து ஆர்யா, சந்தானத்துக்கு கால்ஷீட் சம்பள பிரச்சனைன்னு ஆர்யாவை காமெடிக்கு புக் பண்ணிட்டாங்க போல.. ஆனா, காமெடியும் வரல,சீரியஸ் ரோலும் வரல... நடிப்பு வருதான்னு கேக்காதீங்க...குண்டு ஆர்யா காமெடி எல்லாம் பக்கா மொக்க...சாஃப்ட்வேர் ஜீக்கா வர்ற ஆர்யா,அதுல மட்டும் தான் அறிவாளியா இருக்கார்.மத்தபடி ஒரு தத்தியா காமிச்சு இருக்காங்க. டாப்சி அடுத்த காமெடி பீஸ்... வழக்கமான லூசு ஹீரோயினா வர்றாங்க. ஒல்லியாகி கொஞ்சம் அழகாயிருக்காங்க. நடிப்பு இன்னும் வரல. lip sync கூட வசனத்துக்கு சரியா இல்ல. ஆனா, எதுவுமே பண்ணாம சிரிப்பு வருது இந்த லூசை பாக்க. இப்படியே நடிச்சா வருங்காலத்துல, ஆர்யாவும்-டாப்சியும் விவேக்-கோவை சரளா மாதிரி வருவாங்க. நயன்தாரா சோகம்,சந்தோஷம் என எல்லாக் காட்சிகளையும் சரியாப் பண்ணியிருக்காங்க. ஆர்யாக்கு ஃபிளாஷ்பேக் சொல்லும்போது, "அசோக்(அஜீத்) யாரு தெரியுமா? அவரு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கார் தெரியுமா?"ன்னு கேக்கும்போது அஜீத் குடும்பத்துல யாரோ செத்து இருப்பாங்கன்னு நினைச்சா,செத்தது நயன்தாரா குடும்பம். பிர்ர்... நயன்தாராக்கு அப்ப குடும்பத்து மேல பாசமே இல்லையா??

அஜீத்,இசை இரண்டுக்கும் 7ஆம் பொருத்தம். அஜீத் படம்ன்னு வந்தா, எல்லாம் இசையமைப்பாளரும் சின்ன வயசுல போட்டு முயற்சி பண்ண ட்யூன் எடுத்து கொடுத்துருவாங்க போல. ஒரு பாட்டு கூட மனசுல நிக்கல. அஜீத்க்கு வழக்கம் போல டான்சும் வரல. முதல்ல, இந்த மாதிரி ஒரு படத்துக்கு/கதைக்கு இத்தனை பாட்டு தேவை தானா?? அஜீத் தன்னோட அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை துறந்தா மாதிரி, தன் படத்துக்கு பாட்டையும் துறந்துடலாம். :P

அப்புறம், படத்துல இவரைப் பத்தி சொல்லியே ஆகணும்... இவரு தான் முதல்ல ஆர்யா மண்டைல கம்பியால அடிச்சு, அவரை கடத்துவாரு. நான் ஃபர்ஸ்ட் பாத்ததும் பெரிய ரௌடின்னு நினைச்சுட்டேன். ஆனா, சந்திரமுகி பெரிய பாம்பு மாதிரி, வருவாரு போவாரு, கதைல எந்த பாதிப்பும் இருக்காது. சப்ஜெக்டோட பேரு மேங்கோ. சப்ஜெக்ட்னால பேச முடியும்,நடக்க முடியும். சப்ஜெக்ட் 20 வருஷமா அந்த வீட்ல இருக்கு. ஆனா, சப்ஜெக்ட்க்கும் அந்த வீட்டுக்கும் என்ன உறவுன்னு டைரக்டருக்கே தெரியாது. கிருஷ்ணாவுக்கு(மேங்கோ மேன்) நல்ல வாய்ப்பு கிடைச்சதா நினைச்ச கிருஷ்ணா ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம்...

ஒரு லாஜிக் இல்லாத மசாலாக் கதைல அஜீத்,நயன்தாரா மற்றும் படத்தோட விறுவிறுப்பு எல்லாம் சேர்ந்து சராசரி தமிழனை சந்தோசப்படுத்தி இருக்கு... படமும் நல்ல ஓடி இருக்கு. ஆனா, ஒரு மாதிரி கதைல நடிக்குற அஜீத் என்ற குதிரை மேல மக்கள் இன்னும் எவ்வளவு நாள் சலிக்காம பணம் கட்டுவாங்க??

-நன்றி
ச.சக்திவேல்


1 comment:

  1. ரொம்ப நல்ல விமர்சனம். நல்லா அலசியிருக்கீங்க :-)

    amas32

    ReplyDelete