Categories

Monday 28 December 2015

வீட்டுக் கடன் வாங்க கையேடு


'லோன் வாங்க லோலோவென அலைபவர்களே....' எனச் சொல்வதை விட 'லோன் கொடுக்க லோலோவென..' அலைகிறார்கள் என்பதே இன்றைய காலத்திற்கு சரி...



வீடு வாங்கும் எண்ணத்தில் உள்ள பல நடுத்தர வர்க்கத்தினரும் கடன் தரும் வங்கிகளை நம்பியே வாங்குகின்றனர்..ஆனால் கடன் தரும் வங்கிகளை அணுக பல முறை யோசிக்க வேண்டியுள்ளது..ஒரு முறை அணுகிவிட்டால் பல முறை வரும் அலைப்பேசி அழைப்புகளை தவிர்க்க இயலாதே... 'ஹலோ..எனக்கு வீடு வாங்குற ஐடியாவே இல்லங்க... பராவயில்ல சார்..ஹோம் லோன் எடுத்துக்கோங்க சார்...ரொம்ப சீப் இன்ட்ரஸ்ட் ரேட்..இல்லனா..கார் லோன்..பெர்சனல் லோன்' என்றபடி 'பெட்ரோமேக்ஸ் இல்லனா இந்த தீப்பந்தம்...' என்ற அளவில் தான் அழைப்புகள் வருகிறது... இதனாலே பலர் உண்மை ருசி உணரும் முன்னே, உடனே சுட்டு அப்படியே பேப்பரில் எடுத்து நசுக்கி சாப்பிடும் டீக்கடை பஜ்ஜி போல அவசர அவசரமாக கடன் வாங்கி வீடு வாங்குகின்றனர்...இதில் வங்கிக்கும்,கட்டிட  உரிமையாளர்/பில்டர்க்கும் இடையில் நடக்கும் டென்னிஸ் பந்தாட்டத்தில் நாம் பந்தாய் சுழன்று 'எப்படியாவது வீட்டு வாங்கினா போதுமடா சாமி' என்று பல சமயம் நாம் நினைப்போம். இதற்குள்ளாவே, நம்மிடமிருந்து இரு பக்கமும் சில பல கணக்குகளைக் காட்டி காசைக் கல்லா பெட்டியில் போட்டிருப்பார்கள்... பின்னர் ஆசுவாசமாய் உட்காரும் போது தான் அந்நியன் குரலில் 'இது நாம் கோட்டைவிட்ட தருணங்களின் தொகுப்பு' என மனச்சாட்சி லேட்டா சூட்டிங் வந்த நடிகை போல கேரவேனில் கிளம்பி வரும். அப்போ வாயில்லா வாக்கி டாக்கி போல வருத்தப்படக் கூடாது என்பதற்கே இந்த கையேடு...

லோன் வாங்கும் பரிவர்த்தனையை, 2 பகுதியா நம்ம வசதிக்காக பிரிச்சுக்கலாம்...

1) பேங்க் நம்மகிட்ட என்ன எதிர்பாக்குது(வேறென்ன..நம்ம காசைத் தான் :-P)
2) நாம பேங்க்கிட்ட என்ன எதிர்பாக்கலாம்(டிஸ்கி:24 மணி நேரமும் லோன் கொடுக்கணும்,எவ்வளவு கேட்டாலும் கொடுக்கணும், ஆனா ஃப்ரீயா கொடுக்கணும் எனச் சொன்னால் சந்தானம் சொல்ற மாதிரி நீங்க கடல் மண்ல தான் வீடு கட்ட முடியும்)

பேங்க் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன?

சுருக்கமாகச் சொன்னால்.. நீங்க யார்? உங்க வருமானம் என்ன? என்ன வாங்க போறீங்க? இவ்வளவு தான்..வாசிக்க நல்லாயிருக்குல... அதையே விரிவாச் சொன்னா வயித்தக் கலக்கிடும். இதோ வரிசைல வருது பாருங்க..

1) உங்க புகைப்படங்கள் சில... இல்ல பல
2) உங்களுக்கான அடையாளச் சான்று(Driving License,Pan Card etc)
3) நீங்கள் எங்கு தங்கி இருக்கிறீர்கள் என்பதற்கு சான்று(EB/Telephone bill,HR letter,Ration Card,Aadhar card etc) வாடகை வீட்டில் உள்ளவர்கள் பாடு கொஞ்சம் திண்டாட்டம் தான்
4) உங்க PAN Cardக்கு சான்று
5) உங்க வருமானச் சான்று(3 மாத Pay Slip)
6) வருமான வரிச் சான்று(2 வருட Form 16,Returns Submission,Returns Acknowledgement)
7) வருமான வைப்பு வங்கி கணக்கு சான்று(6 மாத Bank Statement)

கட்டிடம் சம்பந்தமாக...இங்க தான் 'சிவாஜி' படத்துல சுஜாதா வசனமெல்லாம் காதுல கேட்கும்..Form 59A,67B...இந்த இடம் செவ்வாய் கிரகத்துல வேற ஒருத்தர் பேர்ல பதிவாகி இருக்கே அப்படின்னு குழப்புவானுக..

1) Sale deed Agreement(இடம் வாங்கிய/வாங்க சம்மதித்த சான்று)
2) Certificate/Form A (இது என்ன எழவுன்னே இது வரை தெரியல.பில்டர் கொடுப்பான்.அதை நாம் அங்க கொடுக்கணும்.வீட்டு விவரம் தான் இருக்கும்)
3) Certificate/Form B(இதுவும் கிட்டத்தட்ட அதே எழவு தான்.வில்லங்க சான்றிதழ் கணக்குல இதைச் சேர்த்துக்கலாம்)
4) வீட்டு/Flatக்கு பொறியாளர் அங்கிகரீத்த வரைபடம்(Approved Plan)
5) அந்த பகுதியோட வரைபடம்(Approved layout of the Area)

இவ்வளவே இவ்வளவு தான். இதற்கு மேலே ஒரு ஆவணம் கூட கேட்கமாட்டாங்க..அப்படி நினைச்சா அது உங்க தப்பு. சம்பந்தா சம்பந்தமில்லாம உங்க School Fees Receipt ரேஞ்சுல ஏதாவது கேட்டு சரிபார்த்துவிட்டு லோன் கொடுத்துவிடுவார்கள்...

பெருநகரங்களில் பிரபலமான கட்டிட நிறுவனமென்றால், அவர்களே எல்லா ஆவணமும் சரியாக தயார் செய்து தந்துவிடுவார்கள்.இல்லையேல், உங்கள் நாக்கு அனுமார் வால் போல் தள்ளுவதை உங்கள் சுற்றமே பால்கனி டிக்கெட் வாங்கி ரசிக்கலாம்.

எல்லா வங்கியுமே வட்டி வசூலிப்பதில் இப்பொழுது ஒரே முறையைத் தான் பின்பற்றுகின்றன. அதாவது,EMI(Equated Monthly Installment) முறை. மாதம் சரியான அளவில் பிரித்து தவணை செலுத்தமாறு சொல்லிவிடுவார்கள். அதற்குள்ளேயே, ஒரு பகுதி வட்டியும், மறு பகுதி அசலும் இருக்கும். ஆரம்பத்தில் வட்டி அதிகமாகவும், பிற்காலத்தில் அசல் அதிகமாகவும் இருக்கும். உதா: 20 லட்சம் 20 ஆண்டுக்கு 10 சதவீதம் வட்டி என வைத்தால், மாதம் கிட்டத்தட்ட 20 ஆயிரம் EMI வரும். முதல் மாத 20 ஆயிரத்தில், 19900 வட்டியும் 100 அசலும் இருக்கும். மாதா மாதம் அசல் உயர்ந்து 20ஆம் ஆண்டு முடிவில் 19900 அசலும் 100 வட்டியும் எனக் கடன் அடையும்

வட்டி விகிதம் குறைவு என விளம்பரம் பார்த்தால்,எத்தனை வருடமென முதலில் பாருங்கள். வருடம் அதிகமாக அதிகமாக வட்டியும் கூடும். உதா: மேலே கூறிய அதே கணக்கில் 9.5 சதவிகிதம் ஆக்கி 30 வருடம் ஆக்கிவிடுவார்கள். எல்லா கணக்குகளுமே வீடு வாங்கும் தனி தபர் வருமானம்/பொருளாதார நிலை பொறுத்தே. என்னால் மாதம் அதிகம் பட்ட இயலாது, ஆனால் அதிக வருடம் குறைந்த தொகை கட்டுவேன் அல்லது மொத்தமாகவோ பணம் கிடைக்கும் பொழுது அசல் தனியே கட்டுவேன் என்பவர்கள் அதிக வருடம் எடுத்தக் கொள்ளலாம். நிற்க. இதெல்லாம் அடிப்படை.

அடுத்ததாக, முக்கியமான கட்டத்துக்குப் போகலாம்...'எல்லாரும் மூக்கு உரசுறளவுக்கு நல்லா ஸ்கிரீனை உத்து பாத்துக்கோங்க...'

நாம என்னவெல்லாம் வங்கி கிட்ட இருந்து எதிர்பார்க்கலாம்..அல்லது எங்கெல்லாம் கவனமா இருக்கணும் எனப் பார்க்கலாம்.

வட்டி போக, வங்கிகளுக்கு பல வகைகளில் ஒரு கடன் மூலம் லாபம் வரும். அது தான் நாம் பார்க்கப் போவது.

இதுவும் இரண்டாப் பிரிக்கலாம். கடன் கைக்கு வரும் முன்/வந்த பின் உள்ள எதிர்பார்ப்பு/செலவு. வங்கியை எப்படி தேர்வு செய்வது என்பதே இதை வைத்து தான் இருக்க வேண்டும்..

1) Processing Fee. இது வங்கியோட லாபம்.இதை குறைக்கவோ/கூட்டவோ அவங்களுக்கு வாய்ப்பிருக்கு 250 முதல் 5000,6000 அல்லது வாங்கும் கடனில் 0.5% என பலவாறாக வாங்குவார்கள். பேசிக் குறைக்க முயற்சிக்கலாம்

2) Legal Advice & Valuation Fee. நமது ஆவணங்களை சரி பார்க்க வக்கீலுக்கும். நாம் வாங்கப் போகும் வீட்டின் அளவு/மதிப்பீட்டை சரி பார்க்க பொறியாளருக்கும் கொடுக்கப்படும் பணம் இது.இவர்கள் வங்கிலேயே வேலை பார்த்தால் வங்கிகள் இந்தப் பணத்தை வசூலிப்பதில்லை.மாறாக, வெளி சந்தையில் உள்ள வக்கீல்/பெறியாளரை பயன்படுத்தும் வங்கிகளே இதை நம் தலையில் கட்டுவர். பெரும்பான்மை வங்கிகளில் இந்தத் தொகை உள்ளது. அந்த வங்கியே அங்கிகரீத்த/Approved கட்டுமானம் என்றால் இந்த தொகை வசூல் செய்யப்படுவதில்லை. எனவே, நீங்கள் வாங்கும் கட்டுமானத்தை எந்த வங்கியாவது அங்கிகரீத்து இருந்தால், அவர்களிடம் கடன் வாங்குவதே  நல்லது.

3) Stamp paper Fees. இது வங்கிக் கடன் பத்திரம் வாங்க ஆகும் செலவு. 250ரூபாய் ஆகும் இந்த செலவுக்கு, வங்கி செலவு செய்யாது. நாம் தான் செய்ய வேண்டும்.

4) Loan Mortgage Registration Fees. வங்கியிடம் நாம் அடமானம் வைக்கும் நமது பத்திரம் மற்றும் இதர ஆவணங்கள் அரசிடம் பதிவு செய்ய வேண்டும். இரு தரப்பின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மைக்காக இது. அதற்கான செலவு 0.5%. அதாவது 20 லட்சத்துக்கு 10 ஆயிரம். இது அரசுக்கு செல்லும் பணம். தவிர்க்க இயலாச் செலவு.

இதுவரை சொன்னதெல்லாம் கடன் வாங்கும் முன் ஆகும் செலவு. இதையே சில வங்கிகள் தெளிவாச் சொல்லாது. இதுக்கு பிறகு சொல்றது எல்லாமே உள்குத்து. பல பய ஊமைக் குத்து வாங்கிட்டு வீங்கிட்டு சத்தமில்லாம சுத்துவாங்க..

5) Repayment Penalty Charge. நடுவில் பகுதி,பகுதியாக அசலைத் திரும்பச் செலுத்தும் போது வாங்கப்படும் பணமிது.பொதுவா எல்லா வங்கியும் வாங்குவதில்லை என்றாலும், சில வங்கிகள் குறிப்பிட்ட அளவுக்குக் கீழே பணம் செலுத்தினால், செலுத்தும் பணத்தில் 2-5% பணத்தை எடுத்துக் கொள்வர். கவனம் தேவை.

6) Late Payment Charge. ECS முறைப்படி மாதா மாதம் நமது வங்கி கணக்கில் இருந்து EMI தானாகவே எடுக்கப்படும். அப்பொழுது தவணைத் தேதியில் போதுமான பணமில்லையென்றால், இந்த அபராதம் விதிக்கப்படும். இது 450-600ரூ வீதம் தினமும் எடுக்கப்படும்

7) Pre Closure Charges. கடனின் முழு ஆயுளுக்கு முன், கடனை அடைத்துவிட்டால் அதற்கு சில வங்கிகள் இந்த அபராதம் விதிக்கின்றனர்

8) Document maintenance charges நமது வீட்டு பத்திரம் முதலிய முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வேறு நகரிலோ/நகரின் வேறு பாதுகாப்பாக இடத்திலோ வங்கி பராமரிக்கும்.அந்த செலவையும் சில வங்கிகள் நம் தலையில் கட்டுவார்கள். கவனம் தேவை.

9) Document Recovery charges. கடன் கணக்கை பாதியிலேயே அசல் கட்டி முடித்துவிட்டால்,உங்கள் ஆவணங்களை பாதுகாப்பான இடத்தில் இருந்து எடுத்து உங்களிடம் திரும்பக் கொடுக்க சில வங்கிகள் இந்த வகைத் தொகையை வசூல் செய்யும்.

10) Loan Tenure changing charges. உதா: 15 வருடமா உள்ள கடன் ஆயுளை 20 வருடமா நடுவில் கூட்டினால், உங்கள் EMI குறையும். இது போல, ஆயுளைக் கூட்டவோ/குறைக்கவோ ஒரு தொகையை வங்கிகள் விதிக்க வாய்ப்புள்ளது.

11) Interest Rate change/Conversion Charges இக்காலகட்டத்தில் அனைத்து வங்கியின் வட்டி விகிதமும் நிரந்தர வட்டியல்ல. 3 மாதத்திற்கு ஒரு முறை RBI வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை கூட்டவோ/குறைக்கவோ செய்யும். அதன் அடிப்படையில் நாம் வாங்கிய கடனின் வட்டியும் மாறும். ஆனால், சில வங்கிகள் கூட்ட வேண்டிய பொழுது வட்டியைக் கூட்டும். ஆனால், தாமாக குறைக்காது. அதற்கு நாம் கோரிக்கை வைக்க வேண்டும், அதன் அடிப்படையில் இந்த Conversion charges தொகையை கட்டிய பின்னரே வட்டி குறைக்கப்படும். அநியாயமா இருக்குல்ல... இதெல்லாம் கண்டிப்பா கேட்டுட்டு கடனுக்கு முயற்சி செய்யுங்க...

12) Statement charges. வருசம் ஒரு முறை வங்கியே கடன் கணக்கு ஒரு வருடத்திற்கான statement கொடுத்துவிடும். இடையில் போய்
Statement கேட்டால் அதற்கு தனியாக பணம் செலுத்த வேண்டும்

இன்னும், பல வகையான அபராதம்/கட்டணம் வங்கிகளில் உண்டு!!!இதையெல்லாம் கேட்டு தெளிந்த பின்னரே அந்த வங்கியில் கடன் வாங்குவதன் லாப/நஷ்டங்களை ஓரளவு கணிக்க முடியும். இது போக, ஒவ்வொரு வங்கியும் பல வகையான வீட்டுக் கடன் திட்டங்களை வைத்திருக்கும்.ஒவ்வொரு திட்டத்துக்கும் ஒரு தனிச்சிறப்பும் அது ஒரு வகையான வாடிக்கையாளரை குறி வைத்து வடிவமைக்கப்பட்டு இருக்கும். உதாரணத்துக்கு NRI,நகர்ப்புறம்,கிராமப்புறம் என வாடிக்கையாளர்களின் இடத்திற்கேற்ப வட்டி,கால அளவு,கட்டணம் அனைத்தும் மாறுபடும். ஆனா, நம்ம வங்கி ஆளுங்க பரோட்டா கடைல பார்சலுக்கு அவசரமா பரோட்டா கட்டுனா மாதிரி வாடிக்கையாளருக்கு எதையும் விளக்காம ஏதோ ஒரு போனியாகாத திட்டத்தை விற்பனை செய்துடுவாங்க. பொதுத்துறை வங்கிகளில் உங்களுக்கு விளக்கிச் சொல்லவே ஆள் இருக்கமாட்டாங்க. மொத்தத்துல, வாடிக்கையாளர் பாடு திண்டாட்டம் தான்.

SBI Max Gain திட்டம் வாடிக்கையாளருக்கு அதிக பயனைத் தருகிறது. நீங்க உபரியாகக் கிடைக்கும் பொழுதெல்லாம் அசலைத் திருப்பி செலுத்தலாம். திருப்பி செலுத்திய அசலுக்கும் கடன் அளவுக்கே வட்டி போட்டு உங்கள் கணக்கில் வரவு வைத்துவிடுவார்கள். அவசரமான பணத் தேவையின் பொழுது நீங்களே இந்தப் பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளலாம். மற்ற திட்டங்களில், ஒரு முறை பணத்தைத் திருப்பி செலுத்திவிட்டால் அவ்வளவு தான் அந்தப் பணத்தை மறந்துவிடலாம். இதனால் பலரும் அசலை திருப்பிச் செலுத்த பலத்த யோசனை செய்ய வேண்டும்.
இதைப் போலவே மற்ற வங்கிகளிலும் சில திட்டங்கள் உள்ளன. Overdraft cum Home loan எனக் கேட்டால் விவரம் தெரியும். ஆனால், இத்திட்டங்களில் எல்லாம் நாம் EMI அல்லாது திருப்பிச் செலுத்தும் தொகைக்கு 80Cன் கீழ் வரிச்சலுகை கிடையாது.

ஆங் வரிச்சலுகை! சொல்ல மறந்துட்டேனே...பொதுவா வீட்டுக்கடன் அனைத்திற்கும் வரிச் சலுகை உண்டு. நாம் திருப்பி செல்லுதும் அசலுக்கு 80C பிரிவிலும், வட்டிக்கு Losses From Property என்ற பிரிவிலும் வரிச்சலுகை உண்டு. ஆனால், இதெல்லாம் கட்டி முடித்த வீட்டிற்கே... கட்டுமானம் முடியாத வீட்டிற்கு எந்த வரிச் சலுகையும் கிடையாது. கட்டி முடித்த பழைய அசலை மட்டும் 80Cயில் 2 லட்சம் வரை காட்டலாம்.

இதெல்லாம் போக, இயற்கைப் பேரழிவால் வீட்டுக்கு ஏதாவது நேர்ந்தால் வங்கி மற்றும் வாங்குபவர்க்கு எந்த இழப்பும் ஏற்படாமலிருக்க காப்பீடு எடுக்க SBI போன்ற வங்கிகள் கட்டாயப்படுத்துகின்றன. ஆனால், இதைக் கடைசியில் கடன் உறுதியான பின்னரே சொல்கிறார்கள்.

இது போக, நீங்கள் விருப்பபட்டால் உங்களுக்கும் ஒரு காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். அதன்படி, உங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் உங்கள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உங்கள் வீடு உங்கள் குடும்பத்திற்கு சொந்தமாகிவிடும்.

இன்னும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருக்கு... ஹம்மம்... சும்மாவா சொன்னாங்க.... வீட்டுக் கட்டிப் பாரு, கல்யாணத்தப் பண்ணிப் பாருன்னு... 

9 comments:

  1. வணக்கம்
    நிதி சார்ந்த கருவிகளை அடிப்படையாகக் கடன் மற்றும் அடமானங்கள் அனைத்திற்கும் நிதி வழங்கும் ஒரு நிறுவனத்தை நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். உங்களுடைய கடன்களை அழிக்க உங்களுக்கு ஒரு அவசர கடனுதவி தேவை அல்லது உங்களுடைய வியாபாரத்தை மேம்படுத்த ஒரு மூலதனக் கடனை உங்களுக்கு வேண்டுமா? நீங்கள் வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்டதா? இனிமேலும், உங்கள் நிதி சிக்கல்களுக்காக நாங்கள் இங்கு இருக்கிறோம். தெளிவான மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில், மக்களுக்கு, நிறுவனங்களுக்கும் சமூகங்களுக்கும் 2% வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகிறோம். உங்கள் விருப்பத்திற்கான எந்தவொரு நிதி கருவியின் உடனடி மற்றும் விரைவான விநியோகத்திற்கும் நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். எந்தவொரு கடன் காசோலை தேவை, 100% உத்தரவாதம்.

    எங்களுக்கு மின்னஞ்சல்: (PATRICIJABODNAROVALOANFIRM@GMAIL.COM) விண்ணப்பிக்க.

    ReplyDelete
  2. அஹ்மத் முஸ்தபா ஹஸன் நிதி தற்போது திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது $ 150,000,000.00 திட்டங்கள், வணிக வேலை, வணிக வளர்ச்சி, நீண்ட கால திட்டங்கள் தொடங்கி முதலீடு. வணிக மாதிரிகள், வணிகத் திட்டம், முதலீட்டு வியாபாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களின் தெளிவான விளக்கங்கள், வெளிப்படையான பரிவர்த்தனை அமைப்புகளுடன் புதுமையான மற்றும் இலாபகரமான திட்டங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டால், IT சேவைகள், அவுட்சோர்சிங் சேவைகள், வடிவமைப்புகள் ஆகியவற்றில் கவர்ச்சிகரமான வலைத் திட்டங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்படும். ஆரம்பத்தில் நான் ஒரு டிஜிட்டல் திட்டத்தை கருத்தில் கொண்டேன்.

    கருத்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டது: அசல் யோசனைகள் அல்லது வணிகச் சந்தையில் தோன்றும் ஒரு புதிய அம்சம் மற்றும் தற்போதுள்ள அனலாக்ஸில் சாத்தியமான நன்மைகள், வெளிநாட்டு சந்தைகளில் இருந்தால், பிற அனலாக்ஸின் தெளிவான நன்மை.
    இந்த பகுதி முக்கியமானது அல்ல. 1 முதல் 25 ஆண்டுகள் வரை செலுத்தும் காலம்.

    ஒவ்வொரு விஷயத்திலும் முதலீட்டாளர்கள் மற்றும் ஒத்துழைப்புகளின் அளவு தனித்தனியாக தீர்மானிக்கப்படுகிறது.
    நாங்கள் வியாபாரத் திட்டங்களை முறையிட வாடிக்கையாளர்களை மட்டுமே தொடர்பு கொள்கிறோம்.

    நீங்கள் மின்னஞ்சல் மூலம் என்னை தொடர்பு கொள்ளலாம்: amh_finance@outlook.com

    ReplyDelete
  3. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

    நல்ல நாள்

    நீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:

    1 நிறுவனத்தின் கடன்
    2. வணிக கடன்
    3. குடியிருப்பு கடன்
    4. ஆட்டோ கடன்
    5. கார் கடன்

    நாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.

    எங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.

    Whatssap எண்: +2347061892843
    ஸ்கைப்: fredlarry12

    கையொப்பமிடப்பட்ட
    மேலாளர்
    திரு ஃப்ரெட் லாரி

    ReplyDelete
  4. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

    நல்ல நாள்

    நீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:

    1 நிறுவனத்தின் கடன்
    2. வணிக கடன்
    3. குடியிருப்பு கடன்
    4. ஆட்டோ கடன்
    5. கார் கடன்

    நாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.

    எங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.

    Whatssap எண்: +2347061892843
    ஸ்கைப்: fredlarry12

    கையொப்பமிடப்பட்ட
    மேலாளர்
    திரு ஃப்ரெட் லாரி

    ReplyDelete
  5. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

    நல்ல நாள்

    நீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:

    1 நிறுவனத்தின் கடன்
    2. வணிக கடன்
    3. குடியிருப்பு கடன்
    4. ஆட்டோ கடன்
    5. கார் கடன்

    நாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.

    எங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.

    Whatssap எண்: +2347061892843
    ஸ்கைப்: fredlarry12

    கையொப்பமிடப்பட்ட
    மேலாளர்
    திரு ஃப்ரெட் லாரி

    ReplyDelete
  6. வணக்கம்,
    உங்களுக்கு அவசர கடனுதவி வேண்டுமா? அல்லது நிதி உதவி தேவைப்பட்டால், உலகெங்கிலும் குறைந்தபட்ச வருடாந்திர வட்டி விகிதத்தில் 2% குறைவாக, உலகெங்கிலும் உள்ள மக்கள், நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளுக்கு உதவ 5,000 டாலர்களை 100,000,000 டாலர்களுக்கு கடன்களை வழங்குகிறோம். ஆர்வமுள்ளவர் மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும்: (stefanjonesloanfirm@gmail.com)

    கடன் வழங்க.

    ReplyDelete
  7. நான் ஒரு முதலீட்டாளர் / கடனளிப்பவர். நாம் விதை மூலதனம், ஆரம்ப கட்ட துவக்க முயற்சிகளை, தற்போதுள்ள எல்.எல்.சி. மற்றும் உடனடி நிதியளிப்புடன் மொத்த முதலீட்டு திட்டங்களை விரிவுபடுத்துதல் மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம். மிகப்பெரிய பெருநிறுவன மற்றும் தனியார் பின்னணி கொண்ட மம்மத அளவிலான இணைப்புப் பட்டியலோடு $ 50M பல திட்டங்கள், மூலதன முதலீடுகள், ஈக்விட்டி அடமானங்கள் மற்றும் எமது நிறுவனத்தின் 3 வெற்றிகரமான கொள்கையைத் தக்க வைத்துக் கொண்ட வணிகப் பங்காளருடன் நீண்டகால வர்த்தக உறவுகளைத் திறந்துவிடலாம். உள்ளூர் கடனாளர்களிடமிருந்து குறைவாக உள்ள நலன்களுடன் கடன்கள் (அனைத்து வகையான கடன்கள்) வடிவத்தில் தனிப்பட்ட / நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்குவோம். மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம்: Phoenixsecuredloans@gmail.com
    டெல் 1: +1 (864) 210-5777
    டெல் 2: +1 (845) 643-6121

    அங்கேலா பீட்டர்சன்

    ReplyDelete
  8. Are you an individual businessman or a business organisation that wishes to expand in business ??, we offer financial instrument such as BGs, SBLCs,MTNs, LCs, CDs and others on lease and sales at a rate of 4%+2% of the face value and reasonable conditionfrom a genuine provider. You are at liberty to engage our leased facilities into trade programs as well as in signatory project(s) such as Aviation, Agriculture, Petroleum, Telecommunication and any other project(s) etc.

    Contact : Mr. Raymond Doison
    Contact Email: crusaderbroker.bgassurance@gmail.com
    skype:crusaderbroker.bgassurance
    Whatsapp : +380 50 922 4887

    With our financial/bank instrument you can establish line of credit with your bank and/or secure loan for your projects in which our bank instrument will serve collateral in your bank to fund your project.

    We deliver with time and precision as set forth in the agreement. Our terms and Conditions are reasonable and we work directly with issuing bank lease providers, this instrument can be monetized on your behalf for upto 100% funding. Intermediaries/Consultants/Brokers are welcome to bring their clients and are 100% protected. In complete confidence, we will work together for the benefits of all parties involved.

    All relevant business information will be provided upon request.

    BROKERS ARE WELCOME & 100% PROTECTED!!!

    If Interested kindly contact me via

    Email:~ crusaderbroker.bgassurance@gmail.com

    Skype ID:crusaderbroker.bgassurance

    serious enquiry only.

    Genuine Provider for BG/SBLC(Bank Guarantee/Standby Letter of Credit)
    I am Direct Provider's Mandate of BG & SBLC Lease 100% protected.

    ReplyDelete
  9. Are you an individual businessman or a business organisation that wishes to expand in business ??, we offer financial instrument such as BGs, SBLCs,MTNs, LCs, CDs and others on lease and sales at a rate of 4%+2% of the face value and reasonable conditionfrom a genuine provider. You are at liberty to engage our leased facilities into trade programs as well as in signatory project(s) such as Aviation, Agriculture, Petroleum, Telecommunication and any other project(s) etc.

    Contact : Mr. Raymond Doison
    Contact Email: crusaderbroker.bgassurance@gmail.com
    skype:crusaderbroker.bgassurance
    Whatsapp : +380 50 922 4887

    With our financial/bank instrument you can establish line of credit with your bank and/or secure loan for your projects in which our bank instrument will serve collateral in your bank to fund your project.

    We deliver with time and precision as set forth in the agreement. Our terms and Conditions are reasonable and we work directly with issuing bank lease providers, this instrument can be monetized on your behalf for upto 100% funding. Intermediaries/Consultants/Brokers are welcome to bring their clients and are 100% protected. In complete confidence, we will work together for the benefits of all parties involved.

    All relevant business information will be provided upon request.

    BROKERS ARE WELCOME & 100% PROTECTED!!!

    If Interested kindly contact me via

    Email:~ crusaderbroker.bgassurance@gmail.com

    Skype ID:crusaderbroker.bgassurance

    serious enquiry only.

    Genuine Provider for BG/SBLC(Bank Guarantee/Standby Letter of Credit)
    I am Direct Provider's Mandate of BG & SBLC Lease 100% protected.

    ReplyDelete