Categories

Saturday, 20 October 2012

கவிதை பிறப்பு







எங்கோ கேட்கும்
உன் குரல் அலைவரிசைக்கேற்ப 
என் எழுத்துக்கள் வரிசையாய் அமர்கின்றன


உன் பனித்துளி 
வியர்வை பார்க்கும்போது எந்தன்
பக்குவபடாத பைந்தமிழும் செம்மையாய் பதபடுகிறது

உன் வாழைப்பூ 
விரல்களின் அசைவுகளால் எந்தன் 
இதயத்தில் வார்த்தை விவசாயம் செய்கிறாய்

உன் இளகிய 
இடையை காணும்போது எந்தன்
மூளை இடைவிடாது இலக்கியங்கள் படைக்கின்றன

உன் கருவிழியில் 
மையல் கொண்ட எந்தன்
மனது கண்மையின் நிறத்தை சொல்கற்றையில் நிரப்புகின்றன

உன் கூரிய கண்
இமை மயிரைக்கண்டு எந்தன் 
புத்தியும் பேனாவும் தம்மை கூர் தீட்டி கொள்கின்றன

உன் நீர் மலர் 
பாதங்கள் படர்வதால் எந்தன் 
பதங்களும் பலவிதமாய் பாமாலை அமைக்கின்றன

என் உதிரம்
அடர்ந்த உயிரின் 
ஒவ்வொரு துளியும் கவிதையாய் பிறந்துவிட்டன...

நன்றி
ச.சக்திவேல்

1 comment: