Categories

Wednesday 12 December 2012

நான் ரசித்த என் கீச்சுக்கள் - பகுதி 1


1) விதைக்க விழையாத விவசாயி,
விளையாத விதைநெல்லை விற்று,
 புசிப்பதற்கு பெயர்.. #கிரேடிட் கார்ட்

2) பிரம்மச்சாரியின் அறையில் உள்ள போர்வை சொல்லும் சோம்பேறிதனத்தின் உச்சம் என்னவென்பதை...

3) மழைக்கும், கவிதைக்கும் என்ன சம்பந்தம் என யோசித்தேன்...
உனை கண்ட பின்பு கவிதையே மழையாய் கொட்டிட கண்டேன்...



4) நின்ற இடத்தில் இருந்து பார்த்தால் எட்டி பிடித்திட முடியாது,
சற்று பின் சென்று பாய்ந்தால்
உயரம் குள்ளமாகும்,உள்ளம் உயரமாகும்.

5) மழை நின்ற போதும், குடையுடன் செல்வது மேகங்கள் மீதுள்ள நம்பிக்கை, வயதான போதும்,குடை ஊன்றாமல் செல்வது கால்கள் மீதுள்ள நம்பிக்கை

6) பின் இரவில்,
பின்னப்பட்ட நினைவுகளால்,
பின்னோக்கி பயணித்து,
பின்னூட்டம் இடுகிறேன் பாதைக்கு,
இந்த போக்கிழந்த பொறியாளன்..

7) இரவுக்கு போர்வையாய் பனி தான் கிடைக்க வேண்டுமா என்ற முனங்கலுடன், போர்வை இல்லாமல் உறங்கும் நடைபாதை நாடோடி...

8) தத்தி தடுமாறும் குழந்தையாய் என்னை நினைத்து வழிநடத்தி செல்கிறது இருள்... விடியலை நோக்கி...

9) இருள் என்ற போர்வை உடுத்தியிருக்கும் வரை,
நிர்வாணம் என்பது பொருளில்லா வார்த்தையே...

10) அமைதியா இருக்குற சந்தும் வேஸ்டு,
ஆப்பாயில் நல்லா வெந்தும் வேஸ்டு...

11) சுதந்திர மணம் பரப்பியவன், இன்று சுகந்திரமாய் பூ மணம் கூட பரப்ப முடியவில்லை... கடை பரப்பியதற்கும் லஞ்சம்... #சுதந்திர தியாகி

12) லேடி பேர்ட் ஓட்டாமல் ரேஞ்சர் ஓட்ட கற்றுக் கொள்ளவதில் துவங்குகிறது... பெண்மைப் புரட்சி


No comments:

Post a Comment