நானும் கொஞ்ச நாளா பாக்குறேன்... நம்ம ட்வீ ப்ஸ் எல்லாம் நெஞ்சம் மறப்பதில்லை பாட்டு பாட ரொம்ப ஆசைப்படுறாங்க.. என்னடா உளறுறேன்னு பாக்குறீங்களா... இல்ல தெளிவா தான் கிறுக்குறேன்...
ஆரம்ப காலத்துல இருந்து நாம கீச்சுன கீச்சு குப்பை எல்லாம் நம்ம சொந்த கணினில சேமிச்சு வைக்க கீச்சகம் (ட்விட்டர்ல) புதுசா நமக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கு.. அதுக்கு பேர் தான் கீச்சு காப்பகம் ("Twitter archive"). இது மூலமா திருவள்ளுவர் காலத்து கீச்சரெல்லாம் தன்னோட பழைய ட்விட்டை மீள் ட்விட்டா போட்டு சந்தை திரும்ப குப்பையாக்கி டார்ச்சர் பண்ணி சந்தோஷப்பட்டுக்கலாம்... அதோட நம்ம கடந்த காலத்தை புரட்டி பாத்து சந்தோசமும் பட்டுக்கலாம்..
நம்ம சக ட்வீப் ராச்கொலு @Razkolu இதை பத்தி என்ன கீச்சுனார்ன்னா...
பழையன புகுதலும், புதியன கழிதலும் #ட்விட்டர் ஆர்கைவ்
இந்த கீச்சு காப்பகம் இன்னும் எல்லாருக்கும் வரல. கொஞ்சம் பயனருக்கு(users) தான் இந்த வசதி வழங்கப்பட்டு இருக்கு... மத்தவங்களுக்கு கொஞ்ச நாள்ல வரலாம். இது வசதி வர என்ன பண்ணலாம்னு கேக்காதீங்க. இது வர்றதுக்காக நீங்க லைட் கம்பத்துக்கு கீழ ஒளி வட்டத்துல நின்னு ஒத்த காலை தூக்கி... தவம் இருந்தாலும் வராது. அது வர்றப்ப தான் வரும்..
இந்த கீச்சு காப்பகம் வசதி நமக்கு தரப்பட்டு இருக்கா அதை நாம எப்படி பயன்படுத்தி கீச்சை தரவிறக்கம் செய்யனும்ன்னு சந்துல குழப்பம் நிறைய இருக்குற மாதிரி தெரிஞ்சுச்சு அதுக்கு தான் இந்த தமிழ் கையேடு..
கீழே உள்ளது போல் உங்கள் கீச்சு கணக்கின் settings மெனுவிற்கு சென்று accounts சப்மெனுவிற்கு செல்லவும்.
அந்த பக்கத்தின் கடைசி வரை ஸ்க்ரால் செய்து சென்று பார்த்தால் கீழே இருப்பது போல் "Request for Archive" என்ற பொத்தான் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் உங்களுக்கு இந்த வசதி கொடுக்கப்படவில்லை என அர்த்தம். அது வரும் நாள் வரை பொறுக்கவும். அந்த பொத்தான் உள்ளவர்கள் அதை அமுக்கவும்.
அந்த பொத்தானை அமுக்கிய பின்னர் கீழே உள்ளது போன்ற ஒரு செய்தி உங்கள் திரையில் வரும்.
ஒரு முறை கீச்சு காப்பக கோரிக்கை எழுப்பிய பின் அந்த வசதி கீழே உள்ளது போல் தற்காலிகமாக தடை செய்யப்படும். ஒரே நாளில் பல முறை இந்த வசதியை பயன்படுத்த முடியாது.
நீங்கள் ட்விட்டரில் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு நாளுக்குள்ளாக, கீழே உள்ளது போன்ற ஒரு பொத்தானுடன் கூடிய மின்னஞ்சல் வரும். அதை அமுக்கவும்.
மேலே கூறிய பொத்தானை அமுக்கிய பின், புதிதாக ஒரு வலைபக்கம் கண் முன்னே விரியும், அதில் கீழே உள்ளது போல் "Download" பொத்தானை அமுக்கி சுருக்கப்பட்ட "tweets.zip" என்ற பைலை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
அந்த "tweets.zip" பைலை அன்கம்பரெஸ் செய்தால், உள்ளே tweets/data/csv என்ற பாதையில் மாத வாரியாக எக்சல் வடிவில் இருக்கும். ஆனால் அதில் தமிழ் எழுத்துக்கள் தெரியாது. எனவே, முதல் பக்கத்தில் கீழே உள்ளது போல் உள்ள "Index.html" என்ற பைலை கூகிள் க்ரோம் உதவியுடன் திறக்கலாம். Internet explorer லில் சில சமயம் சரி வர திறப்பதில்லை. அப்படியே திறந்தாலும் ரொம்பவும் மந்தமான வேகத்தில் உள்ளது.
அவ்வாறு திறக்கப்பட்ட பக்கத்தில், கீழே உள்ளது போல் மாத வாரியாக எத்தனை கீச்சு போட்டோம் என்ற கணக்குடன் அதை அமுக்குவதற்கான கை குறியும் வரும். அந்த அந்த மாத குறியீட்டை அமுக்கி அந்த மாதத்துக்கான கீச்சை எந்த வித இணைய வசதியும் இல்லாமல் படித்து மகிழலாம்.
-நன்றி
ச.சக்திவேல்
good one sakthi ... @sweetsudha1
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete:-) நல்ல விளக்கம் நிச்சயம் தெரியாதவர்களுக்குப் பயன்படும்!
ReplyDeleteநன்றி சுடர்.. :-)
DeleteYou are a good teacher and a socially responsible person!
ReplyDeleteamas32
அப்ப... இருக்குற வேலைய விட்றரலாம்னு சொல்லுறீங்களா.. :) #சும்மா.. நான் நல்ல சோசியல் நெட்வொர்கிங் ஆள் அவ்வளவே.. :))
ReplyDeleteநன்றி.. :)
விளக்கத்திற்கு நன்றி. பயனுள்ள பதிவு :)
ReplyDeleteNICE...!
ReplyDelete