Categories

Saturday 16 February 2013

பொறந்த நாள்

பொறந்த நாள்... இதுல என்ன விசேஷம்? எதுக்காக கொண்டாடுறோம்...



ரோசனை பண்ணி பாத்தா.. மன்னர் காலத்தில் இருந்தே இதை கொண்டாடி இருக்காங்களோன்னு தோனுது... இப்ப கூட சமீபத்துல.. தஞ்சையில ராஜா ராஜ சோழன் பொறந்த நாளுக்கு எல்லா ஜாதிக்காரங்களும் அவர் எங்க ஜாதி தான்னு சொல்லி போஸ்டர் அடிச்சு வாழ்த்தியதை பார்த்தேன்... சரி அதை விடுங்க நமக்கு எதுக்கு அது... பொறந்த நாளை... சிலர் கண்டுகிறதே இல்ல.. சிலருக்காக நண்பர்கள் உறவினர்கள் கொண்டாடுறாங்க... சிலருக்காக ஊரே கொண்டாடுது... சிலர் ஊரையே கொண்டாட வைக்குறாங்க... சராசரி மனுஷங்க பொறந்த நாள் கொண்டாட்டத்தை... அவர் மீது அவரை சுத்தி உள்ளவர்கள் வைத்து இருக்கும் பாசம், நேசம், மரியாதை மற்றும் இத்யாதிகள் தீர்மானிப்பதாக கணிக்கிறேன்.. இது போக பணம் மற்றும் சூழ்நிலையும் தீர்மானிக்குது... இப்ப எதுக்குடா இந்த ஆராய்ச்சின்னு கேக்குறீங்களா.. அட.. இன்னைக்கு என் பொறந்த நாளுங்க... :)

உடனே, நான் இதுவரை செய்த நல்லது கெட்டது... இனிமே செய்யணும்ன்னு நினைக்குற நல்லது.. இதை பத்தி எழுதுவேன்னு நெனச்சுகாதீங்க.. நான் அவ்ளோ பெரிய அப்பாடக்கரும் இல்ல... பூலோக சித்திரகுப்தனும் இல்ல... வாழ்க்கைங்கிறது (கேட்டு தான் ஆகணும் :) ) என்னை பொறுத்தவரை வாட்டர் தீம் பார்க்ல இருக்குற நீர் சறுக்கு மாதிரி.. அதுல போக ஆரம்பிச்சுட்டா அது போற போக்குல தான் நாம போகணும்.. அது சந்தோசமோ, துக்கமோ, பயமோ, பதட்டமோ... அந்த பயணம் முடியுரவரை அனுபவிச்சு தான் ஆகணும்.. அதனால அதை நான் செதுக்குற சிற்பின்னு பில்டப் கொடுக்க மனசு வரல..

எங்க வீட்ல சின்ன வயசுல இருந்து இப்ப வரை என்னை பெத்த ரெண்டு பேரும் பெருசா பொறந்த நாள் கொண்டாடியது இல்ல.. அவங்களுக்கு பதிலா எங்க பொறந்த நாள் சிறப்பா கொண்டாடப்படும்.. நடுத்தர வர்க்க குடும்பத்தில பொறந்த எனக்கு...பிறந்த நாளோட மிக பெரிய சந்தோசமே புது டிரெஸ் கிடைக்குறது தான்... :) அப்புறம் பொறந்த நாளுக்கு பெரியவங்க கொடுக்குற பணத்தை உண்டியலில் போட்டு வச்சி அப்பப்ப எடுத்து பாத்து சந்தோஷப்பட்டுக்குவேன்...  அப்புறம் கோவிலுக்கு போவேன்.. மறுநாள் புது சொக்காய் போட்டுக்கிட்டு ஸ்கூலுல பந்தா காட்டுவேன்.  கூட்டு குடும்பத்துல பொறந்து.. உறவினர் சூழ வளந்த எனக்கு பொறந்த நாள் எப்பவும் போர் அடிக்காது... இது தான் பொறந்த நாள் 12ஆம் வகுப்பு வரை...

அப்புறம் காலேஜ் முதல் வருஷம் ஹாஸ்டல்ல பொறந்த நாள் கொண்டாடுனேன்.. வாழ்க்கைலேயே முதல் முறையா எனக்கு கேக் வெட்டி பொறந்த நாள் கொண்டாடுனேன் 50-60 பேர் புடை சூழ... ஹாஸ்டல் பூரா தண்ணி ஊத்தி விளையாடி.. பாட்டு போட்டு ஆட்டம் ஆடி கொண்டாடிய முதல் பொறந்த நாள்... அப்புறம் காலேஜ் முடியும் வரை ஒவ்வொரு வருசமும் ஒவ்வொரு விதமா நண்பர்கள் கூட பொறந்த நாள் போச்சு... அதனால வீட்டுல இல்லாத குறை தெரியல...

அப்புறம் வேலைக்கு சேர்ந்த முதல் வருஷம் ஆபிஸ்ல வச்சு பொறந்த நாள் கொண்டாடுனாங்க... கூட வேலை பாக்குறவங்க எல்லாம் சேர்ந்து கேக் பப்ஸ் எல்லாம் வச்சி... அது ஒரு புது அனுபவமா இருந்துச்சு... அதுக்கு அடுத்து வந்த வருஷங்கள் எல்லாம் அபார்ட்மென்ட்ல என் கூட வேலை பாத்தவங்க நைட் 12 மணிக்கு கேக் வெட்டி அமைதியா கொண்டாடுனோம்..

என்னோட 25வது பொறந்த நாளை மறக்க முடியாது.. சுமார் ஒரு 20-25 பிரண்ட்ஸ் சேர்ந்து என்னை திணற திணற அடிச்சு, மிதிச்சு, உருட்டி, புரட்டி.. கூட்டி போய் பாத்ரூம்ல உக்காரவச்சு கையில கெடச்ச பேஸ்ட், சாம்பூ, சூ பாலிஷ், சட்னி, சாம்பார், தக்காளி, முட்டை எல்லாம் தலைல ஊத்தி.. கடைசில நான் போட்ட ட்-ஷர்ட் கழட்டும் போது ரெண்டா வந்துச்சு.. அவ்ளோ அடி.. "சண்டைல கிழியாத சட்டையா" டயலாக்கை உண்மை ஆகிட்டாங்க.. முதுகு வீங்கி போய்... ஒரு வாரம் சீட்ல சாயாமலே உக்காந்தேன்... நெனச்சாலே இன்னும் வலிக்குது.. :)

இப்ப எதுக்கு இந்த எஸ்டிடின்னு கேக்குறீங்களா.. இருக்கு வரேன்... இப்படி எல்லாம் கூட்டம் கூட்டமா பொறந்த நாள் கொண்டாடுன நான்.. இந்த வருஷம் இன்னைக்கு பொறந்த நாளை தனியா தி(கொ)ண்டாடினேன்.. ஆபிசுல எனக்கு தனி வீடு கொடுத்துட்டாங்க.. இதை வச்சுக்கிட்டு எப்படி பொழுது போக்குறதுன்னு தெரியாம புக்கு, ப்ளாக்கு, ட்விட்டர்ன்னு பொழுது போக்குறேன்னு நண்பர் கிட்ட சொன்னா, "எனக்கு இப்படி வீடு குடுத்தா தினம் ஒரு பொண்ணை கூட்டி வந்து ஜாலியா இருப்பேன்" அப்படிங்கறான்.. இதையே ஒரு பொண்ணு பண்ணா அதுக்கு நம்ம ஊர்ல என்ன பேருன்னு கேட்டதும் பொத்திட்டான் வாயை... இப்படி பொழுது போக்கவே பல போதி மர யோசனை கேக்குற இந்நேரத்துலையா பொறந்த நாள் வரணும்..

நைட் 12 மணிக்கு நிறைய போன் வரும்ன்னு காத்து இருந்தேன்.. ஒன்னும் வரல...  ஒன்னு ரெண்டு பேஸ்புக் வாழ்த்து மட்டும் வந்துச்சு.. போன வருஷம் ட்விட்டர்ல என் பொறந்த நாளை யாருக்கும் சொல்லல.. இந்த வருஷம் கடுப்புல ட்விட்டர்ல போட்டு விட்டுட்டேன்.. அங்கயாவது வாழ்த்தட்டுமேன்னு.. நல்லா வாழ்த்துன்னாங்க.. அப்புறம் தூங்கிட்டேன்.. லேட்டா எழுந்து ட்விட்டர்ல ரிப்ளை பண்ணிட்டு.. பல் விலக்கும் போது என் 14 வருஷ நட்பு போன் பண்ணான்.. அப்புறம் குளிச்சிட்டு எனக்கு நானே வாங்குன சட்டை,பேண்டை பொய் ஆச்சிரியத்தோட மஞ்சள் தடவி மாட்டிகிட்டேன்.. நானே அதை போட்டோ எடுத்துகிட்டேன்.. எனக்கு நானே வாங்குன சாக்லேட்டை குடுத்துகிட்டேன்.. கை குலுக்கி வாழ்த்த ஆளே இல்லை... அப்புறம் கோவிலை தேடி போனேன்.. ஒரு பெரிய கோவிலை கண்டுப்பிடிச்சி உள்ள மூலவர் பேரை பாத்தா ஆச்சிரியம்.. "சக்திவேல் பெருமான்" தான் சாமி பேர்.. கும்பிட்டுட்டு... பக்கத்துல உள்ள கிருஷ்ணன் கோவிலுக்கும் போயிட்டு.. என் பேர்ல நானே அர்ச்சனை பண்ண சொல்லிக்கிட்டேன்... அப்படியே சரவண பவனை கண்டுபிடிச்சு கேசரி, பொங்கல்,வடை, பில்டர் காபி என சிற்றுண்டியை 12 மணிக்கு முடிச்சேன்.. வீட்டுக்கு வந்ததும் போன்,ட்விட்டர், இந்த பதிவுன்னு கொஞ்சம் பொழுது போச்சு... அப்புறம் தனிமை, வெறுமை சூழ கூடாதேன்னு வெளிய கிளம்புனேன்.. நேரா தியேட்டர் போனேன்.. கொஞ்சம் அன்னியோனியம் இல்லாத நண்பரை படத்துக்கு கூப்பிட்டேன்.. எதிர்ப்பார்த்தபடியே வரலைன்னு சொல்லிட்டார்... அப்புறம் நானே எனக்கு படம் டிக்கேட் புக் பண்ணிட்டு, சாப்பிட போனேன்.. காளான் பிரியாணி சாப்பிட்டு கொஞ்சம் கடைதெருவை சுத்துனேன்.. எதுவும் வாங்கலை... படம் போடும் நேரம் ஆனதும் தியேட்டர் போனேன்.. வாழ்க்கைலேயே முதல் முறையா தனியா தியேட்டர் போனேன்.. ஹிந்தி படம்.. நேத்து என் வயசை கேட்டா 26ன்னு சொல்லி இருப்பேன்.. இன்னைக்கு நான் பாக்க போன ஹிந்தி படம் பேரு "Special 26".. ஏதோ எனக்கும் அந்த படத்துக்கும் வயசு சம்பந்தம் இருப்பது போலவே ஒரு தோற்றம்.. போன வருஷம் ஸ்பெஷல்ன்னு சொல்ற மாதிரி இருந்துச்சு.. ட்விட்டர்ல யாரோ நல்லா இருக்குன்னு சொன்னதுனாலே தான் போனேன்.. படம் நல்லாயில்லன்னா பக்கத்துல இருக்குறவன் சேட்டையெல்லாம் பாத்து வெறுப்பாகனுமேன்னு.. பயத்தோடவே போனேன்... படம் ரொம்ப நல்லா இருந்துச்சு... டைம் போனதே தெரியல... என் தனிமைக்கு நல்ல வடிகால் அந்த படம்ன்னு சொல்லலாம்.. அப்புறம் அப்படியே போய் எனக்கு பிடிச்ச பூரி செட்டை உள்ள தள்ளிட்டு வீட்டுக்கு வந்து இந்த பதிவை இன்னைக்கே எழுதி முடிக்கனும்ன்னு உக்காந்துட்டேன்...

இப்படி தனிமை மட்டுமே துணையா இருந்த இந்த பொறந்த நாளை நான் மறக்கக் கூடாதுன்னு தான் இந்த பதிவு.. இன்னும் இந்த வாழ்க்கையில எத்தனை தினுசா பொறந்த நாள் கொண்டாட போறேனோ...!!!

இப்படி வெறுமை சூழ் தனிமை கூடிய பொறந்த நாள் கொண்டாடியது ஒரு கொடுமை... அதை பத்தி படிக்குறது உங்க கடமை... அவ்வ்வ் :))




12 comments:

  1. கண்டிப்பாக அடுத்த பிறந்த நாளை உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கொண்டாட வாழ்த்துக்கள் சக்தி :-) @ஸ்வீட்சுதா

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு இப்படி ஒரு ஒரு அர்த்தம் இருக்கோ... இதுக்கு தான் அவசர அவசரமா எழுதக்கூடாதுன்னு சொல்றாங்க போல... நன்றி :-)

      Delete
  2. உங்கள் தனிமை தந்த ரோதனையை ரொம்ப அனுபவித்துப் படித்தேன் :-))நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு!!

    amas32

    ReplyDelete
  3. பொறந்தநாள் அதுவுமா இப்படி ஒரு புலம்பலா ?cheer up

    ReplyDelete
    Replies
    1. என்ன தான் சாம்புராணியை மூடி வச்சாலும்.. வாசம் வராமலா.. போயிடும்... :)

      Delete
  4. நண்பா,உங்க போன் நம்பர் குடுங்க அடுத்த முறை என் வாழ்த்து தான் முதல் வாழ்த்தா இருக்கும்..நல்ல பதிவு, என் முதல் பிறந்தநாளை ஹாஸ்டல்ல கொண்டாடியது நினைவுக்கு வருகிறது..:)

    ReplyDelete
    Replies
    1. நன்றி சேது.. :-) உங்களுக்காவது உங்க பிறந்தநாள் ஞாபகம் வந்துச்சே.. :-)

      Delete
  5. 26 வயசாச்சா! சீக்கிர விவாக ப்ராப்திரஸ்து.பை த வே, இங்கேயும் பொறந்த நாள் வாழ்த்துகள். :-)

    ReplyDelete
    Replies
    1. பாட்ஷா படத்துல வர்ற ஐயர் ஞாபகம் வர்றார்.. :-) இங்கேயும் நன்றி :-)

      Delete
  6. Cheer up:))சுதா சொன்னதுபோல் விரைவிலேயே திருமணம் ஆக வாழ்த்துகள் :)) @shanthhi

    ReplyDelete