Categories

Sunday 24 February 2013

தமிழில் கீச்சுவது எப்படி?

அதாகப்பட்டது, சென்னை மாதிரி ஒரு நகரத்துல நீங்க போய் ஒருத்தர் கிட்ட "இந்த இடத்துக்கு எப்படிங்க போகணும்?" அப்படின்னு கேட்டா ஏதோ பட்டிகாட்டனை பாக்குற மாதிரி பாப்பாங்க.. "How to reach there?" அப்படினா தான் பார்வையே மாறும்.. ஆனா கீச்சுலகம் இதுக்கு தலைகீழ். இங்க தமிழ்ல பேசுனா தான் நல்ல மரியாதையும், பதிலும் கிடைக்கும்..
சரி. நாமளும் தமிழ்ல கீச்சலாம் அப்படின்னு முடிவு எடுத்தா முதல்ல எல்லாருக்கும் வர பிரச்சனையே.. "அண்ணே, இதுல எப்படிண்ணே நலந்தானா வாசிக்குறது" அப்படிங்கற கேள்வி தான்.. புதுசா ட்விட்டர்க்கு வர்றவங்க, புதுசா மொபைல் வாங்குறவங்க, லேப்டாப் வாங்குறவங்க எல்லாரும் சந்துல வந்து இதுல எப்படி தமிழ்ல கீச்சுறதுன்னு தான் கேக்குறாங்க.. அவங்களுக்காக தான் இந்த கையேடு...

பொதுவா எல்லாரும் எஸ்எம்எஸ் பண்ணி பழக்கப்பட்டத்தனால அந்த மாதிரியே எதிர்ப்பாக்குறாங்க.. அதாவது athavathunu இப்படி இங்க்லீஷ்ல டைப் பண்ணி ஸ்பேஸ் தட்டுனா தமிழ்ல மாறணும்ன்னு நினைக்குறாங்க.. இதுக்கு பேர் "Transliterator". இது இல்லாமலும் தமிழ் கீபோர்ட் இருக்கு. ஆனா, அதுல 30 எழுத்து தான் இருக்கும். உயிர் மெய் எழுத்து இருக்காது. உ.தா: ழ ன்னு எழுத ழ்+அ போடணும்.  

கணினியில் கீச்சுவது எப்படி? 

1) மைக்ரோசாப்ட் டூல் இன்ஸ்டால் பண்ணிக்கலாம். அது ரொம்ப சின்ன மென்பொருள் தான். பயன்படுத்த வசதியாவும் இருக்கு. Alt+shift சார்ட்கட் கீ யூஸ் பண்ணி ஆங்கிலம் டு தமிழ் மாறிக்கலாம் சுலபமா. சுட்டி(link) கீழ இருக்கு.

http://www.bhashaindia.com/ilit/

2) கூகிளின் டூல் இன்ஸ்டால் பண்ணிக்கலாம். அது ரொம்ப சின்ன மென்பொருள் தான். பயன்படுத்த வசதியாவும் இருக்கு. Alt+shift சார்ட்கட் கீ யூஸ் பண்ணி ஆங்கிலம் டு தமிழ் மாறிக்கலாம் சுலபமா. சுட்டி(link) கீழ இருக்கு.


3) அழகி+ டூல் இன்ஸ்டால் பண்ணிக்கலாம். இதுவும் சின்னது தான். சுட்டி கீழ இருக்கு. (உபயம்: @iammeeru  நன்றி)


4) NHM Writer சாப்ட்வேர். சுட்டி கீழே.


இது போக மொபைலில் 24 மணி நேரமும் கீச்சுறவங்க அதிகம்.

சாதாரண மொபைலில் கீச்சுவது எப்படி?

 உங்க போன்ல ப்ரவுசர் இருக்கு, ஆனா தமிழ் இல்லன்னா உங்க போனை சர்வீஸ் சென்டரில் குடுத்து, தமிழ் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.(உபயம்: @_xcuse_me நன்றி) உங்க போன்ல தமிழ் இருந்தா ரைடிங் லாங்வேஜ் சூஸ் பண்ணி ட்விட் பண்ணிக்கலாம். (உபயம்: @hariveerabahu நன்றி)

எனக்கு தமிழே இன்ஸ்டால் பண்ண முடியாதுன்னு சொன்னா.. கீழே உள்ள தளம் மூலம் ட்விட்டர் யூஸ் பண்ணலாம். அதில் "Transliterate" பட்டன் மூலம் தமிழில் கீச்சலாம். (உபயம்: @ShahLeaks , @_xcuse_me நன்றி)


ஆன்ட்ராய்ட் மொபைலில் கீச்சுவது எப்படி?

உபயம்: @TamilDroid நன்றி

1) சாம்சங்(jellybean, ICS) பயனாளர்களுக்கு. Samsung India IME keyboard (swipe in tamil supported). download link https://www.dropbox.com/s/d4vslphvzrws7ab/SamsungIndiaIME.apk 

2) செல்லினம் ஆப் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். https://www.box.com/shared/ja8f69wm90xx4ws6aon9

மேலும், ஆன்ட்ராய்ட் சம்பந்தமான எந்தவிதமான உதவிக்கும் @TamilDroid யை அணுகலாம்.

ஆப்பிள் போனில்/ஐபேட்டில் கீச்சுவது எப்படி?

இதற்கு App Store போய் நமக்கு தேவையான (கீழே உள்ள) ஆப் தரவிறக்கம் செய்யலாம். ஐபோனை பொறுத்தவரை. தமிழில் டைப் செய்து காப்பி பேஸ்ட் செய்து தான் பயன்ப்படுத்த முடியும்.

1) Social Indian (முழுவதும் தமிழ் விசை உள்ளது)
2) Sellinam
3) Type Tamil
4) Itransliterator

வெட்டியா இருந்த நேரத்துல இதை சேகரிக்க யோசனை தோனுச்சு..அதான் வேலைல இறங்கிட்டேன். 
இது மாதிரி மென்பொருள் பயன்படுத்தி தமிழ் கூறும் கீச்சுலகத்துல நீங்களும் கவுரதையா வாழுங்க மக்களே. 

-நன்றி
ச.சக்திவேல்  

6 comments:

  1. நான் ஆண்டிராய்ட் போன் பயன்படுத்துகிறேன். தமிழில் எழுத KM Tamil Keyboard உபயோகிக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா.. இது வழி தெரியாமல் வருபவர்களுக்கு ஒரு தொடக்கமே.. அதற்கு பிறகு, உலகில் உள்ள கணக்கில்லா மென்பொருளில் அவர்களுக்கு வசதியானதை பயன்படுத்திக் கொள்ளலாம்.. :-)

      Delete
  2. நா nokia 500 use பன்னுரன், நா டுவீட் பன்னுரது இதுல இருந்து ---> http://tamiltweet.apphb.com/Default.aspx . @wathsalan

    ReplyDelete
    Replies
    1. நன்றி.. :-) இந்த சுட்டி தான் நானும் மேல கொடுத்து இருக்கேன்.. :-)

      Delete
  3. பொது சேவைலே நீங்க எங்கேயோ போய்ட்டீங்க ..எனக்கு ரொம்ப உபயோகமா இருந்தது....ரொம்ப நன்றி..:))))))

    ReplyDelete