Categories

Tuesday 26 March 2013

நான் ரசித்த எனது கீச்சுக்கள் பகுதி - 8

1) எல்லா பந்தங்கள் இருந்தும், தனியாய் இருக்கும் அனாதைகள்.. #மாடர்ன் பிரம்மச்சாரிகள்...



2) என் முன்னே இருக்கும் அனைத்தும் சிதறி வெற்றிடம் ஆகிறது...உனை 'பற்றிய' நினைவுகளால்...

3) மரிக்கும் மரங்களை கண்டு மறிக்காத மனங்கள் மரித்த மரங்களாய்...


4) சிலர் வகுக்கும் எல்லைகள் மிகவும் பிடிப்பதாலேயே.. அவை மீறப்படுகின்றன..

5) உன் காந்த நினைவுகளில்,

என் ஏகாந்தத்தை தொலைத்துவிட்டேன்...

6) நீ பேருந்தில் பயணிப்பதாய் நினைத்து கொண்டே... நான் நம் கனவுகளில் பயணித்து கொண்டிருக்கிறேன்...

7) "Doing nothing" is always better than "Nothing doing" raised while "Doing nothing" :))

8) இங்கு மனித சவம் எரிக்கவே, பல மரங்கள் சவமாக்கப்படுகின்றன...

9) மௌனத்தை விட புரிந்து கொள்ள சிரமமான மொழி புன்னகை தான்...

10) வானமோ நீலம்,
கீழே பாத்தா நிலம், உன்னால தான் மூலம், சமையல்ல ஏன் இவ்ளோ காரம்?#கவுஜ கவுஜ

11) அறிவாளியாக காண்பிக்க முற்படும்போதே முட்டாளென நிரூபிக்கிறோம்...

12) எப்பொழுதோ பயன்படுத்தும் கை...
ஆனால் என்றுமே உதவுகின்ற கை... அழுகை.. #கவலையின் வடிகால், இன்பத்தின் உச்சம்...

13) சாவதற்காக மட்டுமே படைப்படுகின்ற உயிரினம் பிராய்லர் கோழிகள்...

14) மழையை ரசிக்கும் எவரும், மரங்களை ரசிப்பதில்லை போலும்...இல்லையேல் மழை வேண்டுவோர்..மரங்களை நட்டிருப்பர்..

15) நடுநிசியில் விழிக்கும்போது,எனை புன்னகையுடன் உறங்க வைக்கும் இசைக் கருவி..பிறை நிலவாய் தொங்கும் கால்களின் கொலுசுகள்.. #தொட்டிலில் குழந்தை

16) கடவுள் நமக்கு சேவை செய்ய அடிமையாய் அனுப்பிய மழை...
இங்கு வந்ததும் நம்மை அடிமைப்படுத்துகிறது தன் வசீகரத்தால்...

17) போராட்டங்கள் நிறைந்ததே வாழ்க்கை.. #அரசியல்வாதிக்கு மட்டும் அது போலியாக பல நேரங்களில்...

18) எனது திறமை என்னவென்பதே எனை சுற்றி உள்ளவர்கள்களால் நிர்ணயிக்கப்படுகிறது.. #எனை கேட்பதில்லை...

19) நீ மரிக்கும் தருணத்திலும் அனைவரும் இன்பமாய் இருப்பதால்..நீ என்பது துன்பமென அர்த்தமில்லை.. #2012

20) பண போதையில் மயங்கி கிடக்கும் பலருக்கு..
பசி போதையில் மயங்கி கிடக்கும் மனிதனின் வலி புரிவதேயில்லை..

5 comments:

  1. உங்கள் கீச்சுக்களையே பதிவாய் போட்டது ஒரு நல்ல முயற்சி! வாழ்த்துகள்! :-)

    amas32

    ReplyDelete
    Replies
    1. நன்றி :-) இதே மாதிரி இதுக்கு முன்னே இன்னும் ஏழு பகுதி போட்டு இருக்கேன். :-)

      Delete
  2. உங்கள் பெயர்கேற்ப உங்கள் கவிதைகளும் சக்தி வாய்ந்தவைகளை இருக்கின்றன...love it ..!!!!!

    ReplyDelete