Categories

Tuesday 26 March 2013

கணினி மற்றும் அலைப்பேசியில் தமிழில் எழுத கையேடு





நாமளும் தமிழ்ல எழுதலாம் அப்படின்னு முடிவு எடுத்தா முதல்ல எல்லாருக்கும் வர பிரச்சனையே.. "அண்ணே, இதுல எப்படிண்ணே நலந்தானா வாசிக்குறது" அப்படிங்கற கேள்வி தான்..



புதுசா ட்விட்டர்/பேஸ்புக்குக்கு வர்றவங்க, புதுசா மொபைல் வாங்குறவங்க, லேப்டாப் வாங்குறவங்க எல்லாரும் இணையம் வந்து இதுல எப்படி தமிழ்ல எழுதுறதுன்னு தான் யோசிப்பாங்க.. அவங்களுக்காக தான் இந்த கையேடு...

பொதுவா எல்லாரும் எஸ்எம்எஸ் பண்ணி பழக்கப்பட்டத்தனால அந்த மாதிரியே எதிர்ப்பாக்குறாங்க.. அதாவது athavathunu இப்படி இங்க்லீஷ்ல டைப் பண்ணி ஸ்பேஸ் தட்டுனா தமிழ்ல மாறணும்ன்னு நினைக்குறாங்க.. இதுக்கு பேர் "Transliterator". இது இல்லாமலும் தமிழ் கீபோர்ட் இருக்கு. ஆனா, அதுல 30 எழுத்து தான் இருக்கும். உயிர் மெய் எழுத்து இருக்காது. உ.தா: ழ ன்னு எழுத ழ்+அ போடணும்.  

கணினியில் கீச்சுவது எப்படி? 

1) மைக்ரோசாப்ட் டூல் இன்ஸ்டால் பண்ணிக்கலாம். அது ரொம்ப சின்ன மென்பொருள் தான். பயன்படுத்த வசதியாவும் இருக்கு. Alt+shift சார்ட்கட் கீ யூஸ் பண்ணி ஆங்கிலம் டு தமிழ் மாறிக்கலாம் சுலபமா. சுட்டி(link) கீழ இருக்கு.

http://www.bhashaindia.com/ilit/

2) கூகிளின் டூல் இன்ஸ்டால் பண்ணிக்கலாம். அது ரொம்ப சின்ன மென்பொருள் தான். பயன்படுத்த வசதியாவும் இருக்கு. Alt+shift சார்ட்கட் கீ யூஸ் பண்ணி ஆங்கிலம் டு தமிழ் மாறிக்கலாம் சுலபமா. சுட்டி(link) கீழ இருக்கு.


3) அழகி+ டூல் இன்ஸ்டால் பண்ணிக்கலாம். இதுவும் சின்னது தான். சுட்டி கீழ இருக்கு. 


4) NHM Writer சாப்ட்வேர். சுட்டி கீழே.


இது போக மொபைலில் 24 மணி நேரமும் தமிழில் எழுதுறவங்க அதிகம்.

சாதாரண மொபைலில் கீச்சுவது எப்படி?

 உங்க போன்ல ப்ரவுசர் இருக்கு, ஆனா தமிழ் இல்லன்னா உங்க போனை சர்வீஸ் சென்டரில் குடுத்து, தமிழ் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.(உபயம்: @_xcuse_me நன்றி) உங்க போன்ல தமிழ் இருந்தா ரைடிங் லாங்வேஜ் சூஸ் பண்ணி எழுத ஆரம்பிக்கலாம். (உபயம்: @hariveerabahu நன்றி)

ஆன்ட்ராய்ட் மொபைலில் எழுதுவது எப்படி?

உபயம்: @TamilDroid நன்றி

1) சாம்சங்(jellybean, ICS) பயனாளர்களுக்கு. Samsung India IME keyboard (swipe in tamil supported). download link https://www.dropbox.com/s/d4vslphvzrws7ab/SamsungIndiaIME.apk 

2) செல்லினம் செயலி(app) தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். https://www.box.com/shared/ja8f69wm90xx4ws6aon9

மேலும், ஆன்ட்ராய்ட் சம்பந்தமான எந்தவிதமான உதவிக்கும் @TamilDroid யை அணுகலாம்.

ஆப்பிள் போனில்/ஐபேட்டில் கீச்சுவது எப்படி?

இதற்கு App Store போய் நமக்கு தேவையான (கீழே உள்ள) செயலி(app) தரவிறக்கம் செய்யலாம். பழைய ஐபோனை பொறுத்தவரை. தமிழில் டைப் செய்து காப்பி பேஸ்ட் செய்து தான் பயன்ப்படுத்த முடியும். புது வகை ஐபோன்களில் தமிழ் எழுத்து மொழியாகவே உள்ளது.

1) Social Indian (முழுவதும் தமிழ் விசை உள்ளது)
2) Sellinam
3) Type Tamil
4) Itransliterator

வெட்டியா இருந்த நேரத்துல இதை சேகரிக்க யோசனை தோனுச்சு..அதான் வேலைல இறங்கிட்டேன். 
இது மாதிரி மென்பொருள் பயன்படுத்தி தமிழ் கூறும் இணைய உலகத்துல நீங்களும் கவுரதையா வாழுங்க மக்களே. 

-நன்றி
ச.சக்திவேல்  

படம் உபயம்: http://tamil2world.com/tamil/wp-content/uploads/2012/12/tamil.jpg

No comments:

Post a Comment