Categories

Monday 24 July 2017

ஜியோ போன் வாங்கலாமா? வேணாமா?

ஊரே பரபரப்பா இப்ப பேசுறது ரெண்டு விஷயம் தான். ஒன்னு பிக் பாஸ்... இன்னொன்னு ஜியோ போன். ஜியோ 4ஜி போன் பத்தி ஏற்கனவே நிறைய தகவல்கள் சுத்திட்டு தான் இருந்துச்சு. அதெல்லாம் வெறும் புரளி இல்லைன்னு நிரூபனமாகிருக்கு.



நான் ஸ்மார்ட் போன்னு சொல்லாம வெறும் போன்னு தான் போட்டு இருக்கேன். ஏன்னா அது தான் உண்மையும் கூட. அது ஒரு ப்யூசர் போன்(Feature Phone). முழுக்க முழுக்க 4ஜி உலகின் அரசனாக தான் ஜியோவின் இந்த முயற்சி. இந்தியாவில் குறைந்த விலை போன் பயன்படுத்துவோரை கொத்தாக தன் பக்கம் இழுக்கவே  இந்த போன் அறிமுகம். பல வருஷம் முன்னாடியே 500க்கு விட்டவங்க தான் என்பதால் பெரிய ஆச்சிரியம் இல்ல. இந்த போனை ஆகஸ்ட் 24 முதல் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்த போன் செப்டம்பர் முதல் உங்களிடம் கொடுக்கப்படும். இது உற்பத்தியின் அடிப்படையில் கால தாமதம் ஆகவும் வாய்ப்பு இருக்கு. இன்னும் விவரமா பாக்குறதுக்கு முன்னாடி அந்த போனின் சிறப்புகளை பார்க்கலாம்.


  • டெபாசிட் தொகை வெறும் 1500 தான்.
  • நாம பேசற கட்டளைகளை கேட்டு தானா செயல்படும்
  • 22 மொழிகளை பயன்படுத்தலாம்
  • 2.4 இன்ச் திரை
  • 512 RAM
  • 4 ஜீபி போன் மெமரி
  • SD CARD மூலம் அதிக மெமரி ஆக்கிடலாம்.
  • பின்புற கேமரா
  • FM ரேடியோ
  • 3.5MM ஹெட் போன்
  • மாதம் 153 போட்டா இலவச அழைப்பு,குறுஞ்செய்தி & இணைய வசதி
  • 54க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வாரத்திற்கு இலவச அழைப்பு,குறுஞ்செய்தி & இணைய வசதி
  • 24க்கு ரீசார்ஜ் செய்தால் ரெண்டு நாளுக்கு இலவச அழைப்பு,குறுஞ்செய்தி & இணைய வசதி
  • மாதம் 303க்கு  ரீசார்ஜ் செய்தால் இலவச அழைப்பு,குறுஞ்செய்தி & இணைய வசதியுடன் கூடவே இலவச கேபிள்.
  • இந்த இலவச கேபிளை டிவியில் இணைத்து டிவியிலேயே நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.
படிச்சவுடன் வாங்கிவிடவும் தோனுதுல. கேப்டன் ஸ்டைல சொன்னா "எல்லாப் பத்திரிக்கையும் ஒரு பக்கத்தை மட்டும் தான காட்டுனீங்க, மறுபக்கத்தை காட்டவே இல்லையே". அந்த மறுபக்கத்தையும் பாத்திடுவோமா...


  • 3 வருசத்துல 1500 ரூபாய திருப்பி தந்திடுவாங்கன்னு சொல்றாங்களே தவிர, அது போனை திருப்பிக் கொடுத்தா தான் கிடைக்குங்குற உண்மை மறைச்சுட்டாங்களேப்பா. அதுவா அக்கௌன்ட்ல வந்து விழ அது என்ன கேஸ் மானியமா?
  • அடுத்து இது ஒரு தொடுதிரை(Touch Screen) போன் இல்ல 
  • இதில செல்பி என்கிற முன் பக்க கேமரா கிடையாது
  • இதில தேவையான அளவு செயலிகளை(Apps) அவர்களே போட்டுத் தருகிறார்கள். RAM அளவு குறைவாக இருப்பதால், இதில் நமக்கு பிடித்த செயலிகளை நாமாக போட்டுக்கொள்ள தடை செய்யப்பட்டு இருக்குமென கணிக்கிறேன். அப்படியே போட்டாலும் போன் மந்தமா தான் வேலை செய்யும்.
  • JioFI & மற்ற ஜியோ போன்கள் போல இதிலும் ஜியோ சிம் தவிர வேறு எந்த சிம்மும் போடமுடியாது எனக் கணிக்கிறேன்.
  • பேஸ்புக் இருக்கும்ன்னு சொல்லிக்கிறாங்க. ஆனா, முக்கியமா பலரும் உபயோகிக்கும் வாட்சப்  இருக்காதுன்னு தோனுது. ஜியோ சேட்(Jio Chat) செயலியை பரப்ப தான் இந்த முடிவாக இருக்கலாம். யோசிச்சு பாருங்க, பல கோடி பேர் வாட்சப் விட்டுட்டு ஜியோ சேட் பயன்படுத்துனா இவங்களுக்கு லாபம் தான?
  • Unlimitedன்னு சொன்னாலும், 153,54,24 ரீசார்ஜ்களில் ஒரு நாளுக்கு 500 MB தான் வேகமா வேலை செய்யும்.அதுக்குப் பிறகு "படுத்தேவிட்டானையா" தான்.ஒரு படம் கூட டவுன்லோட் பண்ண முடியாதேப்பா.
  • ஜியோ மூவி/டிவி எல்லாம் இருந்தாலும், மேல சொன்ன 500 MB காரணமா , அதிகபட்சம் 3-4 மணி நேரம் தான் ஒரு நாளுக்கு பாக்க முடியும். சுருக்கமா சொன்னா Big Boss பாக்கலாம். ஆனா, Big Bash பாக்க முடியாது. 

ரெண்டு பக்கமும் பாத்தாச்சா? Jio Fi மற்றும் இன்ன பிற பிளான் எல்லாம் முதலில் விடும்பொழுது அவங்க எதிர்பாத்த அளவு வாடிக்கையாளர்கள் கிடைக்கலைன்னு, முதல்ல கொடுத்த சலுகையை விட பின்னாடி நிறைய சலுகையை விட்டாங்க. அதே மாதிரி இதிலும் பொறுத்து வாங்கினா நிறைய சலுகை கிடைக்கலாம். இல்லைங்க, நான் தலைகீழாக தான் குதிப்பேன்னு சொல்றவங்க தாராளமா குதிங்க... பொறுத்தார் போனை ஆள்வார்....

இந்த விளி நம் வலைபதிவு இயக்கத்தார்க்கு மட்டும் அல்ல. காசுக்கு விலை போகாத தமிழ் மக்களுக்கும் தான். மக்கள் மந்தைகள் அல்லர்.

விரைவில்அது கேட்கும்.
தெளிவாக.

உங்கள்,
- கமல் ஹாசன்... இல்ல சக்தி... :-)

4 comments:

  1. அழகான பதிவு.

    ஆனால் உண்மை என்னனா முதலாளிகளின் எலிப் பொரியில் இந்த பொது சனம் சிக்கத்தவறுவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. அதென்னவோ உண்மை தான். கூண்டை பாத்ததுமே உள்ள ஓடாம, கொஞ்சம் பொறுத்து நல்ல உணவு வச்சதும் உள்ள ஓடலாம்... :-)

      Delete
  2. அழகான பதிவு.

    ஆனால் உண்மை என்னனா முதலாளிகளின் எலிப் பொரியில் இந்த பொது சனம் சிக்கத்தவறுவதில்லை.

    ReplyDelete
  3. குழம்பி போயிருந்த பலருக்கு நல்லா விளக்கி ஒரு எச்சரிக்கை கொடுத்து விழிப்புணர்வை கொடுத்துள்ளீர்கள். நன்றி வாழ்த்துக்கள்

    ReplyDelete