Categories

Monday 28 January 2013

பினாங்கில் தைப்பூசம்

பொதுவா பள்ளிக்கூடத்தில பயணக்கட்டுரை எழுதச் சொன்னாலே பத்து பேருக்கு பின்னால பம்முகிற பையன் தான் நானு... இப்ப ஏன்டா எழுதுறன்னு கேட்டா என்கிட்ட இப்ப பதில் இல்ல.. (படிக்குறது உங்க தலைவிதி :))



கொஞ்சம் பெரிய பதிவு... மன்னித்து அருளுங்கள் :)

பினாங்கு என்பது மலேசிய நாட்டில் ஒரு மாநிலம்.. மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள சுட்டியை அமுக்குங்க.. நன்றி விக்கி...

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81#.E0.AE.B5.E0.AE.B0.E0.AE.B2.E0.AE.BE.E0.AE.B1.E0.AF.81

தமிழ் கடவுள் முருகனுக்கான பண்டிகையான தைபூசம் மலேசியாவில் முக்கிய இந்துக்கள் பண்டிகை. பொது விடுமுறையும் உண்டு. ஒரு வேளை நம் நாட்டிலும் பொது விடுமுறை விட்டு இருந்தால் முக்கிய பண்டிகையாக இருந்து இருக்குமோ என எண்ணிக்கொண்டேன்.

மலேசிய தலைநகரில் கோலாலம்பூரில் உள்ள பத்து மலை(பில்லா படத்துல வருமே பெரிய முருகன்... அதே தான்) கோயிலையும் சிறப்பா கொண்டாடுவாங்க..

எனது நண்பர் போன மாசம் தைப்பூசதுக்கு பினாங்கு வர்றியான்னு கேட்டதும் சரின்னுட்டேன். இதுக்கு 3(௩) காரணம் உண்டு

௧) தலைநகரின் கலாச்சார மாற்றம் கொண்டாட்டத்தை வேறு விதமா காட்டும்.
௨) இந்த வாய்ப்பை விட்டா பினாங்குல திருவிழாவை பாக்காம போக வாய்ப்பு உண்டு. ஆனா அடுத்த வருஷம் கூட பத்து மலைல திருவிழா பாத்துக்கலாம்.
௩) எல்லா ஏற்பாடும் நண்பரே பண்ணிட்டார். செலவு மட்டும் தான் நம்மது. (பெசிக்கலி ஐ யம் சோம்பேறி.. அவ்வ்வ்)

வெள்ளிக்கிழமை ராத்திரி வண்டிய புடிச்சி சனிக்கிழமை காலைல பினாங்கு போய் இறங்கியாச்சு. நெடுஞ்சாலைல இறக்கிவிட்ட இடத்தில் முக்கால் மணி நேரம் நண்பருக்காக காத்து இருந்தேன். பாக்க நம்ம ஊர் மாதிரி தான் தோணுச்சு. சிங்கப்பூரில் இருந்த நண்பரும்(வெங்கடேஷ்) வந்த பிறகு, டாக்ஸி பிடிச்சோம். தமிழ் ஓட்டுனர். நல்லா பேசுனார். செல் நம்பர் கொடுத்தார். அவர் சொன்னபடி தமிழர்கள் அந்த காலத்துல தோட்ட வேலைக்கும், தண்டவாள வேலைக்கும், வட்டி கடை வைக்கவும் வந்து இருக்காங்க. இங்க தமிழ் சொல்லி கொடுக்கும் பள்ளிகளும் நல்ல மதிப்புடன், மாநில அளவில் நல்ல தேர்ச்சி விகிதம் பெறும் மாணவர்களையும் உருவாக்குதாம். கேக்கவே பெருமையா இருந்துச்சு.. :) (புள்ளி விவரம்:153,472 பேர் பினாங்குல இருக்காங்க)

தங்குற அறைக்கு போய் தயார் ஆகி மற்றொரு நண்பர்(கணேஷ்) சொன்ன ஹோட்டல் முன்னாடி நின்னோம். கணேஷ்க்கு இங்க நண்பர்களும் சொந்தகாரர்களும் இருந்தனர். அவரோட நண்பர் காவடி எடுத்து வர, அவர் கூட கணேஷ் நடந்து வந்தார். அவருக்காக காத்து இருக்குற நேரத்துல சும்மா இல்லாம தண்ணீர் பந்தல்ல தர்பூசணி சாப்பிட்டேன். அட ஆமாங்க.. நம்ம ஊர் மாதிரியே அங்கேயும் வழி நெடுக தண்ணீர் பந்தல் வச்சு இருக்காங்க.. கீழ பாருங்க :)




அப்புறம் அவர்(காவடி தூக்கியவர்களுடன்) கூட சேர்ந்து நாங்களும் நடக்க ஆரம்பிச்சோம். நடந்து ஒரு சிவன் கோவில் போய் காவடியை இறக்கி வச்சுட்டு வந்தாங்க. நிறைய பேரை அறிமுகம் பண்ணினாங்க. அப்போ தான் அவளை தூரத்தில் இருந்து பாத்தேன். அங்க கிட்டத்தட்ட 5000 பேருக்கு அன்னதானம் போட்டாங்க. அன்னதானம் சாப்பிட்ட பின் சாவகாசமா உக்காந்து இருந்தப்ப நண்பர் தகவல்களை சொன்னார். அதை பகிர்கிறேன்.

நண்பர் கணேஷ் ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பை சேர்ந்தவர். அவர் முன்னோர்கள் 1930-40களில் வட்டி கடை தொழில் செய்ய வந்து, பின் பல்வேறு தொழிலில் ஈடுபட்டு முன்னேறி இப்பொழுது பலரும் நல்ல நிலைமையில் பெரிய நிறுவன முதலாளிகளாக(CEO) உள்ளனர்.  6 முதல் 18 பேர் கொண்ட 3 குடும்பங்கள் தான் முதலில் இங்கே அவங்களுக்கு கோவில்களை அமைச்சு இருக்காங்க. இன்னமும் அந்த குடும்ப வாரிசுகள் தான் அந்த கோவில் கணக்கு வழக்குகளை பாத்து வர்றாங்க. ஒவ்வொரு வருசமும் ஒவ்வொரு குடும்பம் சுழற்சி முறைல பொறுப்பு ஏத்துக்குவாங்க. பிறகு மலாக்காவில் (மலேசியாவில் வேறு மாநிலம்) உள்ள இந்த சமூக அமைப்பின் குடும்பத்தினரும் சேர்ந்துகிட்டாங்க. 35-40 வருசமா காவடி எடுக்குறாங்க. வெள்ளி தேர்ல முருகனை வச்சி தைப்பூசத்துக்கு முதல் நாள் அதிகாலை தேர் வீதி வீதியா கிளம்புது. கூடவே காவடி தூக்குறவங்களும் கிளம்புறாங்க. 8 கிமீ தள்ளி முருகன் கோவில் இருக்கு. காவடி மொத்தம் 80 இருக்கு. பொதுவா சொந்த காவடி வச்சு இருக்காங்க. அதுக்கு வீட்ல எப்பவும் பூசை நடக்குமாம். இது போக 21 கோவில் காவடி இருக்காம் அது குலுக்கல் முறையில் விண்ணப்பிச்சா தருவாங்க. ஒரு காவடி 10-18 கிலோ இருக்கும். அருள் வந்தவங்க வீட்டு காவடிக்கு 'ஜென்ம காவடி'ன்னு பேர். அந்த வீட்ல வருசா வருஷம் என்ன நடந்தாலும் கண்டிப்பா காவடி எடுத்து தான் ஆகணும். காவடிக்கு உரிய முறையான வேட்டி கட்டு கட்டி தான் காவடி எடுக்குறாங்க. சிலர் 2 நாளும் மௌன விரதம் இருக்காங்க. யாரு பெரிய காவடி எடுக்குறாங்கன்னு அவங்க போட்டு இருக்குற உத்திராட்ச மாலை அளவே சொல்லும். தேர் காலை கிளம்பி ஒவ்வொரு பந்தல் அர்ச்சனைக்கு பிறகு சிவன் கோவிலுக்கு மதியம் 2-3 மணி போல வரும்.  அப்புறம் சாப்பிட்டு உக்காந்து இருக்குறவங்க காவடியோட சேர்ந்து தேர் திரும்ப கிளம்பும். காவடி தூக்குறவங்க 6 மணி போல கோவிலுக்கு போயிருவாங்க. தேர் திரும்ப ஒவ்வொரு பந்தலா அர்ச்சனை முடிச்சு வர இரவு 1 மணி ஆயிடும். மறுநாள் தைப்பூச தினத்தன்று காலை பால் குடம் எடுப்பாங்க. மதியம் அன்னதானத்தோட தைப்பூசம் அவங்களுக்கு முடியுது.


சிவன் கோவிலும் வெள்ளி ரத முருகனும் 


இதெல்லாம் அவர் சொல்லி முடிக்கும் போது சிவன் கோவிலுக்கு தேர் வந்து இருந்துச்சு. திரும்ப கிளம்ப ஆயத்தம் ஆகும் போது, அவளை திரும்ப பாத்தேன். அவங்க அப்பா காவ்யான்னு அறிமுகப்படுத்தினார். அவளோட பெரிய கண்ணை விரிச்சி அழகா ஒரு பார்வை பாத்துட்டு என்னை சட்டை பண்ணாம திரும்பிகிட்டா.. நானும் கொஞ்ச நேரம் பாத்துட்டு திரும்பிட்டேன். கொஞ்சம் மேகமூட்டமா இருந்ததால தப்பிச்சோம். இல்லைனா கல்லு குத்தின காலை வெயில் பொத்துஇருக்கும். ஆமா, அன்னைக்கு முழுக்க செருப்பு போடலை.    

போற வழி முழுக்க ஆச்சிரியம் தான். நம்ம தமிழ்நாட்டில நாகரீகம் என்ற பேர்ல அழிய போகிற சில விஷயங்கள் இங்க திருவிழாவில சிறப்பா இருக்கு.
சிறுவர் சிறுமியர் கோலாட்டம் அதுல ஒன்னு. அடுத்த தலைமுறைக்கு எடுத்துட்டு போறாங்க. அப்புறம் கரகாட்டம் பாத்தேன். காவடி தூக்குறவங்களும் காவடி ஆட்டம் ஆடுறாங்க. இவை எல்லாமே போக்குவரத்தை பாதிக்காம ஆள் அரவம் இல்லா பகுதிகளா பாத்து பொறுப்போட ஆடுறாங்க.  படங்கள் கீழே.. :)


கரகாட்டம்



கோலாட்டம்


காவடியாட்டம் 


இதெல்லாம் பாத்துகிட்டே அவங்க பாரம்பரிய கோவிலுக்கு போயாச்சு. பெரிய உத்திரம் வச்சு கட்டின ஓட்டு வீட்டை தான் கோவிலா மாத்தி இருக்காங்க. 6 மணி போல அங்க போய் காவடி வச்சுட்டு சாமி கும்பிட்டு உக்காந்தோம். அவளும் அவங்க அப்பாவோட வந்து உக்காந்தாள். கொஞ்ச நேரம் மிரட்சியோட பாத்துகிட்டு இருந்தாள். யாருடா இவன் நம்ம வாழ்க்கைல புதுசா ஒரு கதாபாத்திரம் அப்படின்னு  ஒரு பார்வை பாத்தா. நான் பதிலுக்கு ஒரு அப்பாவி பார்வை பாத்தேன். சில நிமிடம் கண்ணுலே பேசிக்கிட்டோம். பிறகு, ஒரு சின்ன சிரிப்பு சிரிச்சா தேவதை மாதிரி. அவ்ளோ தான் எனக்கு ஒரே சந்தோசம். உடனே நான் என் வேலைய காமிக்க ஆரம்பிச்சுட்டேன். கொஞ்ச நேரத்துல கூட்டத்துல என் பக்கத்துல வந்து உட்காந்துட்டா.. அப்புறம் மெல்ல என் மடியில உக்கார  வச்சுட்டேன்.. :) (பதறாதீங்க.. காவ்யாவுக்கு ஒன்னே முக்கால் வயசு தான்... அவ்வ்வ்) எங்க வீட்டு கொழந்தைங்க எல்லாம் புதுசா இருக்கவங்க பக்கத்துல வந்தாலே அழுதுறுங்க.. இவ அப்படி இல்ல எனக்கு ஒரு வாய்ப்பு குடுத்தா நான் கெட்டியா பிடிச்சுகிட்டேன். கொஞ்ச நேரம் அவங்க அப்பா பேர் சொல்லு, அம்மா பேர் சொல்லு ன்னு சம்பிரதாய கேள்விகளுக்கு மழலை தமிழ் பேசுனா. அய்யா, ஆயா, அப்பா, அம்மா, மாமா, அண்ணா இதைத் தவிர வேற எதுவும் பெருசா பேச வரல. எல்லாம் சிரிப்பும்  சைகையும் தான். ஆனா, நான் விடாம பேசிட்டே சிரிப்பு காமிச்சுகிட்டே இருந்தேன். என் பக்கத்துல மத்த நண்பர்கள் எல்லாரையும் மறந்துட்டோம். அவங்க அப்பாவுக்கும் பொறுப்பு குறைஞ்சுதுன்னு பத்திரமா பாத்துக்கோ தம்பி, உன் பொறுப்புன்னு சொல்லிட்டார். அவங்க அம்மா வந்தப்ப கொஞ்சம் பயந்தேன் போய்டுவாளோன்னு, ஆனா போகல :) அப்புறம் பலூன் வச்சி நல்லா விளையாடினோம். நிறைய கதை பேசுனோம். அவளுக்கு ஜூஸ், பழம் எல்லாம் ஊட்டிவிட்டேன். எல்லாத்தையும் சாப்பிட்டா சமத்தா. அவங்க அப்பா அம்மாவுக்கும் அதனால என்னை பிடிச்சு போச்சு. எல்லாரையும் மாமான்னு கூப்பிட்டா, என்னை மட்டும் அண்ணன்னு கூப்பிட்டா. இப்படியே 2.5 மணி நேரம் போச்சு(எப்படி போச்சுன்னே தெரியல :) ). அப்புறம் அங்க இருந்து கிளம்பிட்டோம். அவங்க கணேசோட குடும்ப நண்பர் தான். அவங்களும் நான் இருக்குற ஊர்ல தான் இருக்காங்க. அதனால என்னைய கணேஷ் கூட சேர்ந்து செவ்வாய் கிழமை கண்டிப்பா வர சொல்லி இருக்காங்க. 2,3 தடவ சொல்லிட்டாங்க. கிளம்பி போகும்போது, தனிதனி வண்டில போகணும்ன்னு சொல்லிட்டாங்க. எனக்கு கொஞ்சம் சோகம். கடவுள் புண்ணியத்துல கடைசில எல்லாரும் ஒரே பஸ்ல போனோம்.  தனி தனி சீட்ல தள்ளி உக்காந்தோம்ன்னு தான் பேரு, வர்ற வழி  எல்லாம் கண்ணுல பேசிகிட்டே, விளையாடிகிட்டே வந்தோம். அவங்க வீட்ல அதுக்குள்ள என்னை அவளோட மாமா ஆக்கிட்டாங்க( அண்ணன்ல இருந்து மாமாவான்னு சின்ன வருத்தம்.. அவ்வ்வ்). பஸ் விட்டு இறங்கினதும் அவளுக்கு செருப்பு மாட்டி விட்டுட்டாங்க. என் கைய பிடிச்சுகிட்டே, நிலா வெளிச்சத்துல அழகா தத்தி தத்தி நடந்து வந்தா. (அப்ப எனக்கு அப்படி விளக்க முடியாத ஒரு சந்தோசம்) இரவு உணவை அவங்க கூடவே முடிச்சோம். அப்புறம் அவங்களும் நாங்க இருந்த அதே லாட்ஜ்ல இருந்தாங்கன்னு தெரிஞ்சுது. சந்தோசம். சேர்ந்து போனோம். இரவு தூங்க சந்தோசமா போனேன். 

மறுநாள், சிவன் கோவில்ல பாத்தோம். உடனே அவளை தூக்கிட்டேன். பால் குடம் தூக்கிட்டு 3.5 கிமீ பக்தர்கள் நடக்க, நான் காவ்யாவ தூக்கிட்டு நடக்க ஆரம்பிச்சேன். அவங்க அப்பா, அம்மாவ எப்பவாவது தான் கேட்டா, அப்பவும் சுலபமா திசை திருப்பிட்டேன். சந்தோசத்துல அவளுக்கு ஒரு பலூன் வாங்கி கொடுத்தேன். என்ன ஒரு இன்பமான காலைன்னு நினைச்சுகிட்டேன். திரும்ப 2 மணி நேர சந்தோசம். அப்புறம் கோவிலுக்கு போய் சிற்றுண்டி முடிச்சுட்டு, அவளை அவங்க அம்மாகிட்ட விட்ட பிறகு பினாங்கு மலை கோவிலுக்கு நான் வெங்கடேஷ் கூட கிளம்பிட்டேன். இந்த மலைகோவில் தான் முருகனுக்கு வெளிநாட்ல இருக்குற பெரிய மலை கோவிலாம். மொத்தம் 513 படியோட புதுப்பிக்கபட்டு இருக்கு. மலை பாக்க  கொஞ்சம் திருத்தணியை பாக்குற மாதிரி இருக்கு. உள்ளே கடவுள், பழனி முருகன் மாதிரி ஆண்டி கோலத்துல இருக்காரு. படங்கள் கீழே.




காவ்யாவ பத்தி பேசுன சந்தோசத்துல சில விசயங்கள சொல்ல மறந்துட்டேன். இந்த முருகன் மேல தமிழர்களை விட பக்தி'வெறி' அதிகமா இருக்குறது சீனர்களுக்கு தான். அவங்க தான் அதிக காணிக்கை செலுத்துறாங்க. முழுக்க முழுக்க அவங்க தான்  காவடி, பால் குடம் தூக்குறவங்களுக்கு டிராபிக் கண்ட்ரோல். மக்களும் ஒரே வரிசையா(லேன்) தான் ஊர்வலம் வந்தாங்க. வாகனங்களுக்கு இடையூறு இல்லாம, சிக்னல் வரும்போது எல்லாரும் கொஞ்சம் பொறுத்து கூட்டம் நல்லா சேர்ந்தப்புறம் ஒன்னா ரோட்டை கடந்தாங்க . தேருக்கு முன்னாடி வழி முழுக்க தேங்காய் உடைக்குறது சீனர்கள் தான். அன்னதானத்துக்கு அதிகமாக தானமா அரிசி கொடுக்குறதும்  சீனர் தான். அதிகமா உடலை வருத்தும் வகையில் அலகு குத்தி வருவதும் அவங்க தான். இவங்க போக மலாய்க்காரர்களும், தாய்லாந்து காரரும் பக்தியோட வருவாங்க. படங்கள் கீழே.


வேட்டி கட்டிய சீனர் 


ஒரே ஒரு சீனரின் வேண்டுதல் தேங்காய் மட்டும் இவ்வளவு...


சீனரின் வேண்டுதல்

இது போக தமிழர்களும் தைப்பூசம் அன்னைக்கு இதை மாதிரி உடலை வருத்திக்கிற வேண்டுதல் நிறைவேத்துவாங்க. நாம கிட்டதட்ட  சாவுகூத்துன்னு ஆக்கி வச்சு இருக்குற பறை வாத்தியம் அடிச்சுட்டு தான் நிறைய தமிழர்கள் வராங்க. அதை விட்டா நாதஸ்வரம், தவில் தான். நல்ல வேலையா புதுமைய புகுத்துறேனு இவங்களும் நம்மள போல கேரளா கொட்டை கூட்டி வந்து நம்ம கலைகளுக்கு சமாதி கட்டல. என் நண்பர் தாரதப்பட்டைன்னு முகம் சுழிச்சது தான் வருத்தம் ஆகிடிச்சு...

இவங்க அரசையும் நாம பாராட்டி ஆகணும். நாம இன்னும் அந்த காலத்துல கட்டுன பாம்பன் பாலத்து பெருமையையே பேசிட்டு இருக்கோம், ஆனா இந்த ஊர் முக்கியத்துவம் புரிஞ்சு கடலுக்கு நடுவுல 13.5கிமீ 2 பாலம் கட்டி இருக்காங்க. ஹெலிகாப்டர்ல நாள் முழுதும் பாதுகாப்பு  ரோந்து பண்றாங்க. ஹெலிகாப்டர்ல டிராபிக் பாத்து சரியா உதவுறாங்க. முதலமைச்சரும் சாதாரணமா மக்களோட பண்டிகை கொண்டாடிட்டு பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாம போறாரு. இதெல்லாம் விட சுத்தத்துக்கு இப்ப கூட முக்கியத்துவம் கொடுக்குறாங்க. தேர் போனவுடனே பின்னாடியே தேங்காயை கூட்டி சுத்தம் செய்யுறாங்க. கிரேன் வந்து அள்ளிட்டு போய்டுது.
படங்கள் கீழே..


தேர் போனவுடன் தேங்காயை கூட்டும் தொழிலாளி 


     பாலத்தின் ஒரு பாதி

மலை கோவிலுக்கு போயிட்டு வந்து கொஞ்ச நேரம் சும்மா உக்காந்து இருந்தேன். காவ்யாவ காணல. அப்புறம் தூரமா அவ தாத்தா பாட்டி கூட இருந்ததை பாத்தேன். அப்புறம் அன்னதானம் சாப்பிட போயிட்டேன். தலை வாழை இலைல சாப்பிடவே வரிசைல சாப்பிடலாம்னு தோணுச்சு. அதுல ஒரு விஷயம் புரிஞ்சுச்சு, அவங்க எல்லாரும் ஒற்றுமையா இருக்காங்க. நல்ல சகஜமா பழகுறாங்க. எந்த தலை கணமும் இல்ல. அவங்க நெனச்சா எல்லாரும் வெளிய சாப்பிடலாம் அவ்ளோ பணக்காரங்க, ஆனா பொறுமையா வரிசைல நின்னு சாப்பிட்டாங்க. வரிசை வெள்ளிகிழமை காலை மீனாட்சி அம்மன் கோவில் வரிசைல பாதி இருக்கும் அவ்ளோ பெருசு. ஆனாலும் சாப்பிட்டாங்க. சாப்பாடு பரிமாறவும் எல்லாரும் இறங்கி வேலை செய்தாங்க. பல கம்பெனிக்கு முதலாளியா இருக்குறவர் கூட எச்சி இலை எடுத்தார். ஏதாவது உதவி கேட்டா உடனே செய்யுறாங்க, இல்ல சம்பந்தபட்டவங்க கிட்ட கூட்டிட்டு போய் அறிமுகப்படுத்துறாங்க. ட்விட்டர்ல சின்ன உதவி கேட்டா மென்சன் போட கூட கவுரவம் பாக்குற காலத்துல இப்படியான்னு நெனச்சுக்கிட்டேன்.

சாப்பிட்டு நேரா காவ்யா கிட்ட தான் போனேன். தூக்க கலக்கத்துல அவங்க அம்மா மேல சாய்ஞ்சு இருந்தா. தொந்தரவு பண்ண மனசு வரல. வேடிக்கை மட்டும் பாத்துட்டு ரசிச்சுட்டு இருந்தேன். தூக்கத்தோட அப்பப்ப என்னை பாத்தா. அப்புறம் நாங்க கிளம்ப வேண்டிய நேரம் வந்துருச்சு. ஒரே கார்ல போனோம். இப்பவும் அவளை பாத்துட்டு மட்டும் வந்தேன். காரை விட்டு இறங்கி விடை பெற்றுகிட்டோம். அவங்க திரும்பவும் செவ்வாய் கிழமை வீட்டுக்கு வாங்கன்னு சொன்னாங்க. நான் சரின்னு சொல்லிகிட்டேன். அவளுக்கு டா டா சொன்னேன். அவளும் சொன்னா, என்னை திரும்ப பாக்க போறதில்லன்னு புரியாமலே சிரிச்ச முகத்தோட...

ஆமா. அவங்க கூப்பிட்ட செவ்வாய் கிழமை எனக்கு வேலை அதிகம் என்னால அவங்க வீட்டுக்கு போக முடியாது. ஆனா என்னைக்காவது போகும்ன்னு முடிவு பண்ணிகிட்டேன்.

தனிமைல வெட்டியா இருந்த எனக்கு, இந்த 2 நாள் வேற ஒரு உலகத்தை காட்டி, நல்ல மனிதர்களை காட்டி, நல்ல புது நண்பர்களை காட்டி, நல்ல கலாச்சாரத்தை காட்டி, நல்ல பக்தியை காட்டி, நல்ல கடவுளை காட்டி, அந்த கடவுள் கொடுத்த வரமாய் இன்னொரு கடவுளையும் பாத்தேன் காவ்யா உருவத்தில.. அவ எனக்குள்ள இருக்குற அப்பாவை காட்டிட்டு போயிட்டா...

இவ்வளவும் கொடுத்த இந்த 2 நாள் எனக்கு மறக்க கூடாதுன்னு தான் இந்த பதிவு...    

13 comments:

  1. very very nice sakthi....

    your writing improved a lot.. good.. :)))

    ReplyDelete
  2. விரிவான பதிவு. மலேசியாவில் வசிக்கும் நாங்கள் கூட இந்த அளவிற்கு மிக ஆழமாக கவனித்ததில்லை. வாழ்த்துக்கள் :-) தொடர்ந்து எழுதுங்கள் :-)

    ReplyDelete
  3. தெரிந்த செய்திகளுடன் புதிய தகவகல்களும் இருந்தன..... பின், உங்கள் அனுபவமும் .... ரசித்துப் படித்தேன் சக்தி ! சில எழுத்துப் பிழைகள் ( உ-ம் - வேலை / வேளை ; அழகு குத்தி / அலகு குத்தி ). ட்வீட்டர் மூலம் பதிவை சுட்டியதற்கு நன்றி !

    ReplyDelete
    Replies
    1. அவசரமா, மறக்கும் முன்னாடி எழுதணும்ன்னு நேத்து வந்ததும் எழுத ஆரம்பிச்சுட்டேன்... இந்த கூகிள் பரிந்துரை பண்ணுறேன்னு நமக்கு தெரிஞ்ச தமிழையும் குழப்பிவிடுது :) திரும்ப படிச்சு பாத்து ஓரளவு எழுத்துப் பிழை திருத்திட்டேன். சுட்டி காட்டியதற்கு நன்றி :)

      Delete
  4. நான் சிங்கப்பூரில் சில காலம் இருந்ததினால் உங்கள் கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் செய்திகளுடன் நன்கு ரிலேட் பண்ண முடிந்தது. டாக்சி டிரைவர் என்ன விஜயகாந்திற்கு தம்பியா? அவ்வளவு துல்லியமா புள்ளி விவரம் சொல்கிறார். நீங்கள் சொல்லியிருப்பது போல மலாய் மக்களும் சீன மக்களும் அவ்வளவு பக்தி சிரத்தையுடன் முருகனை வழிபடுகிறார்கள். கோவில்களும் செட்டியார்கள் புண்ணியத்தில் நல்ல முறையில் பராமரிக்கப் பட்டு வருகின்றன. சமயச் சேவையுடன் இது சமூகச் சேவையும் தான். இத்தனை மக்களை ஒன்று திரட்டி உணவு அளித்து மத நல்லிக்கனத்தோடு செயல் படுவது லேசான காரியம் அல்ல! நல்ல பதிவு. வாழ்த்துகள்.

    குழந்தையோடு நீங்கள் செலவிட்ட நேரம் பற்றி எழுதியது எனக்கு ரொம்பப் பிடித்தது :-))

    amas32

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா... புள்ளி விவரம் என்னோட தேடல். அதை ஓட்டுனர் சொல்லல. குழப்பம் தவிர்க்க, இப்ப மாத்தி தனியா போட்டுட்டேன். நன்றி :)

      Delete
  5. Nicely narrated shakthi :)
    @shanthhi

    ReplyDelete
  6. nice sakthi... same for me too... kavya impressed me to... cant forget kavya singing the song from kumki... soi soi...
    and ur narration is too good... kadasila andha mukkaal mani naeram ;) oh noooo....

    ReplyDelete
  7. மலேசியாவுக்கு போயிட்டு முருகனை தரிசனம் பண்ண மாதிரி இருக்கு ...செலவே இல்லாம ..இப்படியே எல்லா ஊரையும் சுத்தி காட்டுனா நல்லா இருக்கும் ....:)

    ReplyDelete
    Replies
    1. பாத்த ஊரை பூரா பதிவா போடலாமுன்னு.. ஆசை தான் பாப்போம்.. நேரம் இருந்தா கண்டிப்பா செய்யுறேன்.. நன்றி :)

      Delete