சேற்றில் செந்தாமரைகளை தேடும்
சுருங்கிய கண்களுக்கு நாங்கள்
புலப்படாத பொருளாகி போவதில் புதிதில்லை
குழந்தைகளிடமும் குரூரமாக நடந்த
குற்றசாட்டை தாங்கிய எங்களது
பாணி, பாராபட்ச பச்சாதாபமற்ற பணி
மலை முகட்டிலிருந்து பாயும்
பென்குயின்கள் போல் பொறியியல்
கற்கும் கட்டற்ற கலாச்சாரம் இங்கில்லை
இடமிருக்கிறது என்று இருப்பிடமாய்
மாற்றி இடம்பெயரும் உங்களது
இறுமாப்பு, இயற்கையாய் இல்லாதவர் யாம்
பெண்கள் எங்களில் பாதியென
பேச்சளவில் மட்டும் சொல்லாத,
சமஉரிமை சமுதாயத்தை சார்ந்தவர் யாம்
துயரங்களை துச்சமாய் எண்ணி
துரோகங்களை உங்களுக்குள் செய்யும்
துணிவை, தொலைவில் தொலைத்தவர்கள் யாம்
ஆணவ அறிவியல் அறிவு அனைத்தும்
எங்கள் அழிவிற்கே பயன்படுத்தும் மனிதா,
இவ்வுலகம் எனக்கும் உனக்கும் பொதுவானது
என்று உரக்க சொல்லிக்கொள்கிறேன்
- இப்படிக்கு கொசு
இப்போ மேலிருந்து திரும்ப ஒரு தடவை படிச்சுகொங்க.. :)
- நன்றி
ச.சக்திவேல்
நல்லா இருக்கு சக்தி.. :-)
ReplyDeleteஎனக்கு பிடிச்ச வரிகள் -
ஆணவ அறிவியல் அறிவு அனைத்தும்
எங்கள் அழிவிற்கே பயன்படுத்தும் மனிதா,
இவ்வுலகம் எனக்கும் உனக்கும் பொதுவானது
என்று உரக்க சொல்லிக்கொள்கிறேன்
நன்றிங்க யமுனா :-)
Deletehai sakthi,
ReplyDeletenice one..
good.. :))
நன்றி ரேணு :-))
Deleteஅது சரி! சிக்கன்குநியாவும் மலேரியாவும் பரிசாகக் கொடுத்து இந்தப் பேச்சா? :-)
ReplyDeleteamas32