Categories

Friday, 11 January 2013

என் தோசை கீச்சுக்கள்

1) டீச்சர்: இரண்டு முறை வெட்கபட்டேன் என ஒரே வார்த்தையில் எப்படி கூறுவது? மாணவன்: “'தோ''சை'“



2) நானும் ஒரு புத்தன் தான், 

தோசை உண்ணும் ஆசையை விட்டுவிட்டேன்,
அவள் சுட்டு கொடுத்த தோசையை உண்ட பின்.. 

3) என்ன தான் தோசை சரியா வேகலைன்னாலும் அதை 'ஆப்பாயில்'ன்னு சொல்லி விக்க முடியுமா?


4) உன் கரிய முகிலுக்குள் முகம் புதைத்ததை நினைத்தே,

கருக விட்டுவிட்டேன் தோசையை...அவ்வ்வ்#கவுஜ 

5) நீ பாவா எனப் பாசமாக அழைக்கும் பொழுதே தெரியும்... 

தோசை மாவாக வேகாமல் இருக்குமென...

6) முறுகலா ஊத்தாத தோசையும்,

முயற்சி பண்ணாம வந்த காசையும்,
தானமா கொடுத்தா தர்ம அடி தான் கிடைக்கும்...#தத்து

7) இன்றைய கண்டுபிடிப்பு: காலையிலிருந்து கழுவாம விட்ட தோசை கல்லுல

நைட்டும் தோசை சுட்டா,
தோசை சரியா வராது...அவ்வ்வ்

8) வட்டமான நிலவை, வட்டமான வானத்துக்குள் கண்டேன்... 

என் வீட்டினுள்... தோசையும், தோசைக் கல்லும்...அவ்வ்வ்

9) என்ன தான் பணக்காரனா இருந்தாலும்

நல்ல தோசை வேணும்னா 
பழைய மாவுல தான் தோசை சுடணும்...

10) உன் உறைகின்ற பொழுதுகளில், நானும் உறைகிறேன்...

#பின்ன உறைஞ்ச மாவை வைச்சு எப்படி தோசை ஊத்துறதாம்..அவ்வ்வ்

11) என் விருப்பத்திற்கேற்ப வளைகிறாய் நீ,

நானோ உன் வாழ்க்கையை 'திருப்பி' போட்டு கொண்டிருக்கிறேன்...
#தோசை...

1 comment:

  1. ம்ம்ம் தோசைனா சும்மாவா ..:)

    ReplyDelete