1) எனது எழுத்தை வைத்து என்னை கணித்தால்,
என் கற்பனை சக்தியின் மீது உமக்கு அவநம்பிக்கை எனக் கொள்க...
2) நான் நானாய் இருக்கும்வரை,பிறர்க்கு என்னால் பிரச்சனை..
மாறிவிட்டாலோ... என்னால் எனக்கு பிரச்சனை...
3) அணையா விளக்கு என்பதற்காக அமைதியாக ஒளிர்கிறது என அர்த்தமில்லை,
ஒவ்வொரு நொடியும் காற்றுடன் போராடுகிறது#அது போலவே வாழ்க்கையும்...

4) சுடுகாட்டில் கட்டப்படுகின்ற நவீன ரியல் எஸ்டேட்கள்...
மரித்தது பயிர்கள் என்பதால் வாங்குவோர்க்கு அலட்சியம்... #விலை(ளை) நிலம்
5) வாழ்க்கைக்கு உள்ள ஒரே பின்னடைவு...
நான் உயிருடன் உள்ளவரை தான்,
அதனால் என்னை ஆட்டி படைக்க முடியும் என்பதே...
6) வாழ்வில் குழப்பத்தை எண்ணி மிகவும் குழம்பிக் கொள்ளாதீர்கள்..
அது தன் கடமையை செய்துவிட்டு போகட்டும்...
7) சூரிய ஒளிக்கு பயந்து வீட்டில் தூக்கம் நீட்டிக்கும் வேளையில்,
விட்டில் பூச்சிகள் எனைக் கண்டு சிரிக்கின்றன..
மரணத்திற்கு பயமின்றி..
8) மௌனங்களில் சின்ன சலசலப்பை கொண்டது வாழ்க்கை,
அது இசையா, இரைச்சலா என்பது அவரவர் சூழ்நிலை பொறுத்தது...
9) புரியாமல் பேசுவதில் உள்ள வசதி என்னவென்றால்
அது யாருக்கும் புரியாது என்பதே...
10) இன்று உன் முகத்தில்
அறையும் ஆலங்கட்டி மழை நினைவுபடுத்தும்..
என்றோ அதை ஏந்த துடித்த உன் பால்யத்தை...
11) குக்கர்ல வைச்ச பருப்பும்,
கோயில் வாசல்ல போட்ட செருப்பும்,
குழந்தை மேல காட்டுற வெறுப்பும்...ரொம்ப நேரம் தாங்காது#தத்து
12) சரியா வேகாத தோசையும்,
முழுசா தீராத ஆசையும்,
மனுசன நிம்மதியாவே இருக்க விடாது#தத்து
13) மாற்றுக் கருத்து உள்ளவர்கள் நண்பர்களாக இருக்க முடியாது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு...
14) அவ்வப்போது மறையும் நட்சத்திரத்துக்கு புரிவதில்லை,
அது மழலையுடன் கண்ணாமூச்சி விளையாடுகிறதென...
15) பல தோல்விகளிடம் வெற்றி எனும் குழந்தை நடை பழகுகிறது...
16) பலூனுக்குள் சிறைபட்ட காற்று தான்,
மனிதனிடமிருந்து பலசமயம் பலூனை விடுதலை செய்கிறது... #முரண்
17) செலுத்தப்பட்ட அம்பு
விசையிடமோ,காற்றிடமோ,இலக்கிடமோ
இழக்கிறது தன் சுதந்திரத்தை...
18) வாழ்வில் எந்நேரமும் ஏதோ இழந்து கொண்டிருந்தாலும்,
சில இழப்பு மட்டும் உயிர்வளி போல் உயிர்வலி உருவாக்குகின்றன..
19) மரண செய்தி சொல்லப் போகும் வீட்டில்,
மழலை இருப்பின் புன்னகையை மறைப்பது தர்மசங்கடம்...
20) எனது எழுத்தை வைத்து என்னை கணித்தால்,என் கற்பனை சக்தியின் மீது உமக்கு அவநம்பிக்கை எனக் கொள்க...
மழலை இருப்பின் புன்னகையை மறைப்பது தர்மசங்கடம்...
20) எனது எழுத்தை வைத்து என்னை கணித்தால்,என் கற்பனை சக்தியின் மீது உமக்கு அவநம்பிக்கை எனக் கொள்க...
No comments:
Post a Comment