1) மழை வரும்போது கப்பலாய்,
கலை வரும்போது ஓவியமாய்,
காதல் வரும்போது கவிதையாய், கோவம் வரும்போது குப்பையாய்,
கலை வரும்போது ஓவியமாய்,
காதல் வரும்போது கவிதையாய், கோவம் வரும்போது குப்பையாய்,
காகிதம்...
2) ஒளி இன்மை போர்த்திய இரவில்,
இரவல் இருள் நீக்கியாய்,
இமை துடிக்கும் பொழுதில்,
மின்மினிப் பூச்சியின் தேகத் திரவம்..
ஒளித் திறவுகோல்...
3) முகில் கூட்டத்தில் சல்லடையிட்டு,
மழை நீரை வேண்டாமென புறந்தள்ளிவிட்டு,
எதை சேமிக்கிறதோ வானம்...!!
4) கழல் இழந்த கால்கள்,
தழல் மீது பதிய,
சுழல்வது விழியோ,
கலைவது குழலோ...
5) கண்ணுக்குள் சிக்கிக் கொண்டு,
கண்களை நீ மூட வைக்கிறாய்,
உனைத் தழுவி முடித்த பின்னும்,
கண்களை ஏன் வாட வைக்கிறாய்?
தூக்கம்...
6) உன் உருவம் வர்ணிக்க உருவகமும் தேவையில்லை,
உன் புருவம் வர்ணிக்க புனைவுகளும் தேவையில்லை,
உன் கண்ணை வர்ணிக்க கற்பனையும் தேவையில்லை,
உன் காதல் துறந்திடவோ கனவிலும் தோன்றவில்லை...
7) உன் நிர்மல நகைப்பினில்,
நித்தலமாய் பற்கள் மின்ன,
என் நித்திரை போனதடி..
மனம் நிம்மதியை தேடுதடி..
8) பாவை அவள் மயக்கிவிட்டாள்,
என் பாதையிலே மலர்ந்துவிட்டாள்,
பேதை மனம் கவர்ந்துவிட்டேன்,
பேதமையை மறந்துவிட்டேன்...
9) இரவிலும் விடிகின்ற வானவில் நீ
இதயம் கவிழ்கின்ற இன்னிசை நீ
மனதை துளைக்கின்ற மங்கை நீ
கனவையே தொலைக்க வைக்கும் காதலி நீ
10) உன் கண்ணை வைத்து,
என் கண்ணை கவர்ந்து கொண்டாய்...
கவர்ந்தது என்னமோ கண் தான்,
ஆனால் இழந்தது என் இதயத்தை...
11) உன் முகத்தின் மீது விழும் கற்றை குழல் அழகா?
அதை விலக்கும் ஒற்றை விரல் அழகா?
அது விலகியதால் தெரியும் பட்டை நுதல் அழகா?
12) வல்லூறு வலிமைமிக்க அலகினால்
'நச்'சென கொத்துவது போல்,
'வலி' மிகும் இடங்களே,
வல்லினம் உறைவிடம் தமிழில்... :-)
13) செங்கீரை பருவம் தொலைத்து,
தாழ்வாரம் தவழ்ந்தே கடந்து,
தாலப் பருவம் தொட தத்தி,
வரும் முத்து நீ.. #குழந்தை
14) பிரித்தால் எனை மயக்கி,
(மெய்)பொருள் தொலைக்க வைக்கும்
இரட்டைக்கிளவி உன் இதழ்கள்..
15) பிரித்தாலும் என் (மெய்)பொருள் தந்து,
எனை அளக்கும் 'அடுக்கு தொடர்',
உன் இறுக்க மூடிய இமைகள்..
16) நான் வேண்டுமென்றால்,
மூடி சிறை பிடித்துக்கொள்...
நான் வேண்டாமென்றால்,
மூடி உள்ளே அனுமதிக்காதே.
திறந்து வைத்து கொல்லாதே#உன் கண்ணால்
17) உன் மீன் விழிக்குள்,
சிக்கித் தவிக்கிறது என்,
காதல் கடல்... #முரண்
18) மயிலவள் தோகை விரித்தாள்,
மனதினில் மழை கொடுத்தாள்,
இமை மூடி உயிர் கொடுத்தாள்,
இதழிலே முத்தப் பயிர் வளர்த்தாள்...
19) பூவை பகிர்ந்திட்ட பூக்களின் மணமதை,
காற்றில் கலந்திடலாயின்..
சுவாசம் நுகரும் இயந்திரமாகி,
அவை அனைத்தும்,
அவை வரும் முன்னே அணைத்திடுவேன்
20) உனை பார்த்த பின்பு...
என் உணர்வுகளை தூண்டிவிட்டாய்
உணவினை மறக்கடித்தாய்...
No comments:
Post a Comment