Categories

Wednesday 26 December 2012

நான் ரசித்த எனது கீச்சுக்கள் பகுதி - 7


1) பறவை கூண்டு வாங்கி அடைக்காதீங்க,அதுங்க நல்லாவே கூடு கட்டும்.அந்த காசுல ஒரு மரம் நடுங்க அதுகளுக்கும் சேர்த்து பயன்படும். :) #எனது மிகச் சிறந்த கீச்சு இது வரை...

2) வாழ்க்கை ஒரு உருண்ட குழம்பு மாதிரி.. கஷ்டம்ங்கிற உருண்டைய அலேக்கா முழுங்கிட்டு எவர் சிரிக்குறாரோ..அவர் தான் வின்னர்..#தத்து



3) நிமிடங்களில் கிடைத்த காதலை... நிமித்தங்களில் தொலைத்து விடுகிறோம்...

4) எதை தேடுகிறோம் என்று தெரியாத தேடலில் இறங்கியுள்ள மனிதனுக்கு தெரிவதில்லை..தேடலின் அர்த்தம் தான் தேடப்படுகிறது என...


5) சுவர் இல்லாமல் வரையப்பட்ட (வி)சித்திரங்கள்... காதலில் மட்டுமே...


6) வெறுமை எனக் கீச்சும் பொழுதே கீச்சின் வெறுமை போய்விடுகிறது...இது யோசிக்கும் மூளைக்கும் பொருந்தும்.. ஆயினும் வெறுமை!!


7) மாண்பு என்ற சொல்லின் மாண்பே போய்விட்டது.. அரசியல்வாதிகளின் மாண்பு'மிகுதி'யால்...


8) உன் சுவாசக் காற்றை கடன் பெற்றே எத்தனை பிரசவங்கள் நிகழ்ந்துவிட்டன.. #கவிதைகளுக்கு...


9) கற்பனைகள் விசாலமாய் இல்லாமல் போயிருந்தால், 

விலாசமில்லாமல் போயிருப்பான் மனிதன்...

10) மைதா மாவுல சரியான வட்டமா சப்பாத்தி சுட தெரியாத எவனோ கண்டுபிடிச்சதா தான் இருக்கும் இந்த பரோட்டா...#பிஞ்ச மாவுல சுடுற டெக்னிக்..


11) வறண்ட கற்பனைக் குளத்தில் கூட தத்துவ மீன்கள் சாகாமல் தான் இருக்கின்றன.. கொத்திச் செல்ல வார்த்தை கொக்கு இல்லாமல்..


12) உலகத்திலேயே எவ்வளவு தொலைவுல இருந்தாலும் நம்மள பத்திரமா பாத்துக்க அம்மானால தான் முடியும்..யோசனைகள் மூலமும்..#அம்மாடா... :))


13) 50 வருசமா 'பிடித்திருக்கும்' கை, அதன் கணம் குறைந்ததா?கூடியதா? எனக் கூட தெரியவில்லை..அதுவும் எனது அங்கம் ஆகிவிட்டதால்..#முதியவர் மனைவியின் கையை பற்றிக்கொண்டு..


14) ஆப்பாயிலை கையில் வைத்து கொண்டு,எப்படி சாப்பிடுவது என யோச்சிக்காமல், இதை வைச்சி என்ன ட்விட் போடலாம்ன்னு யோசிக்கிறவன்..#சராசரி ட்விப்..


15) இப்ப தான் பாத்தேன்,இந்த மாயனுக்கு 2ஆம் நம்பருக்கு மேல தெரியாது போல..21122012.. #யோவ் நீ எல்கேசி லே அத்தினி சப்செட்டும் பெயிலா?


16) நீ வரும் பொழுதுகளில் எல்லாம், ஏனோ கண்களில் கண்ணீர் மழை... #கொட்டாவி..அவ்வ்வ் :)


17) ஆக்ட் பண்றவன் ஆக்டர்,

 சிங் பண்றவன் சிங்கர், 
குக் பண்றவன் மட்டும் ஏன்யா குக்கர் இல்ல.. #குக்கர் ட்விட்டு

18) படைப்பாளியின் அனைத்து படைப்பும் சிறப்பானது தான், அதை பிறரிடம் பகிரும் வரை..

19) பசியின் முகவரி என்றும் ஏழையின் 'முக'வரியில்...


20) ஆட்டோக்கு தேவை மீட்டர்,

பென்ல சூப்பர் பார்கர்,
குடிமகன் தேவை குவாட்டர்,
டைம்லைன் ஃபுல்லா குக்கர்.. #TR குக்கர் ட்வீட்

No comments:

Post a Comment