Categories

Wednesday 12 December 2012

நான் ரசித்த என் கீச்சுக்கள் பகுதி - 2

1)  உனக்காக மிதிவண்டியை தள்ளி கொண்டு வந்துவிட்டு,
நீயே ஓட்டியதாய் சொல்லி உன் புன்னகையை ரசிப்பவனே... அண்ணன்

2) நிலவில் ஈர்ப்பு சக்தி இல்லையென சொல்வதும் ஒரு முட்டாள்தனம் தான்... இல்லாமலா குழந்தை முதல் மனிதன் அதை ரசிக்கிறான்??

3) அம்மா கவிதை எழுத நினைத்தேன்.. நினைவுக்கு முற்றுப் புள்ளி வைத்தேன்... கவிதை முற்று பெறாதென்பதால்...



4) ஆர்டியானா பாலோ பண்ணவான் ட்விட்டர்,
டிஆர்ன்னா ஓடி போவான் பார்பர்,
குடிகாரன் தேடி போவான் குவாட்ர்,
தமிழகம் தேடி போவது இன்வெர்டர்...

5) வளைகின்ற பாதையாயினும், வலிகின்ற பாதையாயினும்,
சிறு துயர்யின்றி கடக்க ஆசை அனைவருக்கும்,
சிறுவன் போல்...

6) பூக்கின்ற மரங்களுக்கு வளையல் மாட்டி பூக்காது செய்துவிட்டு,
 பூக்கின்ற பெண்கள் பூக்காதிருக்க கடவுளை வேண்டுகிறோம்...

7) மர வளம் மதிக்காத நாட்டில்,
நீர் வளம் தேக்காத நாட்டில்,
காகித கப்பல்களும் தரை தட்டி தான் நிற்கும்...
தமிழ்நாட்டில்...

8) நான் உனக்காய் ஏதும் செய்யாதிருந்தும்,
என்னை உன் உயிர்க் கூட்டினுள் வைத்து,
வான் உலா வருகிறாயே... விமானமே...

9) தயிர்ல போட்ட சுகரும்,
தலைக்கணம் பிடிச்ச பிகரும் ஒன்னு... #இரண்டுமே கரைய லேட் ஆகும்... #தத்து...

10) அனைத்து பொய்யிலும் ஒரு உயிர்மெய்(எழுத்து) உள்ளது,
ஒரு சில பொய்யில் மட்டுமே ஒரு உயர்மை உள்ளது...

11) மெய்க்கும், பொய்க்கும் உள்ளது ஒரே ஒற்றுமை தான்,
அது மெய்(எழுத்து) தான்...

12) மெய்யோ, பொய்யோ உருவாவது,
ஒரு மெய்யில்(உடம்பில்) தான்...

No comments:

Post a Comment