Categories

Saturday 15 December 2012

நான் ரசித்த என் கீச்சுக்கள் பகுதி - 6

1) நன்றியை எதிர்பார்த்து வாங்கிவிட்டு, நன்றி எல்லாம் எதுக்குங்க என நா கூசாமல் சொல்லும்... நன்றி "கெட்ட" காலமிது...

2) கரையை முட்டி மோதும் அலைகள் விடாமுயற்சியை... என் காதலை பார்த்து தான் கற்றுக் கொண்டனவோ...

3) என் தனிமைக்கு வர்ணம் பூசி வானவில்லாய் மாற்றுகின்றன உன் நினைவுகள்...

4) என் காதல் சாஜகான் காதலை விட உயர்ந்தது..அவன் மனைவிக்காக ஒரு தாஜ்மகால் கட்டினான்,நானோ மாசாமாசம் கட்டுகிறேன்..கிரேடிட்டு கார்டு பில்லை...

5) செல்பேசில இணையம் இல்லைனா அது வாழாவெட்டி ஆயிடுது,
செல்பேசி இணையம் இருந்தா நாம வெட்டியா வாழாம இருக்கோம்..

6) இந்தியா என்பது 120 கோடி பேரில் 95 கோடி பேர் செல்பேசி வைத்துக்கொண்டு,50% பேர் சரியான உணவில்லாமல் வாழும் நாடு...

7) இப்பெல்லாம் எல்லா ஜாதகமும் தோஷத்தோட தான் இருக்கு...
ஜாதகம் பாக்குறவர் தோஷம் போறதுக்காகவே... #பணம்

8) விழியில்லாதவங்களுக்கு வழிகாட்ட என் வயசு போதும், அறிவிலியாயிருக்குவங்கள அடிச்ச திருத்தான் வயசில்ல..#சிறுமி

9) உனக்குள் சிக்கி எனை மறக்கவே நினைக்கிறேன்...
ஆயினும் உனை தொலைத்து தவிக்கிறேன்... #தூக்கம்...

10) உறக்கம் இழந்து தவிக்கும் வேளையிலும்
உன் நினைவாகவே இருக்கிறேன்... ட்விட்டர்...த்தூ...

11) மகளுக்காக பிய்த்து போட்ட தோசையிலேயே,
அவள் காலில் ஒட்டிக் கொண்ட தோசை தான்
என் அமுதாகி பிறவா வரம் கொடுத்தது...

12) உன் காதலை உரக்கச் சொல்லென்றேன்,
நீயோ காதிலே உறங்கும் போது சொல்லிச் சென்றாய்...
கனவில்..

13) என் உதட்டு வழி வார்த்தைக்காக, தெரிந்த எனது பெயரை தலையணைக்காக கேட்பதாய் பாசாங்கு செய்யாதே..

14) நினைவுத்திறன் போட்டி வேண்டும்,
நான் தோற்பதில் எனக்கு விருப்பம்,
உனது கள்ள கோபத்திற்காக

15) வருடங்கள் உருண்டு ஓடினாலும் வழுக்கை அப்படியேதான் இருக்கிறது.

16) உன்னோடு சேர்ந்து உன் தோடும் நடக்கும் அழகு கண்டு,
என்னோடு சேர்ந்து என் நிழலும்,நிகழ்வும் சொக்கி விழுகிறது...#மகள்

17) கடலுக்குள்ள போகிறவரை படகுக்கு தேவை நம் பலம்,
கடலுக்குள்ள போனதும் அது தான் நம் பலம், என்றும் நம்பலாம்... #மீனவன்

18) தன்னோட இலக்கும் தெரியாம, இலக்கணமும் தெரியாம
 ஒரு கூட்டம் இருக்குனா அது இன்சினியரிங் படிக்குறவங்க தான்...

19) சிக்கனமாக நீ வைத்த சிக்கன் குழம்பில், சிக்கன் பீஸ் இல்லாததால் சிக்கலில் என் மனம்...#கவுஜ

20) மீசையும் கூட ஒரு அணிகலன் தான் இக்காலத்தில் தேவைக்கேற்ப மட்டும் வளர்த்துக் கொள்வதால்...

4 comments:

  1. முடியல சக்தி... சிரிச்சு சிரிச்சு.. :-)))

    ReplyDelete
    Replies
    1. அவ்வவ்... எனி உள்குத்து இன் திஸ் 'முடியல'?? :-))

      Delete
  2. சிக்கன கவிதையை சிக்னலில் நிக்கும்போது யோசிச்சீங்களோ? சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு எப்படி தெரியும்? கேமரா எதுவும் இருக்குமோ? அவ்வ்வ்.. :-)) நன்றி :)

      Delete