Categories

Saturday 15 December 2012

நான் ரசித்த என் கீச்சுக்கள் பகுதி - 5

1) நிர்கதியாய் இருக்கும் செருப்புக்கு, அடைக்கலம் என்ற சொல்லின் அர்த்தம்
அடுத்தவர் காலால் மிதிபடுவது தான்..

2) மனதில்லுள்ள கெட்டவைகளை மட்டும் அழிக்கும் கருவியாக மறதி இருந்திருக்கலாம்...

3)  ஏதோ உணவை உண்கிறேன் என்பதை தவிர எதுவும் ஞாபகம் இல்லை..அவள் காதல் உணர்வை உண்ட பின்...

4) உன் ஆயிரம் வெள்ளி கம்பிகளால் எனை குத்திச் சிறைபடுத்த சிரிப்புடன் காத்திருக்கிறேன், குடைக் கேடயம் தொலைத்து...#மழை

5) மேகத்துக்குள் சிக்கிக் கொண்டு தன் தங்க கரங்களை நீட்டி உதவி கேட்கும் அபலை கதிரவன்...

6) எப்ப உங்க அப்பாவ ஏடிஎம் மிசின் ஆக்காம, நீ அவருக்கு ஏடிஎம் மிசின் ஆகுறியோ...அன்னைக்கு நீ நல்ல மகன்...#இன்றைய தத்து

7) காகிதப் பூக்களிலும் பால் மணம் வீசும்...
எச்சில் செய்த மழலையின் வரத்தால்...

8) வாழ்க்கை விசித்திரமானது தான்..
எதற்கும் அனுமதி கேட்டே வாழ வேண்டியுள்ளது...
இறப்பை தவிர...

9) வாழ்க்கை ஓர் நாடக மேடை தான்,
இங்கு இயல்பாய் நடிக்க சொரனை தேவையில்லை...

10) வார்த்தைகளும், வடிவங்களும் தொலைத்த கவிதைக்கு...
 'நீ' என்ற ஒற்றை எழுத்து போதும் உயிர்த்தெழ...

11) தனிமை கொண்டு போன தூக்கத்தினை,
வெறுமை கொன்று துக்கமாக்கி கொண்டிருக்கிறது...

12) இப்பொழுதெல்லாம் கவிதைகள் சுகமாய் பிறப்பதில்லை... சசேரியன் செய்தே பிரசவிக்கப்படுகின்றன...

13) இங்குள்ள அனைவருமே சுதந்திரமான 'தலைமறைவு' வாழ்க்கை தான் வாழ்கின்றனர்...

14) தன் சுற்றி பொறுமையாய் பின்னப்படும் சிலந்தி வலைகளை,
ஒரே நேரத்தில் தகர்ப்பவனை ஆத்திரக்காரன் எனப் பெயரிடப்படுகிறான்...

15) முழுவதும் சுதந்திரமாய் வாழ நினைக்கும் ஒருவன்,
முழு பைத்தியமாக தான் பார்க்கப்படுகிறான்...

No comments:

Post a Comment