Categories

Wednesday, 12 December 2012

நான் ரசித்த என் கீச்சுக்கள் பகுதி - 4

1) அம்மாவின் விரல் நுனியில் உள்ள,
அரிவாள்மனை வெட்டிய கோடுகள் சொல்லும்,
நீ உண்ண அவள் எவ்ளோ பாடுபடுகிறாளென...

2) குறுங்குவளை அளவே உணவு இருப்பினும்,
குன்றிய மனதின்றி குன்றாகிய மனதுடன்,
கொடுக்கும் குணம் குழந்தைக்கே வரும்,
குரைக்கும் நாயாயினும்...



3) அழகே அனுஷ்கா
நீ அன்பான அத்திக்கா,
உன் ஆசை அளவு அவரைக்கா,
நீ கோவம் வந்தா கோவக்கா.. #கவுஜ

4) விளக்கு விற்கும் வியாபாரி வீட்டில்
என்றுமே மின்சாரம் என்பது 'விதி' விலக்கு...

5) அனிச்சையாய் சுழலும் உலகில்,
அனிச்சையாய் தான் அலைந்து கொண்டு இருக்கிறேன்..
உணர்வுகளை உறவுகளை மேல் வைத்துவிட்டு...

6) பிரிவை விட கொடூரமான வலியை
எதுவும் கொடுக்க முடியாதென
ஒவ்வொரு பிரிவும் நிரூபிக்கின்றன...

7) கவிதையாய் போட்டு தள்ளுவதாய் நினைத்துக்கொண்டு...
கவிதையை போட்டு தள்ளி கொண்டிருக்கிறேன்...#கவித கவித...அவ்வ்வ்

8) உன்னை தேடாமல் இருப்பதிலும்,
ஒரு தேடல் இருக்கத் தான் செய்கிறது...
நீ தேடி வருவாய் என்ற நம்பிக்கையால்...

9) உன் புரியாத மொழிகளையும் கண்கொட்டாமல் ரசிக்கிறேன்,
தெரியாமல் தவறி விழும் ஒரு துளி புன்னகையை ஏந்த... #மழலை :))

10) உன் விழியில் தொலைத்த என் மனதை,
மதியின்றி நீ போகும் வழியில் தேடிக்கொண்டு இருக்கிறேன்..
உன் மௌன மொழியில் தேடாமல்...

11) தொலைத்த என் நினைவுகளை விட, 
என்னை துளைத்த உன் நினைவுகளே,
அதிக வலிகளை விதைக்கின்றன...

12) ஏழைத் தையல் நம்பிக்கை கண்டு வளர்ந்த வாழைத் தாரும், 
வானலாவிய தேருக்கு முட்டுக்கட்டையாம்....  

13) பஞ்சம் கொண்ட நெஞ்சம் தன்னில், 
வஞ்சம் கொஞ்சம் தஞ்சம், 
நஞ்சும் மஞ்சம் கொள்ளும், 
பழகுவோர் மனதும் அஞ்சும்...

14) உன் பகிராத கஷ்டங்கள்,
பகிரங்கமாய் என்னை தாக்கிறது, 
அந்நியமாய் எண்ணிக்கொண்டு சொல்லாத பொழுது...

15) நாம் இன்னும் குழந்தை அல்ல 
எனப் புரிய வைக்க சில குழந்தைத்தனமான முயற்சிகள் தேவைபடுகின்றன... :)

No comments:

Post a Comment