Categories

Wednesday, 26 December 2012

நான் ரசித்த எனது கீச்சுக்கள் பகுதி - 7


1) பறவை கூண்டு வாங்கி அடைக்காதீங்க,அதுங்க நல்லாவே கூடு கட்டும்.அந்த காசுல ஒரு மரம் நடுங்க அதுகளுக்கும் சேர்த்து பயன்படும். :) #எனது மிகச் சிறந்த கீச்சு இது வரை...

2) வாழ்க்கை ஒரு உருண்ட குழம்பு மாதிரி.. கஷ்டம்ங்கிற உருண்டைய அலேக்கா முழுங்கிட்டு எவர் சிரிக்குறாரோ..அவர் தான் வின்னர்..#தத்து



Saturday, 15 December 2012

நான் ரசித்த என் கீச்சுக்கள் பகுதி - 6

1) நன்றியை எதிர்பார்த்து வாங்கிவிட்டு, நன்றி எல்லாம் எதுக்குங்க என நா கூசாமல் சொல்லும்... நன்றி "கெட்ட" காலமிது...

2) கரையை முட்டி மோதும் அலைகள் விடாமுயற்சியை... என் காதலை பார்த்து தான் கற்றுக் கொண்டனவோ...

3) என் தனிமைக்கு வர்ணம் பூசி வானவில்லாய் மாற்றுகின்றன உன் நினைவுகள்...

நான் ரசித்த என் கீச்சுக்கள் பகுதி - 5

1) நிர்கதியாய் இருக்கும் செருப்புக்கு, அடைக்கலம் என்ற சொல்லின் அர்த்தம்
அடுத்தவர் காலால் மிதிபடுவது தான்..

2) மனதில்லுள்ள கெட்டவைகளை மட்டும் அழிக்கும் கருவியாக மறதி இருந்திருக்கலாம்...

Wednesday, 12 December 2012

நான் ரசித்த என் கீச்சுக்கள் பகுதி - 4

1) அம்மாவின் விரல் நுனியில் உள்ள,
அரிவாள்மனை வெட்டிய கோடுகள் சொல்லும்,
நீ உண்ண அவள் எவ்ளோ பாடுபடுகிறாளென...

2) குறுங்குவளை அளவே உணவு இருப்பினும்,
குன்றிய மனதின்றி குன்றாகிய மனதுடன்,
கொடுக்கும் குணம் குழந்தைக்கே வரும்,
குரைக்கும் நாயாயினும்...

நான் ரசித்த என் கீச்சுக்கள் பகுதி - 3

1) பொய்யில் கூட ஒரு மெய்(எழுத்து) உள்ளது...

2) நீ விலகி போவதால் என்றுமே வருத்தப்பட்டதில்லை...
 நீ என் நெஞ்சில் விலகாமல் இருப்பதால்...

3) உலகில் ஒன்றாய் என்னை பார்க்கிறாய் நீ...
 என் உலகே ஒன்றானதாய் உன்னை பார்க்கிறேன் நான்...


நான் ரசித்த என் கீச்சுக்கள் பகுதி - 2

1)  உனக்காக மிதிவண்டியை தள்ளி கொண்டு வந்துவிட்டு,
நீயே ஓட்டியதாய் சொல்லி உன் புன்னகையை ரசிப்பவனே... அண்ணன்

2) நிலவில் ஈர்ப்பு சக்தி இல்லையென சொல்வதும் ஒரு முட்டாள்தனம் தான்... இல்லாமலா குழந்தை முதல் மனிதன் அதை ரசிக்கிறான்??

3) அம்மா கவிதை எழுத நினைத்தேன்.. நினைவுக்கு முற்றுப் புள்ளி வைத்தேன்... கவிதை முற்று பெறாதென்பதால்...

நான் ரசித்த என் கீச்சுக்கள் - பகுதி 1


1) விதைக்க விழையாத விவசாயி,
விளையாத விதைநெல்லை விற்று,
 புசிப்பதற்கு பெயர்.. #கிரேடிட் கார்ட்

2) பிரம்மச்சாரியின் அறையில் உள்ள போர்வை சொல்லும் சோம்பேறிதனத்தின் உச்சம் என்னவென்பதை...

3) மழைக்கும், கவிதைக்கும் என்ன சம்பந்தம் என யோசித்தேன்...
உனை கண்ட பின்பு கவிதையே மழையாய் கொட்டிட கண்டேன்...